வணக்கம் தோழர்களே தேர்தல் குறித்து ஒரு விழிப்புணர்வு பதிவுதான் இது. எந்த ஒரு அரசியல்வாதியையோ அரசியல் கட்சியையோ ஆதரித்து நான் இந்த பதிவை இடவில்லை. ஆனால் யாரை ஆதரிக்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்தவே இந்த பதிவை செய்கிறேன்.
ஒரு கட்சி மதத்தின் பெயராலோ சாதியின் பெயராலோ கடவுளின் பெயராலோ வேறு எதன் பெயராலோ மக்களை பிளவுபடுத்துமானால் அது ஒரு கீழ்த்தரமான கட்சியாக தான் இருக்க முடியும். மனிதர்களை பிறப்பால் உயர்வு தாழ்வு கூறுவதோ, செய்த செய்கையால் அல்லாமல் பிறப்பினால் மட்டும் ஒருவரை உயர்ந்த இடத்தில் வைப்பதோ
யாருக்கும் பயன் அளிக்காது குறிப்பாக யாரை உயர்த்தி பேசினார்களோ அவர்களையே செம்மறி ஆட்டு மந்தை போல் வழிநடத்த மட்டுமே இந்த மாதிரியான பிரிவினை போக்குகள் பயன்படுமே தவிர மற்றபடி அந்த பெருமை பேசிக்கொள்ளும் சாதிகளுக்கு கூட அது எந்த விதத்திலும் பயனளிக்காது. மக்களின் நலனை யோசிக்காமல்
மக்களுக்கு தேவையான கல்வி, மருத்துவம், பொருளாதாரச், வேலை வாய்ப்பு, தனிமனித சுதந்திரம், ஆரோக்கியமான வாழ்வு இதைப் பற்றி பேசாமல் கடவுள், ஜாதி, மதம், பிரிவினை, உயர்வு, தாழ்வு, அவதூறு இவைகளை பரப்பி அரசியல் செய்யும் எந்த கட்சியையும் ஆதரிக்காதீர்கள்
இதுபோன்ற பிரிவினைகள் மக்களில் பின்னோக்கி இழுக்குமே தவிர்த்து எந்த வகையிலும் யாருடைய முன்னேற்றத்திற்கும் உதவாது குறிப்பாக இதை வைத்து அரசியல் செய்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் கீழ்த்தரமான அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இது பலனளிக்குமே தவிர சாமானியர்களுக்கு எவ்வித நன்மையையும்
ஏற்படுத்தாது பிரிவினை பேசி மக்களை திசை திருப்பும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலன் மீது சிறிதும் அக்கறையோ கருணையோ கிடையாது நாம் கடந்த காலங்களில் கடுமையான காலகட்டங்களை கடந்து வந்திருக்கிறோம் பண மதிப்பிழப்பின் போது வரிசையில் நின்று செத்ததெல்லாம் நாம் தானே
எந்த அரசியல்வாதியோ பெரும் பணக்காரர்களோ வரிசையில் நின்று சாகவில்லை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பொழுது நடந்து நடந்து தேய்ந்த பாதங்களுக்கு சொந்தக்காரர்கள் நாம் தானே எந்த அரசியல்வாதியும் இதனால் பாதிக்கப்படவில்லையே விவசாய போராட்டம் நிகழ்ந்த போது பலியானவர்கள் நாம் தானே
எந்த அரசியல்வாதியும் அதனால் பாதிக்கப்படவில்லையே ஜிஎஸ்டியால் வெளியேற்றத்தை சமாளிக்க முடியாமல் சிறு குறு தொழில்களை இழந்தது நாம் தானே எந்த அரசியல்வாதியும் அதனால் பாதிக்கப்படவில்லையே அப்படி இருக்க நம்முடைய வாழ்வாதாரத்தில் இருந்து உயிர் வரையில் எந்த அக்கறையும் காட்டாத இந்த அரசியல்
வாதிகளிடம் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள நமக்கு இருக்கும் கடைசி ஆயுதம் ஒற்றை ஆயுதம் நம்முடைய அரசியலமைப்பு சட்டமும் அதை காப்பாற்ற நாம் அளிக்கும் வாக்கு மட்டும் தான் உள்ளது நம்மை காக்க அரசியலமைப்பு சட்டம் உள்ளது என்றால் அதை காப்பது நம்முடைய தலையாயக் கடமை
சிந்தித்து வாக்களியுங்கள் உங்களுடைய கருத்து உரிமைகள் பறிக்கப்படலாம் உங்களுடைய குடியுரிமைகள் பறிக்கப்படலாம் எழுத்துரிமை நீங்கள் வாழ்வதற்கு உண்டான எல்லா உரிமைகளும் பறிக்கப்படலாம் அதனால் தனிநபர் துதி பாடுவதை விட்டுவிட்டு உங்களுக்காக சிந்தியுங்கள்
உங்கள் பிள்ளைகளுக்காக மனைவிக்காக தாய் தந்தையருக்காக உடன் பிறந்தவர்களுக்காக உங்கள் நண்பர்களுக்காக உங்கள் சமுதாயத்துக்காக சிந்தியுங்கள் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக வாழ்வதற்கு களையப்பட வேண்டிய முக்கியமான விஷயம் பிரிவினை தான் அந்த பிரிவினையை பேசிய உங்களுக்குள் வெறுப்பை விதைக்கும்
அரசியலை எதிர்த்து வாக்களியுங்கள் அன்பை அனைவருக்கும் பரிசாக கொடுங்கள் வெறுப்போ பொறாமையோ கெட்ட எண்ணங்களோ இல்லாமல் அடுத்த தலைமுறையை வளர்க்க வேண்டிய பொறுப்பில் நாம் இருக்கிறோம் என்றால் முதலில் நாம் நம்மை சரி செய்து கொள்ள வேண்டும் ஒற்றுமை மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்
சிந்தித்து வாக்களியுங்கள் பாசிச சர்வாதிகார கட்சிகளை இந்த நாட்டிலிருந்து அப்புறப்படுத்துங்கள் நன்றி
جاري تحميل الاقتراحات...