Knowledge Hub
Knowledge Hub

@KalviSurangam

11 تغريدة Jan 04, 2024
Thread 🧵🧵
ஆன்லைனில் GSTIN விண்ணிப்பது எப்படி?
7 நாளில் உங்களுக்கான GSTIN எண்.
How to apply GSTIN Number online?
#GST #GSTIN #PAN #Aadhar #Application #online #Process #India
/1
நீங்கள் வணிகம் அல்லது தனிநபராக இருந்தால், குறிப்பிட்ட வணிகத்துக்கு நீங்கள் ஜிஎஸ்டி எண் மற்றும் ஜிஎஸ்டியை தாக்கல் செய்வது கட்டாயமாகும். அப்படியான முக்கிய எண்ணை பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
/2
GSTIN எண் பதிவுக்கு தேவைப்படும் ஆவணங்கள்:
✔️ வணிகம் அல்லது தனிநபரின் பான் கார்டு (GSTIN எண் பான் கார்டு எண்ணின் அடிப்படையில் இருப்பதால் கட்டாயம்).
✔️ ஆதார் அட்டை.
✔️ வணிகத்தின் பதிவு அல்லது ஒருங்கிணைப்புச் சான்றிதழ்.
/3
✔️ வணிகம் அல்லது தனிநபருடன் தொடர்புடைய கணக்குக்கான - வங்கி விவரங்கள்.
✔️ பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
✔️ உங்கள் வணிக டிஜிட்டல் போர்டுடன் புகைப்படம்.
✔️ வணிக முகவரிக்கான சான்று.
✔️ டிஜிட்டல் கையொப்பம்.
/4
பதிவு செய்வது எப்படி?
- நீங்கள் gst.gov.in என்ற GST-யின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை திறக்கவும்.
- அதில் இருக்கும் `Services’ என்ற பகுதியை Click செய்து, அடுத்ததாக Registration என்ற பகுதியை சொடுக்கவும்.
- அதனுள் New Registration-ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
/5
- New Registration ல் அங்கு உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து, Register செய்ய
✔️ உங்களுடைய பெயர்
✔️ பான் எண்
✔️ தொடர்பு எண்
✔️ மின்னஞ்சல் ஐடி
✔️ மாநிலம்
✔️ உங்களுக்குப் பொருந்தும் நிறுவன வகை
எனக் கேட்கும் அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்ய வேண்டும்.
/6
- உங்களுடைய தகவல்களை நிரப்பிய பின் உங்களுடைய தொடர்பு எண் மற்றும் Email-க்கு, OTP வரும்.
- அனுப்பப்பட்ட சரியான OTP உள்ளீடு செய்யவும்.
- அதைத் தொடர்ந்து, உங்கள் மொபைல் போன் மற்றும் மின்னஞ்சலில் Temporary Registration Number அனுப்பி வைக்கப்படும்.
/7
- அடுத்து, அந்த Temporary Registration Number-ஐ கொண்டு, உள்ளீட்டு விண்ணப்ப செயல்முறையின் பகுதி B-ஐ முடிக்க வேண்டும்.
- இதை உள்ளீடு செய்தவுடன் விண்ணப்பத்துக்கு தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.
- அடுத்து விண்ணப்பத்தின் பகுதி B-ஐ Submit செய்ய வேண்டும்.
/8
- சமர்ப்பித்த பிறகு, Aadhar authentication link உங்கள் மெயிலுக்கு அனுப்பப்படும்.
- அதை சரிபார்த்து உள்ளிட்டபின், உங்களுடைய ஆதார் டேட்டாவும், பான் டேட்டாவும் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
/9
- இதையடுத்து, உங்களுக்கு ARN எண் வைக்கப்படும்.
- GST அதிகாரி உங்கள் விவரங்களை 3 வேலை நாள்களுக்குள் சரிபார்த்து, ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்வார்.
- இல்லையெனில் 7 வேலை நாள்களுக்குள் GSTIN எண் வழங்கப்படும்.
/10
- அனைத்து விவரங்களும் ஆவணங்களும் பெறப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதும், படிவம் GST-REG 05-ன் படி வழங்கப்பட்ட காரணங்களுக்காக அதிகாரத்தின்படி, விண்ணப்பத்தை அங்கீகரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.
- கொடுக்கப்பட்ட ARN எண் கொண்டு உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை தெரிந்துகொள்ளலாம்.
🔚

جاري تحميل الاقتراحات...