குறள் நெறி
குறள் நெறி

@arakkarperiyar

19 تغريدة 11 قراءة Sep 02, 2023
உழைக்க ஓர் இனம்;
உண்டு கொழுக்க ஓர் இனம்.
என சமீபத்தில் முதலமைச்சர் கூட சொல்லிக் கேள்விப் பட்டிருப்போம்.
எப்படி உண்டு கொழுக்க ஒரு இனம் இருக்கும்?னு நினைக்கும் அன்பர்களுக்கு இப்பதிவு.
1/N
பார்ப்பான்களுக்கு தானங்களில் தரப்படும் பொருட்களை பார்த்தாலே அரசனும் நிலச்சுவாந்தர்களும் பெரும்பணக்காரன்களும் தான் கொடுத்திருக்க முடியும்னு புரியும்
அந்த முட்டாள் மன்னர்களும் நிலவுடைமை மயிராண்டிகளும்
பணக்கார பன்னாடைகளுமே பார்ப்பனீயபீடை இம்மண்ணில் கெட்டித்தட்டிப்போகக் காரணம்.
2/N
பார்ப்பனர்களுக்கு தரப்படும் தானங்கள் 32 வகையாம்.
1. இரண்யகர்ப்ப தானம்
2. இரண்யாச்வ தானம்
3. இரண்யாச்வரத தானம்
4. உபயகோமுகி தானம்
5. கனக கல்பலதிகா தானம்
6. கனக காமதேனு தானம்
7. கல்பவிருக்ஷ தானம்
8. கார்ப்பாஸதானம்
9. கிருதபர்வத தானம்
10. கிருஷ்ணாஜின தானம்
11. குடதேனு தானம்
3/N
12. குடபர்வத தானம்
13. கோசகஸ்திர தானம்
14. சர்க்காரபர்வத தானம்
15. சப்த்சாகாத் தானம்
16. சுவர்ணபர்வத தானம்
17. சையாதானம்
18. தரா தானம்
19. தான்யபர்வத தானம்
20. திக்பாலக தானம்
21. திலபர்வத தானம்
22.துலாபுருஷ தானம்
23.பஞ்சலாங்கல தானம்
24. பிரமாண்ட தானம்
25. மகாபூதகட தானம்
4/N
26. ரத்னதேனு தானம்
27. ரத்னபர்வத தானம்
28. ரௌப்பியபர்வத தானம்
30. லவண பர்வத தானம்
31. விச்வசக்ர தானம்
32. ஹேமஹஸ்திரத தானம்.
அவைகளில் முதல் 12 பற்றிய பதிவுகள் இங்கே..👇
தானம் 1: இரண்யகர்ப்ப தானம்: பொன்னால் 72 அங்குலம் உயரமும் அதில் மூன்றம்சம் அகலமும் உள்ள தாமரைபோன்ற
5/N
கும்பம் செய்வித்து அதில் தயிர், நெல்,பால் முதலிய நிறைத்து வேதிகை செய்வித்து அதின்மேல் இரண்டு மரக்கால் எள்ளைப் பரப்பி அதன்மீது கும்பத்தை நிறுத்தித் தான கற்பவிதிப்படி பூசித்து, தானம் தருபவர் அந்த இரண்ய கும்பத்தில் ஒரு விஸ்வாசகாலம் இருத்தல் வேண்டும். பின் அதை விட்டு வெளிவந்து
6/N
அந்தக் கலசத்துடன் அனைத்துப் பொருட்களையும் பார்ப்பானுக்கு தானஞ் செய்ய வேண்டும். அவ்வகை செய்தவன் 100 கோடி கல்பம் பிரம்மலோகத்தில் வசிக்கவும் அவனுடைய முன்னோர்களை நரகத்திலிருந்து மீட்டெடுப்பானாம் அந்த பார்ப்பன புரோகிதன்.
7/N
தானம் 2: இரண்யாச்வ தானம்:
3 முதல் - 1000 கிலோ எடையுள்ள பொன்னால் குதிரை ஒன்று செய்வித்து, நான்கு தங்க கலசங்களையும் வேதிகையில் தாபித்து விதிப்படி பூசித்து பார்ப்பான்களுக்கு தானம் தரனுமாம். இப்படிச் செய்தவன் தேவர்களால் பூசிக்கப்பட்டு இந்திரபதம் அடைவானாம்.
8/N
தானம் 3 - இரண்யாச்வரத தானம்:
3 முதல் 1,000கிலோ எடையுள்ள பொன்னால் ரதம் செய்வித்து அதில் தன் இஷ்டதேவதையைப் பொன்னால் செய்வித்து நிறுத்தி அத்தேருக்கு 8 அல்லது 4 பொன் குதிரைகள் பூட்டி ஆடைகளால் அலங்கரித்து விதிப்படி பூசித்து பார்ப்பானுக்கு தானஞ் செய்வதாம். இவ்வகை தானஞ்செய்தவன்
9/N
பாபம் நீங்கித் தேசோசரீரனாய்ச் சிவபதமடைவனாம்.
தானம் 4 - உபயகோமுகி தானம்: பசுவின் பிரசவகாலத்தில், பசுங்கன்றின் பாதி உடல் தாயின் வயிற்றிலும் மற்றப்பாதி உடல் வெளியிலும் இருக்கக்கண்டு பசுவினைப் பொன், வெள்ளி, முத்து முதலானவைகளால் அலங்கரித்து பணத் தட்சணையுடன் பார்ப்பானுக்குத்
10/N
தானம் செய்வதாம். இவ்வகைத் தானம் செய்தவன் இவ்வுலக வாழ்வில் பலனடைவதோடு பிதுருக்களையும் திருப்தி செய்தவனாகிறானாம்.
தானம் 5 -கனக கல்பலதிகா தானம்:
5 ~ 1,000 கிலோ எடையுள்ள பொன்னால் நீர்க் காக்கை, அன்னம் முதலிய பறவைகள் மற்றும் 10 கல்பகக் கொடிகளைச் செய்வித்து விதிப்படி பூசித்து
11/N
பார்ப்பானுக்கு தானம் செய்யனுமாம்.
இவ்வகை தானம் செய்தவன் சத்திய உலகம் அடைவானாம்.
தானம் 6 - கனக காமதேனு தானம்:
1,000, 500, 250 கிலோ எடையுள்ள பொன்னால் கன்றோடு கூடிய பசு செய்வித்து விதிப்படி பூசித்து பார்ப்பான்களுக்கு தானம் செய்வதாம். இவ்வகைத் தானம் செய்தவன் தேவர்களால்
12/N
பூசிக்கப்பட்டுச் சிவபதம் பெறுவனாம்.
தானம் 7 - கல்பவிருக்ஷ தானம்:
3 ~ 1000 கிலோ எடையுள்ள பொன்ணனால் திரிமூர்த்தி பிரதிமைகளுடன், 5 கிளைகளோடு நான்குவித பறவைகள், பழங்கள் முதலியவற்றுடன் கற்பகத்தரு செய்வித்துக் கிழக்கில் சகளத்திர காமதேவயுக்தமான சந்தானவிருக்ஷத்தையும், தெற்கில்
13/N
லக்ஷ்மியோடுகூடிய மந்தாரவிருக்ஷத்தையும், மேற்கில் சாவித்திரியோடு கூடிய பாரிசாத விருக்ஷத்தையும், வடக்கில் சுரபியோடு கூடிய ஹரிச்சந்தனவிருக்ஷத்தையும் நிருமித்து பார்ப்பான்களுக்கு தானம் செய்யனுமாம்.
இவ்வகைச் செய்தவன் சித்த, சாரண,கின்னா, அப்சரசுக்களால் சேவிக்கப்பட்டுச் சூரியவருண
14/N
விமானத்தில் ஏறி 100 கல்பம் விஷ்ணு காலடியில் இருப்பானாம்.
தானம் 8 - கார்ப்பாஸதானம்:
5~20 பாரம் நிறையுள்ள பருத்தியைப் பார்ப்பான்களுக்குத் தானம் செய்வதாம். இதைச் செய்தவன் உருத்திரலோகம் அடைவன்.
15/N
தானம் 9 - கிருதபர்வத தானம்:
5 கும்பம் நெய் முதல் 20 கும்பம் நெய்யைப் பார்ப்பனர்களுக்குத் தானம் செய்வதாம். இப்படிச் செய்தவன் சிவபதம் பெறுவன்.
தானம் 10 - கிருஷ்ணாஜின தானம்: மாசி, ஆடி, கார்த்திகை மாதங்களிலும், பௌர்ணமி சந்திர-சூர்ய கிரகணம், உத்தராயண துவாதசி புண்ணிய காலங்களில்
16/N
பார்ப்பான்களுக்கு கிருஷ்ணாஜினம் (மான்தோல்) தானம் செய்வதாம். இவ்வகைப் புரிந்தவன் சிவசாயுச்யம் அடைவன்.
தானம் 11 - குடதேனு தானம்: நாலுபாரம் முதல் கூடியவரையில் பெல்லத்தால் பசுவும் கன்றும் செய்வித்து ஆபரணங்களால் அலங்கரித்து விதிப்படி பூசித்துத் தானம் செய்வதாம்.
17/N
இவ்விதம், வெண்ணெய், எள், தான்யம்,சர்க்கரை, உப்பு, ரத்னம் பொன் முதலியவற்றாலும் செய்வித்து பார்ப்பான்களுக்கு தானம் செய்யின் நெடுநாள் அரசனிடத்தில் சகல சௌபாக்கியங்களை அபவித்துப் பின் விஷ்ணுபதம் அடைவன்.
18/19
தானம் 12 குடபர்வத தானம்:
3~10 பாரம்வரையில் பெல்லத்தால் பர்வதம் செய்வித்து விதிப்படி தானம் செய்வது. இவ்வகை செய்தவனுக்குப் பசுபதி சாந்நித்யமாவர்.
மீதியை இதோடு இணைத்துள்ள Sourceல பார்க்கலாம்.
🎯பார்ப்பான் என்கிற சிறு கூட்டம் சொகுசாக வாழத்தான் இந்துமதமா? நாமெல்லாம் அடிமையா?
19/19

جاري تحميل الاقتراحات...