vijaychakkaravarthy
vijaychakkaravarthy

@drkrvcvijay

7 تغريدة 23 قراءة Feb 29, 2024
Fatty liver treat பண்ணணுமா வேண்டாமா?
Liverல்(கல்லீரல்) கொழுப்பு சேர்தல் தான் fatty liver என்கிறோம்..உடம்பில் எங்கு கொழுப்பு சேர்ந்தாலும் அது ஒரு inflammation (வீக்கம்) உண்டாக்கும்.. (இரத்த குழாயில் கொழுப்பு சேர்ந்தால் அதில் inflammation ஏற்பட்டு heart attack
ஏற்படும்..அதே போல் liverல் சேர்ந்தால், வருடங்கள் ஆக ஆக (10-20 yrs) அதனுடைய பிரச்சனை (liver failure) ஏற்படும் அல்லது liver cancerஆக மாறலாம்...
ஆக, 10-15 yrs பெரிய symptoms தராத இந்த fatty liverஐ,உடனே கட்டுப்படுத்த வேண்டும்…
Plus, Diabetes, obesity, cholestrol,
மது பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த fatty liver நோய் வந்தால், சீக்கிரமே அது மோசமாகும் சூழ்நிலை உண்டாகும்..
ஏன் இந்த காலகட்டத்தில் இது முக்கியம்…?
முன்னர் 50வயதுகளில் வந்த இந்த fatty liver, உண்மையான பிரச்சனை கொடுக்க 10-15 yrsஆனது…முதுமையில் உள்ள வியாது என கண்டுகொள்ளவில்லை…
ஆனால் இப்போது 20-35வயதுக்குள்ளே நிறைய பேருக்கு வந்துருப்பதால், அவர்களுக்கு 40-50வயதில் பிரச்சனை அதிகமாகும்…
சரி, fatty liver scan reportல் வந்தால் என்ன செய்வது,?
Liver function test முலம் SGOT SGPT கண்டறிய வேண்டும்.. FIB 4 index ( google செய்தால் ஒரு calculator கிடைக்கும்)
மற்றும் fibroscan எடுத்து எந்த stageஅல் உள்ளது என தெறிந்து வேண்டும் அதற்குறிய மருந்து எடுக்க வேண்டும்( நவீன மருந்துகள் வந்துள்ளதால், எளிதில் கட்டுப்பாட்டில் வைக்கலாம்)..
மிக மிக முக்கியம் :
1. Weight reduction.. இதுதான் நிரந்தர தீர்வு
2. Carbohydrate restrictions and
avoiding processed foods
3. Sugar and cholestrol control
4. Avoid alcohol
மொத்தத்தில் உடல் பருமன், சுகர் , கொழுப்பு போன்றவற்றின் பிற்கால liver damage தான் இந்த fatty liver…
நிறைய மாத்திரைகள் நிறைய டாக்டர்கள் பரிந்துரைத்தாலும், omeg 3 fatty acids, tocoferols , Ppar agonists
போன்ற ஒரு சிலதுக்குதான் வேலை செய்யும்.. மற்ற மருந்துகள் பெரிதாக ப்ரயோஜனம் இல்லை..
இந்த fatty liverஐ இளம் வயதில் கண்டு கொள்ளவில்லை என்றால், முதுமை சீக்கிரமாக வந்துவிடும்

جاري تحميل الاقتراحات...