செய்த பாவ புண்ணியத்தால் மட்டும்தான் மறுபிறவி கிடைக்கிறது அதில் வறுமை நோய் செல்வம் பெருமையெல்லாம் வரும் எனில் பாவ புண்ணியங்களே ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் எனில் கடவுள் என்பவருக்கு இங்கு வேலை இல்லாமல் போகிறது. பாவத்திற்கு பரிகாரம் உண்டு அந்த பரிகாரத்தை பார்ப்பனர்களைக் கொண்டு
அவர்களுக்கு தானம் அளித்து யாகம் வளர்த்து மந்திரம் சொல்லி பாவங்களை சரி செய்து விடலாம் எனில் பாவ புண்ணியங்களும் அடிபட்டுப் போய் விடுகிறது அப்படி எனில் கடவுள் பாவ புண்ணியம் இவை அனைத்தையும் விட மனிதனின் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்யும் வல்லமை படைத்தவர்கள் பார்ப்பனர்கள் தான் என்று
நம்ப வைத்து பார்ப்பனராய் பிறப்பதும் பிறவிப் பயன் பார்ப்பனரல்லாமல் பிறப்பது முன் ஜென்ம பாவம் என்று சொல்லிக் கொடுத்து சாதிய ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி அந்த கட்டமைப்பை தக்க வைத்துக் கொள்ளும் சனாதன சூழ்ச்சியை தாங்கி பிடிக்கும் நபராகத்தான் பரம்பொருள் மகாவிஷ்ணு இருக்கிறார்
அவர் பிரச்சாரம் செய்து வந்த கருத்தானது சனாதனத்தையும் அதனால் உருவான சாதி பாலின ஏற்றத்தாழ்வை தூக்கிப் பிடிக்கவே செய்யும் அதனால்தான் இங்கு இருக்கும் முழு சங்கிகளும் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாத மகா விஷ்ணுவிற்கு பல்லக்கு தூக்கிக் கொண்டிருக்கிறார்கள்
உள்ளார்ந்து யோசித்தீர்கள் என்றால் அனைவரும் சமம் என்ற கோட்பாடு அடிபட்டு போகும் இவர்களின் இது போன்ற விஷம பிரச்சாரத்தால் இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் இது பகுத்தறிவுக்கும் சமத்துவத்திற்கும் எதிரானது
جاري تحميل الاقتراحات...