12 تغريدة 11 قراءة Jan 12, 2024
#தமிழ்நாடு_அரசுப்_பேருந்து
1967இல் திமுக ஆட்சிக்கு வந்ததும் பேருந்துத் தடங்களை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றன.
கலைஞர் இரண்டாவது முறையாக முதலமைச்சரானதும் 1971இல் சோமசுந்தரம் குழுவை அமைத்தார்.
அக்குழு அளித்த பரிந்துரையின்படி 120 கி.மீ. மற்றும் அதற்கு அதிகமான
தொலைவு கொண்ட சாதாரண, விரைவுத் தடங்களை முதல் கட்டமாகவும்,
சென்னையுடன் இணைக்கப்பட்ட தடங்களை இரண்டாம் கட்டமாகவும்,
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தடங்களை மூன்றாம் கட்டமாகவும்
அரசுடைமையாக்குவது என்று முடிவுசெய்தது அரசு. அதன்மூலம் தமிழ்நாட்டில் பேருந்துகள், பேருந்துத் தடங்கள்
பேருந்துக் கழகங்கள் மெல்ல மெல்ல அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
அதைத் தொடர்ந்து 1956 கம்பெனிகள் சட்டத்தின்படி போக்குவரத்துக் கழகங்களைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியது.
அரசின் சார்பில் பல போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டதற்கு இதுதான் ஆரம்பப்புள்ளி.
1972 ஜனவரி 1 அன்று
முதன்முறையாக #பல்லவன்_போக்குவரத்துக்_கழகம் உருவானது.
தனியாரிடம் இருக்கும் பெரிய பேருந்துக் கழகங்களைக் கையகப்படுத்தத் தயாரானது அரசு.
ஐம்பதுக்கும் அதிகமான பேருந்துகளை வைத்திருக்கும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பேருந்துகளையும் சொத்துகளையும் கையகப்படுத்துவது ஆரம்பகாலத் திட்டம்.
346 பேருந்துகளை வைத்திருந்த #மதுரை_ரோட்வேஸ் நிறுவனம்,
திருச்சி, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களை இணைக்க #பாண்டியன்_போக்குவரத்துக்_கழகம் உருவாக்கப்பட்டது
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் செயல்படும் வகையில் இணைப்பு நேர்த்தியாகவும் கவனமாகவும் கையாளப்பட்டன
சேலம், தர்மபுரி மாவட்டங்களில் #கூட்டுறவு_மோட்டார்_சர்வீஸ் சங்கங்களால் நடத்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களில் இருந்த 46 பேருந்துகளைக் கொண்டு #அண்ணா_போக்குவரத்துக்_கழகம் உருவாக்கப்பட்டது
1973இல் தமிழ்நாடு பொதுப் பேருந்துகள் மற்றும் ஒப்பந்தப் பேருந்துகள் (கையகப்படுத்துதல்)
சட்டம் (Tamil Nadu Stage Carriages and Contract carriages (Acquisition) Act) என்கிற சட்டத்தைக் கொண்டுவந்தது தமிழ்நாடு அரசு.
அதன்படி, எந்த மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் உள்ளனவோ அங்கு அரசுடைமை நடவடிக்கையை அமல்படுத்துவது
அதன்பிறகு அடுத்தடுத்து ஏறுவரிசையில்
ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஐந்தாண்டுகளில் அரசுடைமையாக்கலை முழுமைப்படுத்துவது எனத் திட்டமிடப்பட்டது
நீலகிரியைச் சேர்ந்த 19 தனியார் நிறுவனங்களிலிருந்த 121 பேருந்துகள் #சேரன்_போக்குவரத்து_கழகம் என அரசுடைமையாக்கப்பட்டதுக்கு
எதிராக நீதிமன்றங்களில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன
விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், பேருந்துகளை அரசுடைமையாக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தைச் செல்லாததாக அறிவித்தது.
தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழ்நாடு அரசு. பத்தாண்டுகளுக்குப் பிறகு அந்தச் சட்டம் செல்லும் என்று அறிவித்தது
உச்ச நீதிமன்றம். வழக்கு நடந்துகொண்டிருந்த காலத்தில் பேருந்துப் போக்குவரத்தை அரசுடைமையாக்கும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
தீர்ப்புக்குப் பிறகு அரசுடைமையாக்கும் பணி வேகம் பிடித்தது.
பின்னாளில் வந்த ஆட்சியாளர்களும் அதில் கவனம் செலுத்தினர்
இப்படித்தான் தமிழ்நாட்டில் பேருந்துப் போக்குவரத்து தனியாரிடமிருந்து அரசின் வசம் வந்தது.
வலுவான இணைப்புச் சங்கிலி கொண்ட அமைப்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இன்று உருவெடுத்து நிற்பதற்குக் காரணம்,
திமுகவும் தலைவர் கலைஞரும் தான்‌.

جاري تحميل الاقتراحات...