யார் இந்த ராவணன் ?
ராவணன் தமிழன், தமிழ் நிலத்திற்கு உரியவன் என்ற பொய் நீண்ட காலமாக இங்குள்ள சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. நம்மவர்களின் பரம்பரை நம்பிக்கையான வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற கருத்திற்கு ஏற்ப, ஆங்கிலேயர்களால் இட்டுக்கட்டப்பட்ட ‘ராமாயணம் என்பது ஆரிய-திராவிடப் போர்’ என்ற கட்டுக்கதையை அப்படியே அவர்கள் நம்புவதாலும் அது தீராவிடர்களின் அஜெண்டாவுக்கு உறுதுணையாக இருப்பதாலும் இந்தத் திரிபுவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உண்மையில் ராவணன் என்பவன் யார் ?
ராவணனைப் பற்றி நமக்குச் சொல்லும் குறிப்புகள் அனைத்தும் ராமாயணத்திலிருந்தும் புராணங்களிலிருந்தும் கிடைப்பவையே என்பதை நினைவுபடுத்திக்கொள்வோம். அவை சொல்வது என்ன ?

உலகை இறைவன் படைத்து அதில் உயிர்களைப் படைப்பதற்காக பிரம்மனை உருவாக்கினான். பிரம்மனும் முதலில் தனது மனத்தால் நினைந்து பிரஜாபதிகளைப் படைத்தான். அப்படிப்பட்ட பிரஜாபதிகளில் ஒருவர்தான் புலஸ்தியர். சப்த ரிஷிகளில் ஒருவராகக் கருதப்படும் இவர் தவ வலிமை மிக்கவர். இவரது மைந்தர்கள் தான் அகஸ்தியரும் விஸ்ரவரும். இருவரும் தந்தையைப் போலவே பெரும் தபஸ்விகளாக இருந்தனர். அகத்தியரைப் பற்றி நமக்கெல்லாம் தெரியுமென்பதால் விஸ்ரவரைப் பார்ப்போம்.
விஸ்ரவரின் தவ வலிமையைப் பற்றி அறிந்த சப்தரிஷிகளில் இன்னொருவரான பரத்வாஜர் தன் மகளான இலவிதாவை விஸ்ரவருக்கு மணமுடித்து வைத்தார். இவர்களுக்கு மகனாகப் பிறந்தவர்தான் குபேரன். தன் குலமூத்தோனான பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்து பெரும் செல்வத்தையும், புஷ்பக விமானம் ஒன்றையும் பெற்ற குபேரன், தேவர்களுக்காக விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட இலங்கை எனும் நகரைத் தனதாக்கிக்கொண்டு அங்கு ஆட்சி செய்து வந்தார்.

விஸ்ரவரின் புகழைப் பற்றி கேள்விப்பட்ட இன்னொருவர் அசுர குல அரசனான சுமாலி. தன் மகளான கைகேசியை அவரிடம் அனுப்பி, அவரை மயக்கி மணம் புரியச் செய்கிறார். இவர்களுக்குப் பிறந்தவர்கள் தான் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பணகை ஆகியோர். தன் பேரானான ராவணனை, குபேரனைப் போலவே பிரம்மனை நோக்கித் தவம் செய்யத் தூண்டினார் சுமாலி. பிரம்மனிடமிருந்து அளவற்ற வரங்களைப் பெற்ற ராவணன் செய்த முதல் வேலை, தன் சகோதரனான குபேரன் மேல் போர்தொடுத்ததுதான். குபேரனிடமிருந்து இலங்கையைப் பறித்துக் கொண்டதுமட்டுமல்லாமல், புஷ்பகவிமானத்தையும் எடுத்துக்கொண்டு குபேரனை இலங்கையை விட்டுத் துரத்தி விட்டான். இதுதான் ராவணன் இலங்கைக்கு வந்த கதை.
ஆக ராவணன் பெண்ணாசை கொண்டவன் மட்டுமல்ல, சகோதரத் துரோகியும் கூட. இப்படிப்பட்ட அடாத செயல்களைச் செய்ததனால்தான்
“முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்நாள்
எக்கோடியாராலும் வெலப்படாய் எனக்கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புயவலியும், தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர்பருகி, புறம் போயிற்று, இராகவன்தன் புனித வாளி”

இங்கு பரப்பப்படும் இன்னொரு கட்டுக்கதை ராவணன் பெரு வீரன், வெல்லப்படாதவன், சீதையைக் கவர்ந்தது தான் அவன் செய்த ஒரே தவறு, அதனால்தான் ராமனால் அவன் கொல்லப்பட்டான் என்பது. அதற்கு முன்பே ராவணன் சிலரிடம் வம்பிழுத்து அதனால் மூக்குடைபட்டான் என்பதே உண்மை.
முதலில் ராவணன் மோதத் துணிந்தது சிவபெருமானிடம். சிவனைச் சந்திக்க ராவணன் சென்ற போது, சிவனும் உமையும் பேசிக்கொண்டு இருந்த காரணத்தால் நந்தி தேவர் அவனை உள்ளே விட மறுத்தார். ஆத்திரமடைந்த ராவணன் அவரோடு சண்டையிட ஆரம்பிக்கவே, குரங்குகளால் இலங்கை அழியும் என்று நந்தி அவனுக்கு சாபம் கொடுத்தார். அப்போதும் அடங்காமல் கயிலை மலையை ராவணன் தூக்க முயன்ற போது, சிவன் தன் கால் கட்டை விரலால் மலையை அழுத்தினார். மலையின் அடியில் ராவணன் சிக்கிக்கொண்டான். பின்பு உடல் நரம்புகளை அறுத்து சாமகானம் பாடி, சிவபெருமானை வழிபட்டு பிழைத்து வந்தான்.

அடுத்து, ஒரு நாள் நர்மதை நதியில் ராவணன் குளிக்கச்சென்றான். அப்போது மகிஷ்மதியின் அரசனான கார்த்தவீர்யார்ஜுனன் தன் மனைவியரோடு நீராடிக்கொண்டிருந்தான். அவர்கள் கூட்டமாக நீராடி நதியின் வேகத்தைக் குறைத்துவிட்டதால் வெகுண்ட ராவணன், கார்த்தவீர்யனோடு போருக்குச் சென்றான். அவனை நன்றாகத் துவைத்து எடுத்த கார்த்தவீர்யன் தன் அரண்மனையின் மூலையில் கட்டி வைத்துவிட்டான். அதன் பின், ராவணனின் தாத்தாவான புலஸ்தியரின் வேண்டுகோளுக்கு இணங்க ராவணன் விடுவிக்கப்பட்டான்.
அதன்பின், ஒருநாள் நாரதரோடு உரையாடிக்கொண்டிருந்த ராவணன் வானர அரசனான வாலியின் வலிமை பற்றிக் கேள்விப்பட்டு அவனோடு சண்டையிடச் சென்றான். அச்சமயம் வாலி ஆற்றங்கரையில் தன் வழிபாடுகளை நிகழ்த்திக்கொண்டிருந்தான். ராவணனின் போர் அழைப்பைச் சிறிதும் சட்டை செய்யாமல் தன் வழிபாடுகளைத் தொடர்ந்த வாலியைக் கண்டு ஆத்திரமடைந்த ராவணன் அவன் வாலைப் பிடித்துத் தூக்க முயன்றான். வாலினால் ராவணனை வாரிச்சுருட்டிய வாலி அவனை அப்படியே தூக்கிச் சென்று மலைகள் தோறும் தாவித்திரிந்து ஏழு கடல்களிலும் நீராடினான். தண்ணீரில் முக்கி எடுக்கப்பட்டதால், திக்குமுக்காடிப்போன ராவணனை ஒருவழியாக தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று குழந்தை அங்கதனின் தொட்டிலில் பொம்மை போலத் தொங்கவிட்டான் வாலி. ஒருவழியாக அவனிடமும் சமாதானம் செய்து கொண்டு தப்பிப்பிழைத்து இலங்கை வந்து சேர்ந்தான் ராவணன். இந்நிகழ்ச்சியைத்தான் அங்கதன் ராவணனிடம் சொல்கிறான்
“முன்னொருநாள் ராவணன் என்பவனை வாலில் சுருட்டி மலைகள் தோறும் தாவித்திரிந்த இந்திரன் மகனான வாலியின் மைந்தன் நான்” என்றான் அங்கதன்.
ஆக ராவணன் வீரனும் அல்ல நல்லவனும் அல்ல. அவன் ஒரு அயோக்கியன். அவ்வளவுதான். அதனால்தான் தமிழ் நூல்கள் அனைத்தும் அவனை அரக்கன் என்று சொல்கின்றன

சைவ சித்தாந்த நோக்கிலும் ராவணன் நிராகரிக்கத்தான் படுகிறான்
facebook.com?
facebook.com?
جاري تحميل الاقتراحات...