அன்பெழில்
அன்பெழில்

@anbezhil12

10 تغريدة 32 قراءة Feb 24, 2024
#ஜாதகக்_கட்டங்கள்
எவர் ஒருவர் சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ, அவர்களுக்கு #நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது. #அப்பாவை மரியாதையாக நடத்தவில்லை என்றால், அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை அவருக்கு
கொடுக்கவில்லை என்றால், திருமணம் தள்ளிப்போகும். வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது. ஏனென்றால் #அப்பா ஸ்தானத்தை குறிப்பது #சூரியன்
#அம்மாவை மதிக்கவில்லை என்றால், அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால், அவர்களை அவமானப்படுத்தி பேசினால்,
கட்டாயம் அழகு
குறைய ஆரம்பிக்கும். அறிவாற்றல் மங்கிப் போகும். குழப்பமான வாழ்க்கை தொடங்கும். மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால் #அம்மா ஸ்தானத்தை குறிப்பது #சந்திரபகவான்.
கணவனாக இருந்தால், வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடு தான் நடத்த வேண்டும். மனைவிக்கு மரியாதை இல்லை என்றால் வீட்டில்
மகாலட்சுமி இல்லை. வீடு, மனை, வாகனம், சொத்துபத்து சந்தோஷமான வாழ்க்கை, எல்லாவற்றையும் பெற வேண்டும் என்றால், மனைவிக்கு மரியாதை கொடுக்கவேண்டும். #மனைவி இடத்தை குறிப்பது #சுக்கிரன்.
மனைவியாக இருந்தால் கணவருக்கு கட்டாயம் மரியாதை கொடுக்கவேண்டும். #கணவர் இடத்தை குறிப்பது #குரு.
வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவ, சந்தோஷம் நிலைத்திருக்க கட்டாயம் மனைவிமார்கள், கணவனை மதிக்க வேண்டும்.
#தாய்மாமன் ஸ்தானத்தை குறிப்பவர் #புதன் தாய்மாமன் மட்டுமல்ல #அத்தை ஸ்தானத்தையும் குறிப்பதும் புதன் பகவான்.
குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், தாய்மாமன்
அத்தை போன்ற சொந்த பந்தங்களை மதிப்போடு நடத்த வேண்டும்.
#சகோதர சகோதரிகளை இழிவாகப் பேசினால் #செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் கிடைக்காது. ஆடம்பர பொருட்களை வாங்கி, நிலம் வீடு போன்ற சொத்துக்களை வாங்கி, கட்டாயம் சேர்க்க முடியாது. வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும். இது சகோதர
சகோதரிகளுக்கும் பொருந்தும். கணவனாக இருந்தால், மனைவியின் சகோதரர் சகோதரிகளையும் மதிக்கவேண்டும். மனைவியாக இருந்தால் கணவரின் சகோதர சகோதரியையும் மதிக்க வேண்டும்.
அடுத்ததாக #பாட்டிமார்களும்_தாத்தாக்களும். இவர்கள் இல்லை என்றால் நம் வாழ்க்கையில் நல்லது கெட்டது சொல்வதற்கு ஆளே கிடையாது.
#ராகு_கேதுவிற்கு உரியவர்கள் அவர்கள். ஆகவே, இவர்களை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும். முதியவர்களை கஷ்டப்படுத்தினால், நாமும் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதுதான்.
ஆக மொத்தம் உறவினர்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் சண்டை போட்டாலும் ஓருவருக்கொருவர் பார்க்காமல் பேசாமல்
இருப்பதை தவிர்த்து அவர்களுடன் அன்புடன் பழகி அவர்களையும் சந்தோஷப்படுத்தி அதன்மூலம் நாமும் சந்தோஷமாய் வாழ்வோம். நவகிரகங்களும் சந்தோஷப்பட்டு நம் தோஷங்களை களைந்து நமக்கு சந்தோஷத்தைக் கொடுப்பர். ஆக 12 கட்டங்களும் 9 கிரஹங்களும் நம்மை சுற்றி நம் வீட்டில்தான் என புரிந்து நடந்தால்
வாழ்க்கை சுபீக்ஷமாக இருக்கும் நிச்சயமாய்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

جاري تحميل الاقتراحات...