𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩

@im_inba1

10 تغريدة 3 قراءة Jan 08, 2024
நான் ஆத்திகனாக இருந்த இள வயதிலேயே ராமர் எனக்கு உகந்தவராக இருந்ததில்லை. 'பெண்டாட்டிதான் தீக்குளிச்சி தன் கற்பை நிரூபிச்சுட்டா. சரி. புருஷன் ஏன் தீக்குளிக்கலை?' என்று அப்போதே என் அப்பாவிடம் கேள்வி கேட்டு திட்டு வாங்கி இருக்கிறேன். (போடா பிரம்மஹத்தி!)
அதற்குப் பிறகு வால்மீகி
ராமாயணத்தை ஆழமாகப் படிக்க நேர்ந்த பிறகு 'உதாரண புருஷர்' என்று புராணங்கள் கொண்டாடும் அளவுக்கு உதாரணமாக அவர் அப்படி என்ன சூப்பராக நடந்து கொண்டு விட்டார் என்பது புரிந்ததே இல்லை. மனைவியை சந்தேகித்தவர் மட்டுமல்ல, 'உனக்கு வேறு யார் கூட வேணுமோ, அவன் கூடப் போயிரு!' என்று அவளிடம்
பேசிக் காயப்படுத்தியவர். 'என் குடும்பப் பேரை பாதுகாக்கவே உன்னை காப்பாற்றினேன்,' என்றவர். வாலியை மறைந்திருந்து கொன்றவர். யாரோ ஒருவன் பேச்சைக் கேட்டு டென்ஷன் ஆகி, கர்ப்பவதியாக இருந்த மனைவியை மறுபடி காட்டுக்கு அனுப்பியவர். தன் பிள்ளைகளை தனதல்ல என்று சொல்லி ஏற்றுக் கொள்ள மறுத்தவர்.
அதனால் காயப்பட்ட சீதை ஏறக்குறைய தற்கொலைக்கு நிகராக ஒன்றை செய்து மடிந்த பிறகே அவளை பத்தினி என்று ஏற்றுக் கொண்டவர். வயித்தெரிச்சல் கொண்ட சில பிராமணர்கள் பேச்சைக் கேட்டு சூத்திரனாகப் பிறந்தும் தவமியற்றிய சம்பூகனை வெட்டிக் கொன்றவர்.
ஆணவக் கொலைக்கு உள்ளான அல்லது உடன்கட்டை
ஏற்றப்பட்ட பெண்களை குலசாமியாக மாற்றி, கடவுளாக வழிபடுவது இந்தியாவில் வழக்கம். அந்த மாதிரி சீதைக்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டால் அதில் கொஞ்சமேனும் நியாயம் இருக்கிறது. ராமனுக்கு அல்ல. ..
அது வெறும் புனை கதை தான் என்றாலும்...
அது பண்டைய காலத்து கதை ஏன் அதை இப்பொழுது பேச வேண்டும்
என்று சிலர் வாதிடலாம்...
ஆனால் நவீன காலத்திலும் பிரச்சினைக்குரியவராகவே தொடர்கிறார். வழக்கமாக சில கோயில்களில் விலங்கு பலியிட்டுதான் திறப்பு விழா நடத்துவார்கள். ஆனால் திறக்கப்படுவதற்கு பற்பல ஆண்டுகள் முன்பே 6000த்துக்கும் மேல் மனுஷ காவு வாங்கிய கோயில் அது. அந்த உயிர்களுடன்
சேர்த்து தேசத்தின் சகிப்புத்திறன், தேசத்தைக் கட்டமைத்த செக்யூலரிசம், உலகளவில் இந்து மதத்துக்கு ஓரளவு இருந்த மரியாதை அனைத்தையும் சேர்த்தே காவு வாங்கிய கோயில். வேறு ஒரு வழிபாட்டுத் தலத்தையும் அவர்களது நம்பிக்கைகளையும் உடைத்துப் போட்டு அங்கே ஆங்காரத்துடன் எழுந்து நின்ற கோயில்.
தெய்வம் என்று ஒன்று உண்மையிலேயே இருந்தால் அந்தக் கோயிலில் போய் அமர மறுக்கும். மாறாக, அப்படி ஏதாவது ஒரு தெய்வம் அங்கே அமரும் எனில் அது எனக்கான தெய்வமாக கண்டிப்பாக இருக்காது. கொஞ்சமேனும் நற்சிந்தனை, மானுடம், அறிவியல் பூர்வ சிந்தனை, அறநெறி கொண்ட எந்த மனிதனுக்கும் அல்லது
மனிதிக்குமான தெய்வமாக அது இருக்க வாய்ப்பே இல்லை. குரூரம், ஆங்காரம், கோபம், பழிவாங்கல், ஈகோ, tribalism போன்ற primordial ஆதி வேட்டையாடி குழுக்களுக்கான தெய்வம்தான் அது.
அங்கே நிஜமாகவே ஒரு தெய்வம் குடியேறினால் பத்தாயிரம் வருடங்களாக எந்த அறிவுப் பரிணாம வளர்ச்சியும் கண்டிராத
மனிதர்கள் அதைப் போற்றிக் கொண்டாடும் லெவலில்தான் அதுவும் இருக்கும். An apt god for the primordial foragers. Not for those who have managed to climb the cognitive ladder.
நன்றி தோழர் - ஸ்ரீதர் சுப்ரமணியம்
#Ayodhya
#NotMyGod

جاري تحميل الاقتراحات...