24 تغريدة 2 قراءة Mar 03, 2024
வணக்கம் தோழர்களே கொஞ்சம் பெரிய பதிவுதான் ஆனா தயவு செய்து படிங்க
தமிழ்நாட்டின் அரசியல் என்பது வேறு தமிழ்நாடு தவிர்த்த மாநிலங்களின் அரசியல் என்பது வேறு
பொய்யை மட்டுமே பிரதானமாக கொண்ட கட்சிகள் தமிழ்நாட்டின் அரசியலை கேலிக்கூத்தாக்குகின்றன குறிப்பாக அண்ணாமலை போன்ற அரை குறைகள்
தமிழ்நாட்டு அரசியலை வேறு பக்கமாக திசை திருப்பும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் அதை உண்மை என்று நம்பும் மக்களுக்கு ஒரு அறிவுறுத்தல் இன்று மோடி அவர்களை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கும் அண்ணாமலை அதே மோடி அவர்கள் குஜராத்தில் அம்பானி குடும்பத்திற்காக உள்நாட்டு விமான நிலையத்தை
சர்வதேச விமான நிலையமாக மாற்றி கொடுத்திருக்கிறார்கள் ஆனால் இதே மோடி அரசு கொரோனா காலத்தில் இங்கிருக்கும் சாமானியர்களை நடக்க வைத்தே சாகடித்தது அவர்களுக்காக ஒரு பேருந்து வசதியையோ எந்தவித போக்குவரத்து வசதிகளையோ ஏற்படுத்தாத சர்வாதிகார அரசு பொது மக்களை எவ்வாறு வஞ்சித்தது என்று நாம்
பார்த்துக் கொண்டுதான் இருந்தோம் இதற்கு பதில் சொல்ல இந்த அண்ணாமலைக்கு தகுதி இருக்கிறதா? இந்த அண்ணாமலை சாமானியர்களுக்காக அரசியல் பேசும் நபரா? மோடி என்ன இந்த நாட்டின் முடி சூடா மன்னனா? இங்கே ஆட்சி செய்வது அரசியலமைப்பு சட்டம் தான் அந்த சட்டமும் இல்லாவிட்டால் இவர்கள் மக்களை எவ்வாறு
நடத்துவார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான் இவர்கள் பின்னால் செல்லும் செம்மறி ஆட்டு கூட்டங்களே!! சுயநலத்திற்காக உங்கள் கால்களை வெட்டி நீங்களே அவித்து உண்ணுவீர்களா? அப்படி செய்ய மாட்டீர்கள் எனில் இப்பொழுது நீங்கள் இந்த மதவாத கட்சி பின்னாடி செல்வது அதற்கு ஒப்பான செயல் தான்
சக மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக் கொடுக்காத கட்சிக்கு பின்னாடி செல்லும் நீங்கள் இந்த சமூகத்தின் புற்றுநோய் செல்கள் உங்களை வளர விடுவது ஆபத்தானது உங்களுக்கு தேவையான மருத்துவம் செய்து ஆக வேண்டும் உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் மனிதாபிமானம் என்பதே சிறிதும் இல்லாத ஒரு கட்சி
எதற்காக தமிழ்நாட்டில் வளர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அவர்கள் உங்கள் கல்வியை உங்கள் பொருளாதார வளர்ச்சியை உங்கள் சுகாதாரத்தை தனிமனித சுதந்திரத்தை எதையாவது முன் வைத்து அரசியல் பேசுகிறார்களா பிறகு எதற்காக அவர்கள் பின்னால் செல்கிறீர்கள்
அதிகப்படியான குற்றச்செயல்களுக்கு பேர்போன நபர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பதன் மூலம் அவர்கள் யார் என்பது உங்களுக்கு வெளிப்படையாக தெரியவில்லையா? உங்களுக்கு அதனால் என்ன கிடைத்துவிடப் போகிறது ஒருவேளை நீங்கள் வழிபடும் கடவுளுக்காக மட்டும்தான் அந்த கட்சி உங்களுக்கு தேவைப்படுகிறது என்றால்
சற்று சிந்தியுங்கள் அவர்களுக்கு உங்கள் குலதெய்வம் எதுவென்றாவது தெரியுமா அதை அவர்கள் காப்பாற்ற போகிறார்களா? நீங்கள் சாதாரணமாக ஒரு ஜோதிடர் இடம் சென்றால் கூட அவர் உங்களுக்கு முதலில் கூறும் அறிவுரையாக குலதெய்வம் கோயில் சென்று வழிபடுங்கள் என்பது தான் கடவுள் பக்தி இருக்கும் நீங்கள்
உங்கள் கடவுளுக்காகத்தான் அந்த கட்சியை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால் உங்கள் கடவுள் யார் என்று அவர்களுக்கு தெரியாது என்பதுதான் உண்மை உங்களுக்கு ஒரு கலாச்சாரம் இருக்கிறது அதை அவர்கள் காப்பாற்றுவார்கள் என்றால் இங்கே ஆபாச படம் எடுத்து பரப்புபவர்களிடம் கலாச்சாரத்தை எப்படி
எதிர்பார்ப்பீர்கள் அதற்கு ஏதேனும் சாத்திய கூறுகள் உண்டா சரி கடவுளை விடுங்கள் மதத்தை விடுங்கள் சராசரி மானுட தன்மையோடு நடந்து கொள்ளும் எண்ணம் அவர்களிடம் சிறிதேனும் உண்டா? விவசாயிகள் போராட்டத்தில் இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதானே
இருக்கிறீர்கள் விவசாய போராட்டம் என்றால் அது பஞ்சாப் தானே பெண்கள் பாலியல் வல்லுறவால் கொல்லப்பட்டால் அது மணிப்பூர் தானே மதத்தின் பெயரை சொல்லி ஒரு பெண்ணை கொடுமைக்கு உள்ளாக்கினால் அது பில்கிஸ் பானு தானே என்று நினைத்தீர்கள் ஆனால் இதைவிட முட்டாள் தனம் ஏதாவது உண்டா பக்கத்து வீட்டில்
நாம் எச்சரிக்கை அடைய வேண்டும் அதை விட்டு பக்கத்து வீட்டுக்காரன் ஒழிந்தான் என்று சந்தோஷப்பட கூடாது ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாத கொடூர சர்வாதிகாரிகளுக்கு எதிராக மாற வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் அது உங்களுக்காக கிடையாது நாளை வரப்போகும் உங்கள்
உங்கள் சந்ததிகளுக்காக நீங்கள் இங்கே உட்கார்ந்து கொண்டு சொகுசு வாழ்க்கை அனுபவித்துக் கொண்டு தமிழ்நாடு முன்னேறாத மாநிலம் என்று கூறுவீர்கள் எனில் ஒருமுறை வட இந்தியா வரை சுற்றுலா சென்று விட்டு வாருங்கள் வந்த பிறகு தமிழ்நாட்டின் அரசியல் சரியில்லை இதைவிட முற்றிலும் வளர்ச்சி அடைந்த
மாநிலங்கள் இருக்கிறது அதை 20 வருடங்களுக்கு மேலாக பாஜக தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்று கூறி ஒரு மாநிலத்தை உதாரணமாக காட்டுங்கள் அப்படி காட்டுவீர்கள் ஆனால் மறுநாளே நாம் பாஜகவை ஆதரிக்க தொடங்கலாம் பாஜக என்பது ஒரு கட்சியும் அல்ல அது இங்கிருக்கும் மக்களுக்கானதும் அல்ல
அது ஒரு கருத்தியல் அந்த கருத்தியல் சார்ந்து நீங்கள் ஆதரிப்பீர்கள் எனில் பிறப்பிலேயே மனிதன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எனும் கேடுகெட்ட சித்தாந்தத்தை கொண்ட நீங்கள் ஏற்றுக் கொள்வதாகவே அர்த்தம் ஒருவேளை நீங்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் உங்களிடம் ஒரு கேள்வி ஒரு மனிதன் ஏன் பிறப்பிலேயே
உயர்ந்தவராகவும் தாழ்ந்தவராகவும் இருக்க வேண்டும் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய பாஜகவுக்கு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன திருவள்ளுவரும் திருக்குறளும் தான் தேவைப்படுகிறது அப்படி இருக்க நீங்கள் எதற்காக மனுவை தூக்கி உங்கள் தலையில் சுமக்க விரும்புகிறீர்கள்
இதே பாஜக தமிழ்நாட்டில் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் சித்தாந்தமான இந்து துவாவை தமிழ்நாட்டில் மனுவின் பெயரை சொல்லி அரசியல் செய்துவிட முடியுமா மேம்பட்ட பண்பாட்டை உடைய தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் இதுபோன்ற உயர்ந்த சிந்தையில் வளர்ந்த
மக்கள் எதற்காக பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் கேடுகெட்ட சித்தாந்தத்தை ஏற்க வேண்டும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரசனுக்கு அறிவுரை வழங்கும் பெண்பாற் புலவர்களை கொண்ட தமிழ்நாட்டில் இருந்து கொண்டு பெண்ணை மிகவும் இழிவாக நடக்கும் சித்தாந்தத்தை ஏன் ஏற்க வேண்டும்
சற்று சிந்தியுங்கள் தேவையற்ற விஷ செடிகளை தமிழ்நாட்டில் ஊடுருவ அனுமதிக்காதீர்கள் சிந்தித்து வாக்களியுங்கள் உங்கள் வாக்குக்கு இதற்கு முன்பு மதிப்பு இருந்ததா எனக்கு தெரியாது ஆனால் இப்பொழுது நீங்கள் செலுத்தும் வாக்கு உங்கள் தலையெழுத்தை நிர்ணயிக்கும் வாக்காக மாறும்
சிந்தித்து செயல்படுங்கள் மற்றவர்களுக்காக அல்ல நாளை உங்கள் சந்ததிகளுக்காக அவர்களின் எதிர்காலத்திற்காக சாதனைகளை மேற்கோள்காட்டி வாக்கு கேட்ட காலம் போய் அவதூறு பரப்பி அடுத்தவனை அசிங்கப்படுத்தும் அரசியலை நோக்கி தயவுசெய்து நகராதீர்கள் நாமெல்லாம் நாகரிக மனிதர்கள் என்று நம்புகிறேன் நன்றி
*தீ பிடித்தால்

جاري تحميل الاقتراحات...