கச்சத்தீவைப் பற்றிய தெளிவான விவரங்களோடு இந்தக் கட்டுரையை TOI நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குச் சொந்தமான இந்தத் தீவு ஏன் காங்கிரஸ் அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது என்பது புரியாத புதிர். சொல்லப்போனால் தலைமன்னார் வரைக்குமான பகுதி ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குச் சொந்தமானது என்பதைக் கூத்தன் சேதுபதியின் செப்பேடு சொல்கிறது. மேலும்
சுதந்தரம் அடைந்ததற்குப் பிறகும் கச்சத்தீவு சமஸ்தானத்திற்குச் சொந்தமாகவே இருந்தது என்பதை இந்த ஆவணம் உறுதிப்படுத்துகிறது. முகம்மது மீராசா மரைக்காயர் என்பவர் ராமநாதபுரம் திவானிடம் குத்தகை உரிமை கோரி கையெழுத்திட்ட ஒப்பந்தம் இது.
ஜமீந்தார் ஒழிப்புச் சட்டத்தை அடுத்து கச்சத்தீவு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பல எதிர்ப்புகளை மீறி அன்றைய காங்கிரஸ் அரசு இதை இலங்கைக்கு 1974ல் அளித்தது.
ஜமீந்தார் ஒழிப்புச் சட்டத்தை அடுத்து கச்சத்தீவு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பல எதிர்ப்புகளை மீறி அன்றைய காங்கிரஸ் அரசு இதை இலங்கைக்கு 1974ல் அளித்தது.
அப்போது அதைக் கடுமையாக எதிர்த்தது (அப்போது ஜனசங்கமாக இருந்த) பாரதீய ஜனதாக் கட்சியின் வாஜ்பாய் அவர்கள். பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி இப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இப்படி தமிழர் உரிமைக்குப் போராடியது பாஜக என்பதே வரலாறு சொல்லும் செய்தி.
جاري تحميل الاقتراحات...