அறிவோம்கடை
அறிவோம்கடை

@arivomkadaioffi

5 تغريدة 3 قراءة Jan 06, 2024
#BudgetChairs #Ergonomicschair #OfficeChair #Jan6
இன்னிக்கு நாம பார்க்க போறது Office chair பற்றி தான் . நீங்க ரொம்ப நேரம் office அல்லது வீட்டில் உக்காந்து வேலை செய்யும் நிலையில் இருக்கீங்கனா கண்டிப்பா ஒரு நல்ல Ergonomics chair பயன் படுத்துவது தான் advisable.
அது என்ன Ergonomics chair ? ஏன் gaming chair வாங்கி office chair ஆக பயன் படுத்த கூடாது ? ஒரு chair க்கு இவ்ளோ செலவு செய்வது worth ஆ ? online ல வாங்குவது சிறந்ததா ? அல்லது showroom ல வாங்குவது சிறந்ததா ? ஒரு Ergonomics chair வாங்கும் போது அதுல என்ன specs எல்லாம் கவனிக்க வேண்டும் ? இப்படி எல்லாத்தையும் தெளிவா தெரிஞ்சிட்டு அப்புறமா உங்க முடிவு எடுங்க .
அது என்ன Ergonomics chair ?
Ergonomic chairs are specifically designed to fit your body in order to help you sit comfortably for long periods of time.
இன்னும் புரியும்படி எளிதாக சொல்லனும்னா ... நீங்க ஒரு uncomfortable position ல ரொம்ப நேரம் நின்னா அல்லது படுத்தா என்ன ஆகும் ? ஒன்னு கால் ல ரத்தம் கட்டும் அல்லது சுளுக்கு ஏற்படலாம். அதே மாதிரி தான் நீங்க உக்காரும் போது comfortable ஆன position ல உக்காரவில்லை என்றால் உங்க முதுகுதண்டுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் வர ஆரம்பிக்கும் . அதற்காக தான் இந்த Ergonomic chair வாங்கி பயன் படுத்த வேண்டும் . மற்ற chair கண்டிப்பா இந்த comfort கொடுக்காது . அல்லது நாம் வாங்கும் purpose solve செய்யாது .
ஒரு chair க்கு இவ்ளோ செலவு செய்வது worth ஆ ?
கண்டிப்பா ஒரு chair க்கு அதிக ஆயிரம் கொடுத்து தான் வாங்கனும் னு அவசியம் இல்லை . நம் work என்ன ? வீட்டில் இருந்து வேலை செய்ய போறீங்களா அல்லது office போய் வேலை செய்யனுமா ? ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் உக்காந்து பயன் படுத்த போறீங்க ? எந்த மாதிரி வேலை செய்ய போறீங்க? எல்லாத்துக்கும் மேல, உங்க உடம்பு ல எதாச்சும் backbone சமந்தமா பிரச்சனைகள் இருக்கா? இதை எல்லாம் மனதில் வைத்து தான் இதுல எவ்ளோ செலவு செய்யலாம் னு முடிவுக்கு வரனும் . 26 அல்லது 28 வயது வரைக்கும் தெரியாது , எவ்ளோ நேரம் உக்காந்து எப்படி வேலை செஞ்சாலும் உடல் support செய்யும். அதுவே 28 வயது தாண்டினால், நல்லா comfortable ஆ உக்காந்து வேலை செய்யலனா உடல் சோர்வடைய தொடங்கிடும் .
இப்போ என் மனைவி “Work From Home “ தான். ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரம் தான் உக்காந்து வேலை செய்வாங்க . அதனால அவங்க ரொம்ப அதிகமான விலையில் chair வேண்டாம் னு சொல்லிட்டு பத்தாயிரம் ரூபாய்க்குள் இருக்கும் ஒரு chair தான் சமீபத்தில் வாங்கினோம். இதே போல் உங்க வேலை நேரம் மனதில் வைத்து கீழ சொல்ல போகும் chair ல உங்களுக்கு பிடித்தது தேர்வு செய்யுங்க .
Online ல வாங்குவது சிறந்ததா ? அல்லது showroom ல வாங்குவது சிறந்ததா ?
நீங்க கடைக்கு போய் நேர்ல வாங்கும் போது “ Touch and Feel “ ஒரு பெரிய advantage . ஆனா வாங்கிட்டு வீட்டுக்கு போயிட்டா அவ்ளோ தான் . எதாவது பிரச்சனைனா சரி செஞ்சு தான் தருவாங்க . அதை மாற்ற அனுமதிக்க மாட்டாங்க . எதாவது தெரிஞ்ச கடையா இருந்தா ஒரு இரண்டு மூன்று நாளில் மாத்திக்கலாம் . ஆனா பத்து நாள் பயன் படுத்திட்டு மாற்றுவது என்பது சந்தேகம் தான் .
online ல வாங்கும் போது “10 Days Replacement Policy” இருக்கு . நீங்க முதுகு வலி , ஒரு நல்ல chair வாங்கலாம் னு கஷ்டப்பட்டு ஒரு chair வாங்கி ஒரு வாரம் பயன் படுத்தறீங்க. பரவலையே இந்த chair வாங்கி ரொம்ப Comfortable ஆ இருக்குனா அதையே continue செஞ்சுக்கலாம் . ஒரு வேலை உங்க முதுகு வலிக்கு அந்த chair செட்டே ஆகல, மேலும் அதிக வலியை தான் கொடுக்குதுனா 10 வது நாள் கூட Replace செஞ்சு வேற நல்ல மாடல் வாங்கிக்கலாம்.
ஒரு Ergonomics chair வாங்கும் போது அதுல என்ன எல்லாம் கவனிக்க வேண்டும் ?
· உங்கள் Chair ல நல்ல Adjustment Provision உள்ளதானு பார்க்கனும் (Height and Tilt Adjustment).
· Dimensions : எல்லா chair பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும் . ஆனா கண்டிப்பா dimensions மாறுபடும் . நாம் உட்காரும் பகுதி சின்னதா இருந்தா , ரொம்ப நேரம் உக்காந்து வேலை செய்யும் போது நமக்கு அதிக comfort கிடைக்காது , சீக்கிரமே கால் வலிக்க ஆரம்பித்து விடும் .
· Mobility : உங்கள் Chair ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வளவு வசதியாக நகர்த்த முடியுதானு பார்க்கனும் ?
· உங்கள் chair எந்த அளவிற்கு Lumbar support (கீழ் முதுகு ) அளிக்கிறது ?
· Backrest உங்கள் முதுகுக்கு போதுமான Comfort அளிக்கிறதா?
மிக முக்கியமா கவனிக்க வேண்டியது, நீங்க கால் தொங்க விட்டு உக்காரும் போது, உங்கள் கால் உங்க இடுப்புக்கு கீழ தான் இருக்கனும் . இல்லைனா ஆரம்பத்தில் நல்லா இருக்கும் , போக போக வலி எடுக்க ஆரம்பித்து விடும்.
நீங்க வாங்கும் chair : wheels ரொம்ப smooth ஆ இருக்கனும் , கீழ இருக்கும் Base – metal ல இருந்தால் ரொம்ப நாளைக்கு life வரும் .
நீங்க வாங்கும் chair ல Armrest மற்றும் headrest இருந்தால் கூடுதல் comfort கிடைக்கும் .
சரி இனிக்கு மார்க்கெட் ல இருக்கும் குறைந்த விலையில் (Below Rs.4000/-) கிடைக்கும் சிறந்த office chairs பற்றி மட்டும் பார்ப்போம் .
1. CELLBELL Desire C104 Mesh Mid Back Ergonomic Office Chair
நான் நேற்று premium chair பற்றி எழுதும் போதே budget chair பற்றி ஏகப்பட்ட பேர் comments ல கேட்டிருந்தீங்க. அதுல ஏகப்பட்ட பேர் ஏற்கனவே பயன் படுத்திட்டு இருக்கும் Brand இது தான்னு சொல்லி இருந்தீங்க . Amazon லயும் கிட்டதட்ட 16000 பேருக்கு மேல reviews கொடுத்திருக்காங்க .
Good Things :
· Affordable Price
· Metal Base for long life
· Two Inch Thick Foam cushion for long hours work
· Hydraulic 3 inch Height Adjustment
· Lumbar Adjustments : Lumbar adjustments can be pushed upward, down for better supports to the back
· Arm-rest : Padded Arm-rest
Drawback :
· No Headrest
· No Wheel Locks
· No Tilt position lock
Price : Rs.3899/-
Reviews : 4.3 * | 16,106 Ratings
நான் எப்பவும் சொல்றது தான். budget segment ல ஒரு பொருள் வாங்கும் போது premium category உடன் compare செய்ய வேண்டாம். நாம் கொடுக்கும் காசுக்கு எவ்ளோ worth னு மட்டும் பார்த்து தேர்ந்தெடுங்கள்.
Link To Buy :
amazon.in
2. ASTRIDE Ace Mid Back Office Chair
இன்னிக்கு பார்க்க போகும் லிஸ்ட் லையே இந்த chair தான் விலை குறைவான chair . ஆனா customer reviews எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு . சரி இந்த chair ல என்ன எல்லாம் Good Things மற்றும் Drawbacks பற்றி பார்ப்போம் .
Good Things :
BIONIC CURVE BACKREST - The design of the backrest is based on the natural curve of the human spine . பொதுவா ஒரு Ergonomics chair வாங்கும் போது நிறைய Youtubers இதை தான் சொல்லி இருந்தாங்க . நம் முதுகுல எப்படி natural ஆ Curve ஆ இருக்கோ . அதே மாதிரி chair உடைய வளைவும் இருக்கனும்னு .
Weight supports up to 100kgs
Back Tilt Adjustment with lock
Smooth Armrest
Good Rollers for mobility
Height adjustment with lock
Drawbacks :
No Headrest
Price : Rs.3499/-
Reviews : 4.3 * | 630 Ratings
CELLBELL ல இல்லாத lock option இதுல கொடுக்கறாங்க(Not like premium chair locks). குறைந்த விலையில் ஒரு நல்ல office chair வாங்கனும்னா இதை கண்டிப்பா consider செய்யலாம் .
Link to Buy :
amazon.in
3.beAAtho® Verona Mesh Mid-Back Ergonomic Desk Office Chair with Tilting Mechanism
கிட்டதட்ட நாம் முதலில் பார்த்த இரண்டு மாடல் போல தான் இந்த chair டிசைனும் ஆனா இதில் சில விஷயம் மட்டும் கூடுதல் சிறப்பா இருக்கு .
1. Light Weight : முதல் இரண்டு brand விட இதன் இடை குறைவு
2. Maximum Weight Recommendation : 110 kg
3. Tilt mechanism with lock option
4. Smooth 360 degree swivel
5. Height adjustment
6. Material : Metal base for long life
7. Only Budget model with 3 Years warranty
Drawback :
No Headrest
Price : Rs.3888/-
Reviews : 4.4 * | 6888 Ratings
முதல் இரண்டு மாடல்களை விட அதிக positive reviews இந்த chair தான் வாங்கி இருக்கு .
Link To Buy :
amazon.in
4. Green Soul Seoul Office Chair
கிட்டதட்ட 13,000 பேருக்கு மேல இந்த chair க்கு reviews கொடுத்திருக்காங்க . இதுல Built quality , specs எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. ஆனா கொஞ்சம் உடல் இடையுடன் இருப்பவர்களுக்கு இந்த chair செட் ஆகாது (Not more than 90 kg)
இவங்க chair dimension கவனித்து பார்த்தால் . Seating area size மற்ற மூன்று மாடல் chairs உடைய size விட குறைவு .
Price : Rs.3899
Reviews : 4.1 * | 13015 Ratings
Lean ஆக இருபவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை . ஆனால் கொஞ்சம் உடம்பு அதிகமாக இருக்கும் நபர்களுக்கு இந்த chair not recommendable .
Link To Buy :
amazon.in
இந்த பதிவின் தொடர்ச்சியாக Rs.4000 to Rs.10,000 price range ல இருக்கும் நல்ல office chairs பற்றி அடுத்த போஸ்ட் ல சீக்கிரமா பார்க்கலாம். நீங்க இதுல எதாவது பயன் படுத்திட்டு இருந்தா அதில் இருக்கும் நிறை, குறைகளை share செய்யுங்க.. நம்ம எல்லாருக்குமே தெரிஞ்சிக்க பயன் உள்ளதா இருக்கும் . நன்றி

جاري تحميل الاقتراحات...