ராம ராஜ்ஜியம்
எதற்காக ராமரை முன்னிறுத்துகிறார்கள்? ராமர் வெறும் கடவுள் மட்டுமன்று அவர் ஒரு அரசர்.
மதமும் அதிகாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது என்பதால், எல்லா மதத்திலும் அரச குடும்பம் என்பது, கடவுள் வழி வந்த குடும்பமாக இருக்கும். 1/14

கடவுள் மனிதனாக பிறப்பெடுத்த வம்சமே அந்த நிலத்தை ஆளும் தகுதியுடைய வம்சம் என்பது நிறுவப்பட்ட ஒன்று. அதிகாரம் புனைந்துவிட்ட கதை.
உலகமெங்கும் எல்லா மதங்களிலும் இறைவன் மனிதனாக பிறப்பெடுத்து, அரசனாகி/தலைவனாகி மக்களை ஆளுகிறார். 2/14
உலகமெங்கும் எல்லா மதங்களிலும் இறைவன் மனிதனாக பிறப்பெடுத்து, அரசனாகி/தலைவனாகி மக்களை ஆளுகிறார். 2/14
மனிதன், கடவுள், புராணம் (man, myth, and god) இந்த மூன்றின் கலவையே அதிகாரம். இயேசு கடவுளின் மகன் என சொல்லப்பட்டபோதும், பைபிள் முழுவதும் திரும்ப திரும்ப, அவர் 'தாவீதின் குமாரன்' என சொல்வதின் மூலம், அவர் அரச வம்சாவளியை சேர்ந்தவர், எனவே யூத மக்களின் அடுத்த அரசர் இவரே 3/14
என நிறுவுகிறார்கள் (royal and messianic identity).
1930 ல் இருந்து 1974 வரை எத்தியோப்பியாவின் அரசராக இருந்தவர் Haile Selassie. 1930 களில் ஜமைக்காவில் ஒரு மத இயக்கமாக Rastafari movement உருவானது. இந்த இயக்கம் Haile Selassie வை royal and messianic identity யாக பார்த்தது. 4/14

Haile Selassie "Jah" or "Jah Rastafari" என அழைக்கப்பட்டார். இவர் King Solomon க்கும் Queen of Sheba வுக்கும் பிறந்தவர் என சொல்லப்பட்டது. ஆனால் இதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. Haile Selassie கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட அரச குடும்பத்தில் வந்தவர் என்பதால், 5/14
அவருக்கு அரசாளும் உரிமை இருக்கிறது அது கடவுளின் விருப்பம் என Rastafari movement சொல்லப்பட்டது.
எப்போது எல்லாம் வேறு ஒரு கடவுளை வழிபடும் குழுவின் மூலம் ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் கடவுளின் அருளால் ஒரு அரசன் வந்து நம்மை மீட்டு கொண்டு செல்வான் என்ற கதை பிறக்கிறது. 6/14
எப்போது எல்லாம் வேறு ஒரு கடவுளை வழிபடும் குழுவின் மூலம் ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் கடவுளின் அருளால் ஒரு அரசன் வந்து நம்மை மீட்டு கொண்டு செல்வான் என்ற கதை பிறக்கிறது. 6/14
ஒரு கதை எழுதப்பட்டதும், அது நிரந்தமாகிறது. எழுதப்பட்ட கதை மாறுவதில்லை. ஆனால், வாய் மொழியாக சொல்லப்படும் கதைகள் ஒரே ஆளால் சொல்லப்பட்டாலும் கூட ஒவ்வொரு முறையும் அதில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அந்த கதை சொல்லி புதிதாக தெரிந்து கொள்ளும் விஷயங்களையும் அதில் சேர்கிறான். 7/14
அல்லது அதற்கேற்றாற் போல மாற்றங்கள் செய்கிறான்.
ஏன் மக்கள் அரச குடும்பத்தில் பிறந்தவர்களையே அடுத்த அரசனாக பார்க்கிறார்கள்.
1. அடுத்த அரசனாக வர யாருக்கு தகுதி இருக்கிறது? ஒரு அரசனை தேர்ந்தெடுக்க என்ன செய்ய வேண்டும்? எம்மாதிரியான குணங்கள் ஒரு அரசனுக்கு இருக்க வேண்டும்? 8/14

எப்பேர்ப்பட்ட திறமையான நற்குணங்கள் கொண்ட மனிதனாக இருந்தாலும், அவன் நல்லமுறையில் ஆட்சி செய்ய, அவனது ஆட்சி சிறக்க கடவுளின் அருள் வேண்டும் என் மக்கள் நம்புகிறார்கள். அவ்விதமாக அவர்களுக்கு கற்பிக்கப்பட்டு இருக்கிறது. 9/14
நாம் என்னதான் ஒரு செயலை பார்த்து பார்த்து செய்தாலும், அது வெற்றி பெற கடவுளின் ஆசி வேண்டும் என்பது தான் மதம் சொல்லி தரும் பாடம். எனவே ஒரு அரசன் சிறப்பாக ஆட்சி செய்ய, அவனுக்கு கடவுளின் ஆசி இருக்க வேண்டும். அவனுக்கு கடவுளின் ஆசி இருக்கிறதா எனபதை எப்படி தெரிந்து கொள்வது? 10/14
அது மிக எளிது. கடவுள் ஏற்கனவே ஒரு அரச குடும்பத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அந்த குடும்பத்தில் வரும் வம்சாவளிகள் அனைவருக்கும் கடவுளின் ஆசி இருக்கிறது.
2. அக்காலத்தில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வர முடியும் எனும்போது அதில் குழப்பங்களும் ஆட்சிக்காக சண்டைகளும் நடக்க நேரிடும்.
2. அக்காலத்தில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வர முடியும் எனும்போது அதில் குழப்பங்களும் ஆட்சிக்காக சண்டைகளும் நடக்க நேரிடும்.
அதை தவிர்க்க அரச பதவி வாரிசுகள் மூலம் கடத்தப்படுவது எளிமையான ஒன்று. அதிகம் சிக்கல்கள் இல்லாத நடைமுறை.
3. முன்னோர்களின் குணங்கள் அவர்களது வாரிசுக்கும் இருக்கும் என்ற அடைப்படை கருத்தை கொண்டு, இந்த ஜாதியில் பிறந்தவருக்கு இந்த குணங்கள் இருக்கும், 12/14
3. முன்னோர்களின் குணங்கள் அவர்களது வாரிசுக்கும் இருக்கும் என்ற அடைப்படை கருத்தை கொண்டு, இந்த ஜாதியில் பிறந்தவருக்கு இந்த குணங்கள் இருக்கும், 12/14
இந்த வம்சத்தில் பிறந்தவருக்கு இந்த குணங்கள் இருக்கும் என்ற கற்பிதங்கள் இருப்பதாலும் ஒரு குறிப்பிட்ட வம்சாவளியில் வரும் ஆட்களை அரசராக தேர்ந்தெடுக்க மக்கள் நினைக்கிறார்கள்.
ஆக, நான் இந்த அரச குடும்பத்தை சேர்ந்தவன் என்பதை நிரூபித்தால் ஆட்சிக்கு வருவது அக்காலத்தில் எளிது. 13/14
ஆக, நான் இந்த அரச குடும்பத்தை சேர்ந்தவன் என்பதை நிரூபித்தால் ஆட்சிக்கு வருவது அக்காலத்தில் எளிது. 13/14
இன்றைய காலத்தில் அரச ஆட்சி ஒழிக்கப்பட்ட நிலையில், எந்த கடவுள் அரசராக வந்து நல்லாட்சி புரிந்திருக்கிறாரோ, அந்த கடவுளை நான் வழிபடுகிறேன் எனவே அந்த கடவுளின் ஆசி எனக்கு இருக்கிறது என்பதை நிறுவுவதன் மூலம் ஆட்சிக்கு வர முடியும். 14/14
جاري تحميل الاقتراحات...