@im_inba1 காலை வணக்கம்💙. என் மீது நம்பிக்கை வைத்து என்னிடம் பொறுப்பளித்த தோழருக்கு நன்றி🙏.
பொதுவாக தமிழ் சினிமாவில் வரக்கூடிய பெண் கதாபாத்திரங்கள் ஆணின் கற்பனையே பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் பெண் என்றால் பூ வைக்க வேண்டும் பொட்டு வைக்க வேண்டும் பெண் என்றால் ஆளுமை
பொதுவாக தமிழ் சினிமாவில் வரக்கூடிய பெண் கதாபாத்திரங்கள் ஆணின் கற்பனையே பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் பெண் என்றால் பூ வைக்க வேண்டும் பொட்டு வைக்க வேண்டும் பெண் என்றால் ஆளுமை
@im_inba1 செய்யக்கூடாது என்று பல படங்களில் வசனங்களாகவும் பாடல்களாகவும் வைத்து பெண்களை ஒடுக்கிய தமிழ் சினிமாக்கள் சில வருடங்களாக தான் பெண்ணை மதிக்கவும் பெண்ணை சக மனிதியாக பார்க்கவும் துவங்கியிருக்கிறார்கள் பெண் என்பவள் ஆணுக்காக படைக்கப்பட்டவள் போன்றும் பெண்ணின் உடல் ஆணுக்கான காட்சி பொருள்
@im_inba1 போலவும் காண்பித்ததில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கு உண்டு வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் ஆண் அடைக்கலமாகும் இடம் மதுவாகவும் மாதுவாகவும் காட்டப்பெற்றது ஆணின் சந்தோஷத்திற்காக பல பேர்கள் கூடி நிற்கும் இடத்தில் ஒரே ஒரு பெண்ணை துகிலுரித்து ஆட வைத்ததும், ஒரு பெண்ணை கணவனுக்கு சேவை
@im_inba1 செய்வதே நல்ல பெண்ணுக்கு அடையாளம் என காட்சிப்படுத்தியதும் இதே ஆணாதிக்கம் எண்ணம் கொண்ட ஆண்கள் நிறைந்த சினிமா துறைதான் ஆணுக்கு தேவை என்றால் ஒரு பெண் வேசியாக்கப்படுகிறாள் அதேபோன்று ஆணுக்கு தேவை என்றால் ஒரு பெண் அடிமையாக்கவும் படுக்கிறாள் ஆணின் தேவையை பொறுத்தே பெண்ணின் கதாபாத்திரங்கள்
@im_inba1 கட்டமைக்கப்பட்டு வந்தது. சில வருடங்களாக மட்டுமே அதிலும் மிக சொற்பமான படங்களில் மட்டுமே பெண் விடுதலையும் பெண்ணின் கல்வி பொருளாதார வளர்ச்சியும் பெண்களின் வெற்றியும் பெண்களின் அரசியல் காதல் போன்றவற்றை முதன்மை படுத்தியும் படங்கள் வர செய்தன. ஒருபுறம் பெண்ணை ஆடல் அரசிகளாக ஆக்கி பல
@im_inba1 கண்களுக்கு விருந்து வைத்த ஆணாதிக்க தமிழ் சினிமா இன்னொரு புறம் அச்சம் மடம் நாணம் கணவனுக்கு கீழ்ப்படிதல் குடும்ப பொறுப்புகளை ஏற்றல் காதல் கொள்ளாதிருத்தல் காமத்தை வெளிப்படுத்தாமல் இருத்தல் இவையெல்லாம் குடும்ப பெண்ணுக்கு உரிய அம்சங்களாக கட்டமைத்து வந்தது
@im_inba1 ஆக மொத்தத்தில் ஆணின் தேவைக்காக மட்டுமே பெண்கள் படைக்கப்பட்டிருப்பது போன்ற எண்ணம் கொண்டவர்களின் கைகளில் தான் சினிமா துறை இன்று வரையிலும் இருந்து கொண்டிருக்கிறது மிக சில நபர்களை தவிர்த்து இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்களின் தேவைகளை உணர ஆரம்பித்து விட்டார்கள்
@im_inba1 அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தெரியாத முட்டாள் ஆண்களின் கூட்டம் பெண்களை காம பொருளாக கருதிய கூட்டம் அவள் காமத்திற்கு மட்டுமே அடிமையானவள் என்று கட்டமைக்க பார்க்கிறது இவர்கள் காலம் காலமாக கட்டமைத்து வரும் கலாச்சாரங்கள் எதுவுமே ஆண்களை சார்ந்து இருப்பதில்லை முற்றிலும் பெண்ணின்
@im_inba1 பிறப்புறுப்பிலும் அவள் சுமக்கும் கருவிலும் கருப்பையிலும் மட்டுமே தேடிக் கொண்டிருக்கிறார்கள் நாகரிக வளர்ச்சி அடையாத மனிதனின் பயத்தால் வந்த பிதற்றல்கள் தான் இவை. வளர்ந்து வரும் போட்டி உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாத வளர்த்துக் கொள்ளமுடியாத ஆண்களின் பயம்தான் இந்த படத்தின்
@im_inba1 வசனங்கள் மூலமாக வெளிப்பட்டிருக்கிறது. அதில் சொல்லப்பட்ட கருத்தை இரண்டு விதங்களாக பார்க்கலாம் முதல்விதம்:பெண் என்பவள் காமத்திற்கு அடிமையானவள், மாட்டுக்கறி சாப்பிடும் ஆண் உறவு கொள்வதில் மிகவும் பலம் வாய்ந்தவனாக இருப்பான் அந்த பலம் மட்டுமே அவளை திருப்தி அடைய வைக்கும்,அதில் திருப்தி
@im_inba1 வேறு எந்த விஷயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டாள் கல்வியோ பொருளாதாரமோ ஒழுக்கமோ நடத்தையோ அறிவோ எதையுமே அவள் பொருட்படுத்தாமல் வெறும் காம இச்சைக்காக மட்டுமே ஒரு ஆணின் காலை சுற்றும் அடிமையாக கிடக்கிறாள் என்று கட்டமைக்கிறார்கள்
@im_inba1 இரண்டாவது விதம் ஒரு சாதிய ஆணின் பார்வையில் தலித் ஆண்களுக்கும் அவர்களுக்கும் இருக்கக்கூடிய வித்தியாசமே காம இச்சைகளை பூர்த்தி செய்வதில்தான் வேறுபடுவதாக உணர்கிறார்கள்.இதுவரையில் தமிழ் சினிமாக்கள் ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டு விட்டால் அவள் தன்னை விட்டு போக மாட்டாள் கற்பின்
@im_inba1 அடிப்படையில் தன்னிடமே இருப்பாள் என்றுதான் கூறி வந்தார்கள் ஆனால் முதல்முறையாக காம இச்சைகளை பூர்த்தி செய்துவிட்டால் அவள் தன்னைவிட்டு போகமாட்டாள் என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டுதான் இவ்வளவு நாட்களாக இதை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என்பதை வெளிப்படையாக உணர்த்தி இருக்கிறார்
@im_inba1 கள். இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் சாதிய இந்துக்களுக்கு தலித் ஆண்களின் மீது வரக்கூடிய கோபம் அவர்களுடைய உடல் அமைப்பு உணவு முறை உடைகள் இவை அனைத்தும் எரிச்சலை ஏற்படுத்துகிறது அதன் மூலமாக தங்கள் பெண்களை கவர்ந்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கிறது
@im_inba1 அதேசமயம் அவர்களுக்கு பெண்களைப் பற்றிய மதிப்பீடு என்னவென்றால் அவள் பேதையாகவும் அறியாமையில் மூழ்கி இருக்கும் பெண்ணாகவும் இருந்தால் அவள் தெய்வமாக்கி கொண்டாடப்படுகிறாள் மாறாத சிந்திக்க தெரிந்தால் ஒரு கேள்வி கேட்க தெரிந்தாலோ அவளை கேவலப்படுத்தவே இவர்கள் எண்ணுகிறார்கள்
@im_inba1 பெண் என்பவள் என்றும் காமத்தை தேடி அலைபவள் அதன் சுகத்தை ஒரு முறை அவள் அனுபவித்து விட்டால் அவளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாது அதனால் அவளுக்கு கடைசி வரை அது தெரியாமலே வைத்துக் கொள்வோம் என்பதில் தான் இவர்களின் வெற்றியே இருப்பதாக நம்புகிறார்கள்
@im_inba1 இவர்களுக்கு சக மனிதர்களை மதிக்கவும் தெரியாது பெண்ணை சமமென கருதவும் தெரியாது தனக்கான வாழ்க்கை துணையை கூட தேர்ந்தெடுக்க தெரியாத முட்டாளாக பெண்கள் இருப்பதாக நம்புகிறார்கள் ஆண்கள் ஆசை வார்த்தை கூறி பெண்களை ஏமாற்றுவதாக நம்புகிறார்கள்
@im_inba1 காம இச்சை இல்லாத ஆணும் கிடையாது பெண்ணும் கிடையாது ஆணும் பெண்ணும் இணைந்து சந்ததிகளை உருவாக்கும் அனைத்து உயிரினத்திற்குமே காமம் இன்றி அமையாதது அதை அசிங்கப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை தூக்கி கொண்டாட வேண்டிய அவசியமும் இல்லை
@im_inba1 காதலும் காமமும் இன்றியமையாதவை அதிலும் சுயமரியாதையுடன் கூடிய காதலும் காமமும் கட்டாய தேவை இதை எதிர்ப்பவர்கள் எதிர்த்துக் கொண்டே இருக்கட்டும் நாம் ஆதரித்துக் கொண்டே இருப்போம். நன்றி
جاري تحميل الاقتراحات...