#VIKATAN_EXCLUSIVE
பிற மாவட்டங்களிலிருந்து மாநாட்டுக்கு வருபவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் அலுவலகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை, புறப்படும் நேரத்தை தெரிவித்திட வேண்டும்.’ ‘வடமாவட்டங்களிலிருந்து வருபவர்கள், அவர்களின் பார்க்கிங்குக்காக ஒதுக்கப் பட்டிருக்கும் 45 ஏக்கர் பகுதியில் வாகனங்களை நிறுத்தினால், அவர்கள் சாலையைக் கடந்துதான் மாநாட்டுத் திடலுக்கு வரவேண்டியிருக்கும். இதனால், கடுமையாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
ஆகவே, அந்த 45 ஏக்கர் இடம் பயன்படுத்தத் தடைவிதிக்கப்படுகிறது.’ ‘மாநாட்டுப் பந்தல் அமையவிருக்கும் 85 ஏக்கர் இடத்திலேயே வாகனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்’... என ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து, எங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது அரசு. மாநாட்டுப் பந்தல் அமையவிருக்கும் 85 ஏக்கர் நிலத்திலேயே வாகனங்களையும் நிறுத்தினால், மாநாட்டுக்கு வருபவர்களுக்குச் சிரமம் ஏற்படும். உணவு வழங்குவதிலும், பெண்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதிலும் சிரமங்கள் ஏற்படலாம். அதனால்தான், வாகனங்களை நிறுத்துவதற்குப் பிரத்யேகமாக இரண்டு இடங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டன. ஆனால், அதற்கு ஒப்புதல் வழங்காமல் நெருக்கடி கொடுக்கிறது அரசு.
வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள், அந்தந்த மாவட்ட காவல் அலுவலகங்களில் விவரங்களைத் தர வேண்டும் என நிபந்தனையிட்டிருக்கின்றனர். இந்த விவரங்களைப் பெற்று, லோக்கல் காவல்துறை மூலமாக வேன், பஸ் உரிமையாளர்களை மறைமுகமாக மிரட்டுவதற்காகத்தான் இந்த நிபந்தனையே விதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை எத்தனையோ கட்சிகளின் மாநாடுகள் நடந்திருக்கின்றன. தேர்தல் சமயத்திலும், அதற்குப் பின்னரும் திருச்சிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தி.மு.க-வும் வி.சி.க-வும் மாநாடுகள் நடத்தின. அவர்களுக்கெல்லாம் இது போன்ற நிபந்தனை விதிக்கப்பட்டனவா... இவையெல்லாமே வெளியூர்களிலிருந்து வரும் வாகனங்களை தடுக்கப் போடுகிற திட்டம்தான்.
இன்னும் பத்து நாள்களில் மாநாட்டை வைத்துக்கொண்டு நிலத்தைத் தேட முடியாது. இது காவல்துறைக்கே தெரியும். ‘மாநாட்டுப் பகுதியில் வாகனங்களை நிறுத்த முடியாது. இடம் நிரம்பிவிட்டது’ என திண்டிவனத்திலும் விழுப்புரத்திலும் வாகனங்களை மடக்கி நிறுத்தத் திட்டம் போடுகிறது காவல்துறை. த.வெ.க மாநாட்டுக்குக் கூட்டம் கூடுவதைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அதற்காகத்தான் இப்படியொரு நிபந்தனை போடப்பட்டிருக்கிறது
جاري تحميل الاقتراحات...