𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

4 تغريدة Mar 11, 2023
வாத்தி
படம் நல்லா இருக்கும் என்று நினைத்து போனது ஆனால் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை. ரொம்பவே அரதப்பழசான கதை அதைவிட பழசான மேக்கிங். 20 வருஷத்துக்கு முன்னாடியே வந்திருக்க வேண்டிய கதை. அப்ப கூட ஓடி இருக்குமான்னு தெரியல இந்த மாதிரி நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடக்காத ஏன் ஆந்திரா
தெலுங்கானாவில் கூட நடக்காத, ஆடியன்ஸ் ஓட கனெக்ட் ஆகாத, லாஜிக் இல்லாத கதைக்களம். லொகேஷன், செட்டு உள்பட தெலுங்கு வாசம் இல்லை தெலுங்கு நெடி அதிகம். தனுஷ் சமுத்திரக்கனி ஆடுகளம் நரேன் தவிர படத்தில் தோன்றும் ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் எல்லோருமே தெலுங்கு ஆட்கள்தான் தான். ரஜினியின் ரியல் லைஃப்
மேனரிசத்தை தனுஷ் ரீல் லைஃப்பில் பிரதிபலிப்பது அப்பட்டமாக தெரிகிறது. படத்தில் முதல் சண்டை காட்சி மற்றும் சில வசனங்கள் நன்றாகவே இருந்தது. முதல் பாதியில் பூமர், கிரிஞ்ச் காட்சிகள் நிறைய என்றால் இரண்டாம் பாதியில் சூப்பர் கிரிஞ்ச் காட்சிகள் நிறைய முக்கியமாக, அடிபம்பில் தண்ணீர்
வரும் காட்சி, பல கெட்டப்புகள் போட்டு பாடம் எடுப்பது, கிளைமாக்ஸ் மாட்டுவண்டி என்று சொல்லி கொண்டே போகலாம். ஹீரோ இவ்வளவு கஷ்டப்பட்டு செய்த பலனை வில்லன் பெயர் எடுத்துக் கொண்டு போவது சினிமா விதிகளுக்கு முரணானது. தனுஷ் ரசிகர்கள் கொண்டாட வேண்டிய படமா என்றால் அதற்கு படத்தில் பதில் இல்லை

جاري تحميل الاقتراحات...