இலையில் சோறு. என்ன பக்தி!! எங்கெங்கோ புண்ய நதி, ஸ்தலம், கோவில் குளம் என்று தேடி ஓட வேண்டாம். உட்கார்ந்த இடத்திலேயே ஸ்ரீ கிருஷ்ணனை, பாண்டுரங்கனை, இராமனை நினைத்தால் அந்த சகல புண்ய பலனும் கிட்டும் நாமஜபம் தான் கலியுகத்தில் கண் கண்ட மருந்து. இது ரகசியம் இல்லை. யாவரும் அறிந்தது. பின்
ஏன் மனம் அதில் செல்வதில்லை? அவர் மனத்தில் பாண்டுரங்கன் சதா சர்வகாலமும் இருந்தான். இன்பம் தந்தான். ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு பட்டுத்துணி வியாபாரி வந்தான். விட்டலன் கோவிலுக்கு சென்றான். அந்த நேரம் பார்த்து திடீரென்று விடாத இடி இடித்து பெரிய மழை. வானம் பொத்துக்கொண்டு சளசளவென்று
பெய்த மழையில் தரை மண்ணெல்லாம் சேரும் சகதியுமாகியது. வியாபாரியின் பார்வை தூரத்தில் இதெல்லாம் சற்றும் லக்ஷியம் செய்யாத ஒரு சாமியார் மேல் சென்றது. நமது ப்ரேமானந்தர் தான். பாண்டு ரங்கனை நோக்கி கோவில் வாசலில் நமஸ்காரம் செய்துகொண்டிருந்தார். ஒன்றா இரண்டா. வழக்கமான 700 ஆயிற்றே! அடடா!
என்ன பக்தி இவருக்கு? மழை, சேர் சக்தி எதையுமே லட்சியம் செய்யவில்லையே! சந்தோஷத்தோடு அல்லவா நமஸ்காரங்கள் விடாமல் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தான். மழை விட்டது. கையில் வைத்திருந்த மூட்டையிலிருந்து ஒரு நல்ல
விலையுயர்ந்த பட்டு வேஷ்டியை எடுத்தான் வியாபாரி. அதை யோகியிடம்
விலையுயர்ந்த பட்டு வேஷ்டியை எடுத்தான் வியாபாரி. அதை யோகியிடம்
கொடுத்தான். "சுவாமி, தாங்கள் இதை உடுத்திக் கொள்ளுங்கள்" என்றான். நமஸ்காரம் பண்ணினான். அவர் பார்த்தார். தலையை ஆட்டினார். "எனக்கெதற்கு இதெல்லாம்? கிழிசல் துணி ஏதாவது இருந்தால் கொடு. அது போதுமே. நான் அன்றாடம் பிக்ஷை எடுத்து அதில் கிடைப்பதை உண்பவன். அது தொந்தரவு இல்லாமல் என்னுடைய
வேலையை செய்ய உதவும்.''
''இல்லை சுவாமி, இது நீங்கள் உடுத்திக் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசை."
"தப்பு அப்பனே, இந்த பட்டு வேஷ்டியை பாண்டுரங்கனுக்கு சாற்றினால் அவனை கண்ணாரப் பார்க்கலாம். அவன் உனக்கு சர்வ மங்களமும் தருவான்."
வியாபாரி காதில் இது ஏறவில்லை. அன்பு மிகுதியால், தானே
''இல்லை சுவாமி, இது நீங்கள் உடுத்திக் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசை."
"தப்பு அப்பனே, இந்த பட்டு வேஷ்டியை பாண்டுரங்கனுக்கு சாற்றினால் அவனை கண்ணாரப் பார்க்கலாம். அவன் உனக்கு சர்வ மங்களமும் தருவான்."
வியாபாரி காதில் இது ஏறவில்லை. அன்பு மிகுதியால், தானே
அவர் இடுப்பில் அந்த பட்டு வேஷ்டியை கட்டிவிட்டான். யோகி திரு திருவென்று விழித்தார். அந்த பள பள துணியை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டார். நமஸ்காரம் பண்ணும் போது மண் பட்டு அழுக்காகாமல் பார்த்து கொள்வது கஷ்டமாக இருந்தது. வழக்கமாக சுலபமாக சந்தோஷத்தோடு பண்ணும் நமஸ்காரம் இப்போது
தடைபட்டது. வெயில் ஏறியது. வியர்த்துக் கொட்டியது. பசியை அடக்கிக் கொண்டு பண்ண வேண்டிய நமஸ்காரங்களை பண்ணினார். முடியவில்லை. எண்ணம் பட்டு வேஷ்டி மீது சென்றது இடைஞ்சலாக இருந்தது. நமஸ்காரம் முடியாமல் சாப்பாடு கிடையாதே! வியர்த்து களைத்தார். எனக்கு இன்று ஏன் இப்படி ஒரு தண்டனை?
புரியவில்லையே? அடேடே எப்படிப்பட்ட சர்வ முட்டாள் நான்? இந்த பட்டு வேஷ்டி அல்லவோ என்னை நிலை குலைய வைத்து விட்டது. காரியம் கெட்டு குட்டிச் சுவராகி விட்டதே! பூரண சந்திரனை ராகு பிடித்து கவ்வியது போல் இந்த வேஷ்டி என்னை விழுங்கி விட்டதே! எனக்கும் விஷ்ணுவுக்கும் இடையே ஒரு வேஷ்டியா
எதிரியானது? இந்த வேஷ்டிக்கு இடம் கொடுத்த இந்த உடம்புக்கு ஒரு சரியான தண்டனை உடனே கொடுத்தாக வேண்டுமே என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, சரி காட்டுக்கு செல்வோம். நிறைய காய்ந்த கட்டைகளை தீ மூட்டி தீக்குளித்தால் தான் சரியாகும். இல்லை பேசாமல் ஏதாவது புண்ய நதியில் மூழ்கி இந்த உடலை
விடலாமா? விட்டலன் அப்போதுதான் மன்னிப்பான். கோவில் வாசலில் அமர்ந்து எதைச் செய்யலாம் என்று யோசித்தார். அந்தப் பக்கமாக ஒரு ரெட்டை மாட்டு வண்டிக்காரன் வந்தான். அவனை நிறுத்தினார். "உனக்கு ஒரு விலை உயர்ந்த இந்த பட்டு வேஷ்டி தரேன். உன் ரெட்டை மாட்டையும் அவற்றை பிணைத்திருக்கும்
கழுத்தில் இருக்கிற கட்டையோடு தருகிறாயா?" தனது தொத்தல் மாட்டால் இவ்வளவு பெரிய வருமானம் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆச்சர்யத்தோடு ஒப்புக்கொண்டான். "என் கால் இரண்டையும் இந்த கட்டையில் கட்டு." அவன் யோசிக்க, "சொன்னதைச் செய்" என்றார் யோகி. கால்கள் இரண்டையும் இரண்டு
மாடுகளுக்கும் இடையே கட்டையில் பிணைத்தான். "மாட்டை விரட்டு!"சுளீர் என்று சாட்டை யடி விழுந்ததும் ரெண்டு மாடுகளும் ஓடின. இடையே கட்டையில் யோகி புரண்டு கொண்டு தொடர்ந்தார். மாடுகள் தலைதெறிக்க ஓடின. நிற்கவே இல்லை. யோகியின் உடல் கிழிந்தது. ரத்தம் ஆறாக பெருக சதை பிய்ந்து கொண்டே வந்து
கடைசியில் வெறும் எலும்புகள் மட்டும் தேயும் நிலை. அவர் உயிர் கொஞ்சம் இன்னும் ஊசலாடிக் கொண்டிருந்தது. மனம் பூரா "விட்டலா!" என்றே நினைவில் ஆழ்ந்தது. மாட்டுக்காரன் ஓடி வந்தான். அவன் கண்களில் நீர் ஆறாக வழிந்தது. "என்ன காரியம் செய்தீர்கள்? இதை ஏன் என்னைச் செய்யச் சொநீர்கள்?" என்றான்.
அவர் கடைசி நிமிஷ நினைவில் இருந்தார். மாட்டுக்காரன் முகம் லேசாக தெரிந்தது. பேச்சு வரவில்லை. மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக அடங்க முயன்றது. காலை கட்டையில் இருந்து அவிழ்த்தான் மாட்டுக்காரன். அவரை விடுவித்து மடியில் போட்டு புண்களையும் ரணங்களையும் அந்த பட்டு வேஷ்டியாலேயே துடைத்தான். "ஏன்
இப்படிச் செய்தீர்கள்?" என்று மீண்டும் அவன் அவரைப் பார்த்து கேட்டபோது, அவன் கண்களில் கண்ணீர் ஆறாக இன்னும் ஓடிக்கொண்டிருந்தது. யோகி அவனைப் பார்த்தார். "விட்டலா நீயா நீயா?'' என்றார். அவன் அவரை அணைத்துக் கொண்டான்.
جاري تحميل الاقتراحات...