Muralitharan K
Muralitharan K

@muralijourno

13 تغريدة 1 قراءة May 31, 2024
காந்தி படத்திற்குப் பிறகுதான் காந்தி பிரபலமானாரா?
-----------------------------------
ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் 1982ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வெளியானது. ஆனால், இந்தத் திரைப்படத்திற்குப் பிறகுதான் காந்தி உலகம் முழுவதும் அறியப்பட்டாரா?
(1/13)
பொதுவெளியில் இருக்கும் தரவுகளை வைத்துப் பார்த்தால், காந்தி 1930களிலேயே உலகில் மிகவும் பிரபலமான நபராக இருந்தார்.
1937லேயே காந்தி நோபல் பரிசுக்குப் பரிசீலிக்கப்பட்டார். "1937, 1938, 1939, 1947 ஆகிய ஆண்டுகளிலும் 1948 ஜனவரியில் அவர் கொலைசெய்யப்படுவதற்கு முன்பாகவும்...
(2/13)
நோபல் பரிசுக்காக அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது" என நோபல் ன் இணையதளம் குறிப்பிடுகிறது. 1947வரை அவரது பெயரை நோபல் பரிசுக்குப் பரிந்துரைத்தவர்கள் வெளிநாட்டவர்கள்தான்.
தான் வாழ்ந்த காலத்திலேயே உலகம் முழுவதும் சிவில் உரிமை போராளிகளிடம் பெரும் தாக்கத்தை...
(3/13)
ஏற்படுத்தினார் காந்தி. அவர்களில் மிக முக்கியமானவர் அமெரிக்க சிவில் உரிமைப் போராளியான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.
காந்தீயத் தத்துவங்களே “ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தார்மீக ரீதியாகவும் யதார்த்தரீதியாகவும் வலுவான முறையாக இருக்கின்றன" என்று
(4/13)
My Pilgrimage to Nonviolence என்ற தனது நூலில் குறிப்பிட்டார் அவர்.
மார்ட்டின் லூதர் கிங் மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவில் இன ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான நெல்சன் மண்டேலாவின் போராட்டத்திலும் காந்தியின் தத்துவங்கள் பெரும் பங்கை வகித்தன.
(5/13)
"காந்தி அஹிம்சைக்கு தன்னை ஒப்புக்கொடுத்திருந்தார். என்னால் முடிந்தவரை காந்தியின் வியூகத்தை நான் பின்பற்றினேன்" என்று குறிப்பிட்டார் மண்டேலா.
அதேபோல, ஜெர்மனியில் பிறந்து 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர்களில் ஒருவராக உருவெடுத்தவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,
(6/13)
ஃபிரான்சைச் சேர்ந்த எழுத்தாளரும் சிந்தனாவாதியுமான ரோமென் ரோலண்ட் போன்றவர்கள் காந்தியால் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்தனர்.
காந்தியின் 70வது பிறந்த நாளை ஒட்டி 1939ல் வெளியான "மகாத்மா காந்தி" என்ற தொகுப்பு நூல் காந்தியின் பிரபலத்திற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.
(7/13)
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இந்த நூலைத் தொகுத்திருந்தார். அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த 70 கட்டுரைகளில் பெரும்பாலானவை, உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த சிந்தனையாளர்களால் எழுதப்பட்டிருந்தன.
காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தொடர்ந்து எழுதிவரும்...
(8/13)
மூத்த பத்திரிகையாளரான மிரா காம்தார், "1931ல் உலகின் மிகப் பிரபலமான மனிதர் காந்திதான்" என குறிப்பிடுகிறார்.
"1930ஆம் ஆண்டு மார்ச் மாதம் காந்தி தண்டி யாத்திரையைத் துவங்கியபோது அது குறித்த செய்தியைச் சேகரிக்கவும் படமாக்கவும் உலகம் முழுவதுமிருந்து பத்திரிகையாளர்களும்...
(9/13)
புகைப்படக் கலைஞர்களும் குவிந்தனர். காந்தியின் பிரபலத்தைச் சொல்ல இது ஒன்றே போதுமானது" என்கிறார் வரலாற்றாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் 1931ல் காந்தியை தனது அட்டைப் படத்தில் வெளியிட்டு, Man of the Year எனக் குறிப்பிட்டது,...
(10/13)
அவர் அமெரிக்காவிலும் கவனிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறது.
ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி திரைப்படம் வெளியாவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே, காந்தி குறித்த விரிவான ஆவணப் படம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
(11/13)
20ம் நூற்றாண்டில் தமிழ் பண்பாட்டு வரலாற்றை ஆவணப்படுத்தியவர்களில் முக்கியமானவரான ஏ.கே. செட்டியார் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். "மகாத்மா காந்தி: அவரது வாழ்க்கையின் சம்பவங்கள்" என்ற இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படம் ஒன்றை 1940ல் அவர் வெளியிட்டார்.
(12/13)

جاري تحميل الاقتراحات...