9 تغريدة 4 قراءة Aug 04, 2023
சென்ற மாதம் வட மாநிலங்களில் இருந்து வந்த பேராசிரியர்களுடன் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பு. சில கல்லூரிகளுக்கு மதிப்பீட்டுக் குழுவுடன் செல்ல வேண்டியிருந்தது. அங்கே ஆவணங்களை பரிசோதிக்கும் போது, எல்லோரும் அடையும் அதிர்ச்சி நமது தமிழ்நாட்டின் ரிசர்வேஷன் பாலிசி. அவர்கள் இன்னும் ஓபிசி
27 சதவிகிதம், பட்டியலின வகுப்பினர் சேர்த்து 19 சதவிகிதம் என்ற நிலைப்பாட்டிலேயே இங்கே 69 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதன் பிறகும் மீதமுள்ள 31% பொது ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட,மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இருப்பதையும்
அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தமிழ்நாட்டில் எந்த உயர் கல்வி நிறுவனத்திற்கு சென்றாலும் அங்கே பொது ஒதுக்கீட்டில், எல்லா தரப்பு மக்களும் மதிப்பெண் பெற்று உள்ளே வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் விளக்கும்போது, இங்கே முற்பட்ட வகுப்பினர் என்று தாமே சொல்லிக் கொள்பவர்கள்
சதவிகிதம் மிகக் குறைவான ஒன்றுதான். எனவே அந்த பொது ஒதுக்கீடு 31 சதவிகிதத்தில் அவர்களின் பங்கு குறைவாகத்தான் இருக்கும். பல கல்வி நிறுவனங்களில் பிற்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் முதல் பல இடங்களை பிடித்துக் கொள்வார்கள் என விளக்கம் கொடுத்த
போது அவர்களுக்கு சற்று அதிர்ச்சி. வடமாநிலத்தில் நன்கு படித்து பெரிய பதவியில் இருப்பவர்கள் கூட, முற்பட்ட வகுப்பினர்தான் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவார்கள் என்ற தவறான கொள்கையை வைத்திருக்கிறார்கள். இந்திய அரசு இன்னொரு புள்ளி விவரம் எடுத்திருக்கலாம். ஒரு மாநிலத்தில் உள்ள
பிற்படுத்தப்பட்ட,மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இளைஞர்களில் சதவிகிதம் பேர் உயர்கல்வி வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்று. அதில் நிச்சயம் தென் மாநிலங்கள் கொடிகட்டி பறக்கும். முக்கியமாக தமிழ்நாடு முன்னணியில் இருக்கும். முதல் தலைமுறை பட்டதாரி உதவித் தொகையும்
அந்தக் குழுவினருக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை தந்தது. பெண்கள் முன்னேற்றத்திற்கு இங்கே தரப்படும் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு பெரும் கோபம். அதில் ஒருவர் நேரடியாகவே சொன்னார், கர்நாடகாவில் நாங்கள் தான் வென்றிருக்க வேண்டியது. ஐந்து திட்டங்கள் என்று சொல்லி (குடும்பத் தலைவிகளுக்கு
உதவித்தொகை, 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு பஸ் பயணம் இலவசம் போன்ற திராவிட மாடல் திட்டங்கள்) வாக்குகளை வாங்கி திசை திருப்பி விட்டார்கள் என்று கோபமே பட்டார். அவர்களுடன் பணியாற்றியதில் நான் அறிந்து கொண்டது, மனு தர்ம சிஸ்டம்‌ நான் இந்தியாவிற்கு ஏற்றது. அதை மாற்ற
முயற்சிக்கக் கூடாது என்று. யோசித்துப் பார்த்தால் தமிழ்நாட்டிலும் கூட ஆண்ட சாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள், கிட்டத்தட்ட இதே மனநிலையில் தான் இருக்கிறார்கள். எல்லோரும் வசதியாகிவிட்டால் அப்புறம் நமக்கு என்ன மரியாதை என்ற தொனி தான்.

جاري تحميل الاقتراحات...