Aravindakshan B R
Aravindakshan B R

@RealAravind36

22 تغريدة 15 قراءة Apr 07, 2024
அரசியல் ஆதாயத்திற்கு துணை போன இந்திய விமானப்படை:
சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ராணுவ அமைச்சகம்
=========================
இந்திய அரசாங்கத்தின் பெருமைகளில் ஒன்று..
இந்திய விமானப்படையின் @IAF_MCC கீழ் செயல்பட்டுவரும் @Suryakiran_IAF Aerobatic display Team, மத்திய மற்றும் மாநிலங்களில் நடக்கும் முக்கியமான அரசு விழாக்களில் Surya Kiran Aerobatic display Team சார்பில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படுவதுண்டு
1/22
இந்திய விமானப்படை வீரர்கள் வானில் நிகழ்த்தும் சாகசங்கள்
மக்களை மிகவும் ஆச்சர்யமூட்டும் அம்சங்கள் நிறைந்தது..
 
அப்படிப்பட்ட Surya Kiran Aerobatic TEAM-ன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் 16/11/2023 ம் தேதியன்று
Guess What ...!! எனும் வாசகத்துடன் வீடியோ ஒன்றை வெளியிடப்பட்டது
x.com
2/22
2023 நவம்பர் மாதம் 16-ம் தேதி இரவு 9.35 க்கு,
Surya Kiran Aerobatic TEAM இந்த வீடியோவை வெளியிட்டவுடன் மக்கள் கண்டுபிடித்து விட்டனர்.
 
இந்தியா-ஆஸ்திரேலியா இடையில் நடக்கப்போகும் உலகக்கோப்பை
கிரிக்கெட் இறுதிப்போட்டியில் Surya Kiran Aerobatic TEAM-ன் சார்பில் Airshow நடத்தப்படப்போகிறதென்று
3/22
அதன்படி,
குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானம் வரும் மக்களை குஷிப்படுத்த
17,மற்றும் 18 ஆகிய இரண்டு தினங்கள்
Surya Kiran Aerobatic TEAM முறைப்படி பயிற்சியும் மேற்கொள்கின்றனர்.
18/11/23 அன்று
உலகக்கோப்பை கிரிக்கெட், இறுதிப்போட்டி நடக்கும்
(19/11/23) நாளன்று
மக்களை உற்சாகப்படுத்த வேறு என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறும் என்ற விபரங்களை BCCI -யும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது
4/22
Surya Kiran Aerobatic team நடத்தும் Air show Airshow பிற்பகல் 1.35 முதல் 1.55 வரை நடக்கும் என்றும்,அதன் பிறகு   பிரபல பாடகர்களின் நிகழ்ச்சி,Laser light ஷோ போன்றவை நடக்கும் என்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது
 
இந்த அறிவிப்பை BCCI
18/11/23 ம் தேதி காலை 10 மணிக்கே வெளியிட்டுவிட்டது..
5/22
@BCCI -ன் அறிவிப்பை -
@DefencePRO_Guj ,
Wing Commander Manish என்பவரும்,உலகக்கோப்பை கிரிக்கெட், இறுதிப்போட்டியின் போது @Suryakiran_IAF Aerobatic team-ன் சார்பில் Airshow நடத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறார்..
எப்போதென்றால்,
18/11/23 ம் தேதியன்று மாலை 6 மணிக்கு உறுதி செய்கிறார்
6/22
அதோடு நிற்காமல்,
Surya Kiran Aerobatic TEAM எப்போதுஉருவாக்கப்பட்டது,
என்னவெல்லாம் செய்கிறது,
எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்ற விபரங்களை எல்லாம் Gujarat,Defence PRO,Wing Commander,Manish பட்டியலிட்டு பேசும் வீடியோவை பாருங்கள்..
அதன்படி,
ராணுவ அமைச்சகத்தின் அனுமதியுடன் 19-ம் தேதி நடந்த World cup, கிரிக்கெட் போட்டியின் Finals-ன் போது , surya Kiran Aerobatic TEAM -ன் சார்பில் சாகச நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது..
7/22
அதே நேரம்,
தனியார் அமைப்பான BCCI நடத்திய கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களை உற்சாகப்படுத்த விமானப்படையை பயன்படுத்துவதா ?
என்ற கேள்வியும் விமர்சனங்களும் கூட பரவலாக எழுந்தது..
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட பிஜேபி முயற்சி எடுக்கிறதா என்ற கடுமையான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது
8/22
உண்மையில்,இந்த நாட்டின் பிரதமர் மற்றும் பிஜேபி  அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையா ?
ச்சே..ச்சே..நிச்சயமாக இருக்காது..
ராணுவத்தைக் கூடவா அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவார்கள் என்ற எண்ணத்தோடு,
நம்பிக்கை இல்லாமல் தான் தகவல்களை திரட்டத் தொடங்கினேன்..
முதலில், இந்திய விளையாட்டு @IndiaSports அமைச்சகத்திற்கு RTI மூலமாக விண்ணப்பம் செய்யப்பட்டது
9/22
அதில், BCCI அமைப்பு செயல்படுகிறதா ?
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது  surya Kiran Aerobatic TEAM -ன் விமான சாகச நிகழ்ச்சியை நடத்தவேண்டுமென ராணுவ அமைச்சகத்தை ,
விளையாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டதா என்ற கேள்விகளை RTI மூலமாக எழுப்பினேன்..
அதற்கு, ஒற்றை வரியில் இந்திய விளையாட்டு அமைச்சகம் பதில் கொடுத்துவிட்டது
10/22
அதவாது,
@BCCI இந்திய விளையாட்டு அமைச்சகத்தால் @IndiaSports
அங்கீகரிக்கப்படவில்லை.
அதனால் உங்களுடைய கேள்விகளுக்கான பதில் எங்களிடம் இல்லை என்று பொதுத்தகவல் அலுவலர் பதில் கொடுத்துள்ளார்
 
அப்படி என்றால்,
ஒரு தனியார் அமைப்பு நடத்திய கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் @IAF_MCC இந்திய விமானப்படை எதற்காக சாகச நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லாவா ?
11/22
யாருடைய உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்டது என்று எப்படி தெரிந்து கொள்வது !
ராணுவ அமைச்சகம் தானே @SpokespersonMoD
பதிலளிக்க வேண்டும்..
அதனால்,
அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி விளையாட்டு மைதானத்தின் மீது,
எந்த அடிப்படையில் Airshow நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று
இந்திய ராணுவ அமைச்சகத்திடம் 4 கேள்விகளை எழுப்பினேன்
12/22
அந்த விண்ணப்பம் முறைப்படி விமானப்படைக்கு மாற்றப்பட்டு, 19/01/2024 தேதியிட்ட கடிதத்தின் மூலம் Air Officer Administration 4 கேள்விகளுக்கும் CPIO வரிசைக் கிரமமாக பதில் வழங்கியிருந்தார்
 
அதாவது,
ராணுவ அமைச்சகத்தின் அறிவுறுத்தல் படியே Airshow நடத்தப்பட்டதென்றும்,
BCCI இறுதிப்போட்டி தொடர்பான அழைப்பிதழ் அனுப்பி இருந்ததாகவும் பதிலில் கூறப்பட்டிருந்தது.
ஆனால்,ராணுஅமைச்சகம் மற்றும் விமானப்படை இடையில் நடந்த கடிதங்களின் நகலை CPIO வழங்கவில்லை
13/22
அரைகுறையான பதில்கள் மட்டுமே வழங்கப்பட்டதால்,மீண்டும் ராணுவ அமைச்சகத்திற்கு கடிதப்பரிமாற்றங்கள் குறித்த ஆவணங்களின் நகல்களைகோரி மேல்முறையீடு செய்யப்பட்டது
 11/02/2024 அன்று செய்யப்பட்ட மேல்முறையீட்டு விண்ணப்பம் மீண்டும் விமானப்படை தலைமையகத்திற்கே மாற்றம் செய்யப்பட்டு,ராணுவ அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படியே Airshow நடத்தப்பட்டதாக விமானப்படையின் பொதுத்தகவல் அலுவலர் கூறியிருப்பதால் அவரே பதில் வழங்குவார் என குறிப்பிட்டு
16/02/2024 அன்று Urgent RTI எனக்குறிப்பிட்டு  Air HQ க்கு கடிதம் அனுப்பி,அதன் நகலையும் அனுப்பி வைத்தது ராணுவ அமைச்சகம்
14/22
ராணுவ அமைச்சகத்தின்
கடிதம் அடிப்படையில்,
இந்திய விமானப்படையின் தலைமை அலுவலகமும் மேல்முறையீட்டு விண்ணப்பத்திற்கு பதில் வழங்கியது.
அதில் ராணுவ அமைச்சகத்திடம் இருந்து முறைப்படி
எந்த உத்தரவும் கடிதம் மூலமாக பிறப்பிக்கப்படவில்லை என்பதை மறைமுகமாக மேல்முறையீட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூறவில்லை…
அதாவது மனுதாரர் கேட்கிறார் என்பதற்காக, CPIO-வால் கூறப்பட்ட பதிலை தாண்டி,புதிதாக தங்களால் எந்த ஆவணங்களை உருவாக்கி தர இயலாது என குறிப்பிட்டு விரிவான பதிலை வழங்கியுள்ளனர்
15/22
அப்படி என்றால்,கடிதப் பரிமாற்றமோ,,
முறையான உத்தரவோ பிறப்பிக்கப்பட வில்லை என்று தானே அர்த்தம்..
அதாவது,
ஒரு தனியார் அமைப்பான BCCI நடத்திய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது,
யாருடைய உத்தரவின் படி
Airshow நடத்தப்பட்டதென்று
ராணுவ அமைச்சகத்துக்கும் தெரியவில்லை.
இந்திய விமானப்படையின் தலைமை அலுவலகத்திற்கும் தெரியவில்லை
முறையான எந்த உத்தரவுகளும்
இன்றி விமானப்படை, Air show-வை நடத்தியுள்ளது
Airshow நடத்த வேண்டுமென
ராணுவ அமைச்சகமும் முறைப்படி உத்தரவிடவில்லை.
Airshow நடத்த வேண்டுமென இந்திய விமானப்படையிடம்,
இந்திய விளையாட்டு அமைச்சகமும் கோரிக்கை வைக்கவில்லை
16/22
அதாவது இன்னும் தெளிவாக கூறினால்,
BCCI அனுப்பிய அழைப்பிதழின் பேரில்
மட்டுமே Air Show-வை நடத்தியிருக்கிறது ராணுவ அமைச்சகம்..
எப்படி !? சூப்பர்ல..
 
ஆனால் கவனிக்கவும்…
16/11/2023 அன்று  Surya Kiran Aerobatic team அதிகாரப்பூர்வமாக Airshow குறித்து அறிவிப்பை வெளியிடுகிறது
 
18/11/2023 தேதியன்று Gujarat,Defence PRO, @Suryakiran_IAF Team மூலம்
Airshow நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறார்
17/22
யாருடைய உத்தரவின் அடிப்படையில்
இந்த அறிவிப்புக்களை வெளியிட்டிருப்பார்கள் ?
இந்த நாட்டில் என்ன நடக்கிறதென்று உங்களுக்கு ஏதாவது புரிகிறதா !
சத்தியமாக எனக்கு புரியவில்லை..
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி வரும் தனியார் அமைப்பான BCCI நடத்திய கிரிக்கெட் போட்டியை காண வந்த பார்வையாளர்களை குஷிப்படுத்த இந்திய விமானப்படை சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது..
18/22
ஏம்பா…
Free இருந்த சும்மா ரெண்டு ஆட்டம் ஆடிட்டு போங்களேன் என்று கூறினால்,
வாய்ப்பின்றி வெறுமனே இருக்கும்
தெருக்கூத்து கலைஞர்கள் கூட,
ஆட்டம் ஆட மாட்டார்கள்..
ஆனால்,பாருங்கள்
அழைப்பு இல்லை,
கோரிக்கை வைக்கவில்லை..
அமைச்சகத்திடம் இருந்து
முறைப்படி அனுமதி வழங்கவில்லை
இருந்தபோதும் @Suryakiran_IAF குழு
@BCCI க்காக சாகச நிகழ்ச்சியை இலவசமாக நடத்தியிருக்கிறது
எப்படி ! சிறப்பு தானே !?
எவ்வளவு பெரிய மனது !
19/22
ஒரு தனியார் அமைப்பின் நிகழ்ச்சியில்  Surya Kiran Aerobatic team- Airshow நடத்தி இருப்பது இதுவே முதல் முறை
முழுக்க முழுக்க
விமானப்படையை சட்டவிரோதமாக பயன்படுத்தி உள்ளனர்.
2 நாட்கள் பயிற்சி,மூன்றாவது நாள் Airshow என பல லட்ச ரூபாய் பணத்தை விமானப்படை செலவளித்துள்ளது.
ஆனால் பாருங்கள்
World Cup,Final match-ன் போது
நடந்த இதர நிகழ்ச்சிகளுக்கு @BCCI கோடிக்கணக்கான ரூபாயை தண்ணீராக செலவழித்துள்ளது..
விமானப்படையின் Air Show மட்டும் தான் Completely Free
எப்படி !?
20/22
யார் உத்தரவிட்டது ?
எந்த அடிப்படையில் நடத்தப்பட்டது ? என்ற எந்த கேள்விக்கும் ராணுவ அமைச்சகத்திடமும் பதில் இல்லை.
இந்திய விமானப்படையிடமும்
பதில் இல்லை..
இப்படியொரு கேலிக்கூத்து உலகில் எந்த நாட்டிலாவது நடக்குமா ?
World Cup Final Match-ன் போது
இலவச நிகழ்ச்சியாக தாராள மனதுடன் Air show-வை நடத்திக்கொடுத்துள்ளது இந்திய விமானப்படை
எவ்வளவு பெரிய அத்துமீறல்,
அதிகார துஷ்பிரயோகம்..!
நம்ப முடிகிறதா உங்களால்,
நம்புங்கள்..
இந்த நாட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது
21/22
youtu.be
ஒருவேளை உலக கோப்பையை இந்திய அணி வென்று விட்டால்,
அதை வைத்து ஏதாவது பெருசா, Drama போட்டு
அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற எண்ணத்தில், இந்த நாட்டின் விமானப்படையை சட்டவிரோதமாக பயன்படுத்தும் அளவிற்கு துணிந்துவிட்டனர்
மிகப்பெரும் வரலாற்றுப்பிழையை செய்துள்ளது ராணுவ அமைச்சகம்
உண்மையில்,மத்திய அரசின்
அராஜகமான இந்தப்போக்கு அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டும் எதிரான செயல் அல்ல,,
ஒட்டுமொத்த நாட்டிற்கே
மிக மிக ஆபத்தானது…
22/22

جاري تحميل الاقتراحات...