அறிவோம்கடை
அறிவோம்கடை

@arivomkadaioffi

11 تغريدة 2 قراءة Dec 23, 2024
Arivom Dubai - Day 2:
என்னுடைய துபாய் பயணம் Day 1 பற்றி எழுதிய பதிவு நிறைய பேர் Bookmark செஞ்சு வெச்சிருக்கீங்க. இன்னும் அதை படிக்காதவங்க, அதை படித்துவிட்டு இதை தொடருங்கள். இந்த பதிவையும் மறக்காமல் bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
நாங்க Trip plan செய்யும் போதே. பெரியவர்களுக்கு தனி schedule, குழந்தைகளுக்கு தனி schedule... common ஆக எல்லாரும் போகும் இடத்திற்கு தனி schedule னு தெளிவா பிரித்து கொண்டோம். காரணம் - தேவை இல்லாமல் பணத்தையும் நேரத்தையும் வீண் அடிக்க கூடாது என்று தான். உதாரணத்துக்கு , வயதானவர்களால் இந்த Desert safari செய்ய இயலாது. கூடவே ATV rides, Camel ride எல்லாம் போக மாட்டாங்க.. அதனால் அவ்வளவு தூரம் travel செஞ்சு கூட்டிட்டு போவது not advisable. நீங்க போவதாக இருந்தாலும், இதே அட்வைஸ் தான். வயதானவர்களை கூட்டி சென்று அவதி பட வேண்டாம்.
இரண்டாம் நாள், மாலை தான் நாங்க Desert Safari போகனும் என்பதால்.. ஒரு batch காலை தங்கம் வாங்க போயிட்டோம், இன்னொரு batch Dolphinarium போயிட்டாங்க. முதலில் இந்த தங்கம் வாங்குவது பற்றி எழுதிடறேன். ஏன் என்றால் நான் துபாய் ல இருக்கும் போதே நிறைய பேர் சீக்கிரம் பகிருங்கள் னு கேட்டு இருந்தீங்க.
Location : Gold Souk
துபாய் ல தங்கம் வாங்குவதால் என்ன லாபம்?
முதலில் இதை புரிந்து கொண்டாலே துபாய் போனால் தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்று நீங்க முடிவு செஞ்சுக்கலாம்.
1. Tax Benefits:
நீங்க வாங்கும் தங்கத்தின் VAT திரும்ப பெற்று கொள்ளலாம் (At Airport VAT REFUND COUNTER). அதனால் எந்த காரணத்துக்காகவும் Bill இல்லாமல் தங்கம் வாங்க வேண்டாம்.
One of the primary advantages of buying gold in Dubai is the absence of Value Added Tax (VAT) on gold transactions. While tourists can get a VAT refund in Dubai, in India, gold purchases are subject to a Goods and Services Tax (GST), which is currently at 3% for gold.
2. Lower Gold Prices:
இது எல்லா கடைகளுக்கும் , எல்லா நகைகளுக்கும் பொருத்துமா என்று கேட்டால்? இல்லை என்பது தான் பதில். ஆனா பொதுவான கருத்து என்னனா ? இந்தியாவின் விலையை விட துபாயில் தங்கத்தின் விலை குறைவு என்பது தான்.
3. No Making Charges or Less Making Charges:
இது தான் மிக முக்கிய காரணம் என்று நான் சொல்லுவேன். எல்லா கடைகளிலும் "No Making Charges For Selective Designs" னு போட்டு வெச்சிருப்பாங்க. அதாவது எல்லா நகைகளுக்கும் பொருந்தாது.. ஒரு சில collections க்கு மட்டும் கொடுத்து இருப்பாங்க. ஒரு சில கடைகளில் மட்டும் எந்த நகை வாங்கினாலும் No Making Charges. அப்படிப்பட்ட ஒரு கடை தான் "ANWAR LUXURY" இந்த கடை திறப்பதற்கு முன்னையே கூட்டமா மக்கள் queue ல நிற்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த கடையில் நாங்களும் தங்கம் வாங்கினோம்.. ஆனா இங்க இருக்கும் collections எல்லாம் அவ்ளோ நல்லா இல்லை.. விலை குறைவாக, Making charges இல்லாமல் கிடைத்தது என்று மட்டும் வாங்கிட்டோம்.
இது இல்லாமல் நிறைய Reputed Gold Shops இருக்கு. Thangals , Joyalukkas, Damas, and Malabar Gold & Diamonds னு நிறைய நல்ல கடைகள் இருக்கு. இங்க collections எல்லாம் ரொம்ப நல்லா இருந்திச்சு. ஆனா நீங்க மறக்காமல் செய்ய வேண்டியது "Bargaining to reduce wastage Charges"கண்டிப்பா செய்வாங்க.
Thangals Jewellery, Gold Souk Deira
Google Map : g.co
நாங்க Thangals ல தான் எல்லா நகைகளையும் வாங்கினோம். Collections ரொம்ப நல்லா இருந்திச்சு. இவங்களுக்கு நிறைய branch இருக்கு. அதனால் ஒரு கடையில் பிடிக்கவில்லை என்றால் மற்ற கடைக்கு இவர்களே கூட்டிட்டு போறாங்க. முடிந்த அளவு நேரத்துலையே போயிடுங்க.. கூட்டம் அதிகம் ஆக ஆக உங்களுக்கு எடுத்து காட்ட கொஞ்சம் நேரம் எடுத்துக்குவாங்க. அதனால் தான்.
Do's and Dont's
நான் முன்னையே சொன்ன மாதிரி எந்த காரணத்துக்காகவும் bill இல்லாமல் தங்கம் வாங்க வேண்டாம். இதற்கு உங்க Passport copy இருந்தால் போதும்.
Customs Duty: When bringing gold from Dubai back to India, tourists must adhere to customs regulations. Indian male passengers can carry up to 20 grams of gold jewelry (not exceeding Rs 50,000) duty-free, while female passengers are allowed 40 grams (not exceeding Rs 100,000). Any amount exceeding these limits attracts a customs duty, which can significantly add to the cost, potentially negating the savings from buying in Dubai. The customs duty rate can be as high as 36% on gold exceeding the duty-free limit.
VAT Refund Process:
இதற்காக Airport ல Planet VAT Refund Counter தனி counter இருக்கும். நீங்க வாங்கிட்டு வந்த Jewels இங்க காண்பிக்க வேண்டும். அவங்க inspect செஞ்சிட்டு,உங்க Bill check செஞ்சிட்டு.. உங்களுக்கு VAT refund எப்படி வேண்டும்(CASH OR CARD)என்று கேட்பார்கள். தயவு செய்து card என்று தேர்வு செஞ்சுக்கங்க.. இது தான் process நேரம் குறைவு..சீக்கிரம் approve செஞ்சிடுவாங்க. உங்களுக்கு 7 நாட்களுக்குள் VAT ஆக செலுத்திய பணம் திரும்பி உங்க ACCOUNTக்கு வந்திடும்.
ZAM ZAM MANDI BIRIYANI :
துபாய் போகும் போதே கண்டிப்பா மந்தி பிரியாணி try செய்யனும் னு plan செஞ்சிட்டு தான் போயிருந்தேன். நிறைய பேர் இந்த ZAM ZAM க்கு ஓவர் hype கொடுத்து இருந்தாங்க. 16 பேரும் போயிட்டோம், எங்களுக்கு னு தனி room book செஞ்சிட்டோம். உண்மையை சொல்லனும்னா Average தான். சும்மா ஒரு Mandi experience க்காக போகலாம். விலையும் குறைவு எல்லாம் இல்லை. அதனால் ரொம்ப யோசிச்சுக்கங்க.
Chicken Mandi Biriyani : 2.5/5
Mutton Mandi Biriyani : 2.5/5
Kunafa : 3/5
Sweet Ball : 1/5
இதற்கு நாங்க இன்னொரு கடையில் Non veg சாப்பிட்டோம் (Malabar Express)அங்க உண்மையாகவே நல்லா இருந்திச்சு. அங்க போன time என் phone switched off. அதனால் photos , videos எடுக்க முடியல.. Insta ல ஒருவர் பதிவு செஞ்சிருக்கார்.. அந்த link இங்க கொடுத்து இருக்கேன்.
Malabar Express
instagram.com
Dolphinarium :
குழந்தைகளை கூட்டி சென்றதால் அவர்களுக்கு விருப்பமான இடத்திற்கும் போக வேண்டும் இதை தேர்வு செஞ்சிருந்தோம். ஆனா இதற்கு எல்லாரும் போகவில்லை.. குழந்தைகளை எல்லாம் கூட்டிட்டு ஒரே ஒரு பெரியவர் மட்டும் தான் போயிருந்தாங்க.. மற்றவர்கள் எல்லாம் தங்கம் வாங்க போயிட்டோம். குழந்தைகள் நல்லா enjoy செஞ்சாங்க னு சொன்னாங்க.
Entry Ticket Price : 89 AED (Rs.2000 Approx)
Video Credit : Official Website.
Desert Safari :
இங்க பெரியவர்களை மட்டும் ரூமில் விட்டுவிட்டு மற்றவர்கள் அனைவரும் கிளம்பிட்டோம். எங்களை அழைத்து செல்ல Land cruiser and Nisson Patrol car வந்திருச்சு. 1.5 மணி நேர பயணம் , அரேபிக் பாடல்களை கேட்டுட்டே பாலைவனத்தை சென்றடைந்தோம்.
முதலில் ATV QUAD BIKE RIDES
இங்க போனா miss செய்யாமல் முயற்சி செய்ய வேண்டிய ஒரு ride னு சொல்லலாம். நீங்க தனியாகவும் drive செய்யலாம், இல்லை என்றால் பின்னாடி ஒருவரையும் கூட்டி செல்லலாம். ஆனா ticket கண்டிப்பா இருவருக்கும் சேர்த்தி எடுக்க வேண்டும். நாங்க குழந்தைகள் உடன் சென்றதால் double ride தான் தேர்வு செஞ்சோம். திறந்த வெளி பாலைவனத்தில் உங்க விருப்பம் போல் வண்டி ஓட்டலாம். நான் என் மகன் ரொம்ப ஆசைப்பட்டான் என்று அவன் கிட்ட வண்டியை கொடுத்துட்டு, பின்னாடி உக்காந்துட்டேன்:) அப்படி ஒரு மகிழ்ச்சி அவனுக்கு.. எல்லாருமே செமையா enjoy செஞ்சோம். நாங்க 20 நிமிடங்கள் தான் book செஞ்சிருந்தோம்.. time முடிந்த உடன் வண்டியை ஒப்படைக்க வேண்டும். நீங்க விரும்பினால் மீண்டும் பணம் செலுத்தி தொடரலாம். இது இல்லாமல் private rides இருக்கு.. அங்க வேற யாருமே இருக்க மாட்டாங்க, நீங்க மட்டும் தனியா விருப்பம் போல் drive செய்யலாம்.. ஆனா அது கொஞ்சம் costly.
Dunes Ride Bash :
சின்ன வயசுல இருந்து Desert நேர்ல பார்க்கனும் அவ்ளோ ஆசை. அதை இந்த Dubai trip ல நிறைவேற்றியாச்சு. நாம் போகும் Land Cruiser மற்றும் Nissan Patrol Car tyre ல இருக்கும் காற்றை குறைத்து இந்த பாலைவனத்துல செம ride கூட்டிட்டு போவாங்க. செம adventure ஆ இருக்கும்.
Life ல ஒரு முறையாவது போயிடுங்க.. அதுவும் வயது குறைவாக இருக்கும் போதே போயிடுங்க.
Dinner - Buffet
எல்லா adventure activities முடித்து கடைசியா இந்த camp க்கு கூட்டிட்டு போவாங்க. நான் எங்க guide கிட்ட details கேட்டுட்டே தான் போனேன்.. அவர் சொன்ன விசயம், இந்த மாதிரி 40+ camp இருக்காம்.. நாம் கொடுக்கும் விலைக்கு தகுந்த camp நம்ம agent allot செய்வாங்கலாம் . விலை குறைவாக கிடைக்குது னு book செஞ்சிடாதீங்க. நாங்க ஒரு அளவுக்கு premium ticket தான் எடுத்து இருந்தோம்.. அதற்கே food சுமார் ஆக தான் இருந்தது.
இங்க போன உடன் Camel Ride செய்யலாம், welcome drink , Henna art, Arabic Dress for photoshoot, Complimentary soft drinks இதெல்லாம் enjoy செஞ்சிட்டு நமக்குன்னு allot செய்த table க்கு போயிடனும். நிகழ்ச்சி 7 மணிக்கு தொடங்கும், அங்க Belly Dance, Fire Dance, Tanoura Dance, Arabic Music Performances இதெல்லாம் கண்டுகளிக்கலாம் . நான் முன்னையே சொன்ன மாதிரி Buffet சுமார் தான். அதனால் ரொம்ப expect செய்யாமல் போங்க.
Ticket Price: Rs.10,000/person
Dubai Desert Safari Package இது முழுக்க முழுக்க customized என்பதால் ஒவ்வொருவருக்கும் வேறுபாடும். அங்க எந்த மாதிரி activities தேர்வு செய்யறீங்க, எந்த மாதிரி camp தேர்வு செய்யறீங்க என்பதை பொருத்து விலை மாறுபடும். அதனால் எங்களுக்கு என்ன விலை ஆச்சு னு மட்டும் தான் சொல்லி இருக்கேன்.

جاري تحميل الاقتراحات...