தமிழர்களின் திருமண முறை
தமிழர்களின் திருமண முறைகளைப் பற்றி வழக்கம்போல பல்வேறு விதமான திரிபுகள், அதிலும் தாலியைப் பற்றி ஏதோ வடக்கிலிருந்து வந்தது என்றெல்லாம் சொல்கிறார்கள். நம் நாட்டில் இது போன்ற சடங்குகளைப் பொருத்தவரை பல முறைகள் அவரவர் சம்பிரதாயப்படி இருந்தாலும், அவற்றின் அடிப்படை ஒன்றுதான் என்பதே உண்மை. சங்க இலக்கியங்கள் திருமணம் பற்றிச் சொல்வதென்ன?
திருமணத்திற்கு நாள் குறிப்பதற்கு முன் இப்போது போலவே ஜோதிடம் பார்த்து நாள் குறித்தனர்.
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென (அகம் 86)
நல்ல கோள்கள் சேர்ந்திருக்கவேண்டும், வளர்பிறையாக இருக்கவேண்டும், ரோகிணி நட்சத்திரம் மிகவும் நல்ல நாளாகக் கருதப்பட்டது
திங்கட் சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி (அகம் 136)
அந்த நாளில் மணப்பந்தல் வைத்து கடவுளை வணங்கி திருமணம் நடத்தப்பட்டதாம்.

திருமணத்திற்கு முன்னால் பரிசம் கொடுப்பது மணமகனின் வழக்கம்.
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்
பெறல் அருங் குரையள் ஆயின், அறம் தெரிந்து (அகம் 280)
எவ்வளவு பொருளைப் பரிசமாகக் கொடுத்தாலும் இவளை அடைய முடியுமா என்கிறானாம் ஒருவன். கன்யாசுல்கம் என்ற இந்த வழக்கம் அண்மைக்காலம் வரை நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலிரும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு முன் நிச்சயதார்த்தம் நடத்தி அதை முறைப்படி அறிவிக்கும் நிகழ்வும் பண்டைக்காலத்தில் இருந்தது.
நனை விளை நறவின் தேறல் மாந்தி,
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ,
''பொம்மல் ஓதி எம் மகள் மணன்'' என,
வதுவை அயர்ந்தனர் நமரே (அகம் 221)
என்று மண அறிவுப்புச் செய்தமையை தோழி ஒருவள் கூறுகிறாள். வதுவை என்றால் திருமணம்.

திருமணம் இன்று போலவே அக்னி சாட்சியாக, ஹோமத்தீயின் முன்னால் செய்யப்பட்டது. இதை
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி,
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து,
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப (அகம் 396)
தெறல் அருங் கடவுளான அக்கினியின் முன்னால் கையைப் பற்றி உன்னைப் பிரியமாட்டேன் என்று மணமகன் உறுதிமொழி கூறியதாக இந்தப் பாடல் சொல்கிறது. சிலப்பதிகாரமும்
மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிடத் தீவலம் வந்து
என்று வேதங்களை ஓதி நெருப்பை வலம் வந்து திருமணம் நடந்ததாகவே கூறுகிறது.

அடுத்ததாகத் தாலி. இந்தச் சொல் தாலம் என்பதிலிருந்து வந்தது. தாலம் என்றால் பனை ஓலை. அக்காலத்தில் சுபநிகழ்ச்சிகளின் போது பனை ஓலையிலான மாலை அணிவிக்கும் வழக்கம் இருந்தது. பின்னர் அது நூலில் ஒரு மஞ்சளைக் கட்டி அணிவிக்கும் சடங்காக மாறியது.
புறநானூறு 127 சொல்கிறது
ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின்று என்ப, ஆஅய் கோயில்
இங்கே ஈகை அரிய இழைஅணி என்று குறிப்பிடப்படுவது தாலி. ஏன்? மற்ற எல்லா அணிகளையும் தானமாகத் தந்துவிடுவார்கள். ஆனால் மங்கலமான இழையால் ஆன தாலியைத் தானமாகத் தர மாட்டார்கள். ஆகவே தாலி சங்க காலத்திலிருந்தே மகளிரால் அணியப்படுவது என்பது தெளிவாகிறதல்லவா.
நெடுநல்வாடையிலும்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்
பின் அமை நெடு வீழ் தாழத் துணை துறந்து
என்ற வரிகளுக்கு முத்துமாலைகளைத் தாங்கிய அவள் மார்பில் இப்போது தாலி மட்டுமே தொங்குகிறது என்று நச்சினார்க்கினியர் உரை தருகிறார்.
இப்படி திருமணத்தின் அடிப்படை நிகழ்வுகள் என்றும் மாறாமல், ஜோதிடம், அக்னி சாட்சியாகத் திருமணம், மணமகளுக்குத் தாலி அணிவித்தல் என்று சனாதனத்தின் கூறுகளைக் கொண்டுள்ளதே நம் திருமண முறையாகும்

جاري تحميل الاقتراحات...