அறிவோம்கடை
அறிவோம்கடை

@arivomkadaioffi

7 تغريدة 2 قراءة Jan 02, 2024
#CCTV #HomeSecurity #Jan2
ரொம்ப நாளா எழுதனும் னு draft செஞ்சுட்டே இருந்தேன். நிறைய தகவல் தேவைபட்டதால் நிறைய நாள் எடுத்துட்டேன் . பொதுவா CCTV னு ஒரே பதிவுல எழுதிவிட முடியாது . அதனால இதை இரண்டாக பிரித்து Home Security (Single Camera -Indoor and outdoor) மற்றும் நாம் எப்போதும் பார்க்கும் CCTV (multiple cameras – Indoor and Outdoor) என்று தனி தனியாக எழுதறேன். முதலில் நிறைய பேர் கேட்டிருக்கும் Home Security/Single Camera பற்றி மட்டும் இந்த பதிவுல பார்ப்போம்.
இப்போ 2024 ல நீங்க ஒரு Home Security CCTV வாங்க வேண்டும் என்றால் நீங்க என்ன எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் னு முதலில் பார்ப்போம் .
1. Purpose and Coverage : முதல் ல நீங்க என்ன காரணத்துக்காக வாங்கறீங்க னு தெளிவா இருக்கனும் . சில பேர் குழந்தையை பார்த்துக்க (Baby monitor) வாங்குவாங்க , சில பேர் Pets monitor செய்ய வாங்குவாங்க , சில பேர் வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்புகாக வாங்குவாங்க . அதனால உங்கள் காரணத்தை புரிந்து தகுந்த மாடல் வாங்க வேண்டும். அதே மாதிரி எவ்ளோ தூரம் cover செய்யனும் னு வாங்கும் முன்னையே தேசிடே செஞ்சிருங்க .
2. Image Quality : இந்த கேமரா MP பார்த்து confuse ஆக வேண்டாம் . நம் தேவையை பூர்த்தி செய்யும் அளவு MP இருந்தால் போதுமானது.
3. Night Vision
4. Storage and Recording Option
5. Remote monitoring: இப்போ வருகிற அனைத்து மாடல்கள் CCTV யும் remote monitoring அதாவது நீங்க எங்க இருந்து வேண்டுமானாலும் உங்க CCTV யில் நடப்பதை பார்த்து கொள்ளலாம் .
6. Motion Detection Alerts : இப்போ வந்திருக்கும் latest மாடல்கள் எல்லாம் Human Identity AI வரைக்கும் இருக்கு . அதாவது உங்க CCTV coverage area ல மனித நடமாட்டம் இருந்தால் அதுவே detect செய்து உங்களுக்கு alert message அனுப்பிவிடும் . இரவு பாதுகாப்புக்கு ரொம்ப பயன் உள்ளதா இருக்கும் .
7. Service : கடைசி point . ஆனா இது தான் முதலில் நீங்க consider செய்யனும். நாளைக்கு சர்வீஸ் னு கூபிட்டா அடுத்த நாளே வந்து சரி செஞ்சு கொடுக்கும் அளவுக்கு service support இருக்கனும் .
சரி நாம் மார்க்கெட் ல இருக்கும் சிறந்த CCTV Home Security கேமரா வை பற்றி பார்ப்போம் .
1. MI Xiaomi Wireless Home Security Camera 2i
இப்போ உங்க வீடு அல்லது கடை ல நடக்கும் விசயங்களை பார்க்கனும் , அல்லது நைட் யாரும் இல்லாத சமயத்தில் உங்க வீட்டு வாசல் அல்லது கடை க்கு யாரவது வந்தால் Auto detect செஞ்சு உங்களுக்கு alert கொடுக்குனும்னா இந்த CCTV உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வா இருக்கும் . .
இந்த cctv ல இருக்கும் நல்ல விஷயம் கூடவே என்ன drawbacks இருக்குன் னு இரண்டையுமே சொல்றேன். பின் நீங்க வாங்கலாமா வேண்டாமா னு முடிவு செஞ்சுக்கங்க
Technical Details:
· 2 MP Camera – 1080p Recording Option
· 360 Degree Horizonatal View | 108 degree vertical view | 110 Degree wide angle
· 2 Way Calling – Mic and Speaker given : உங்க வீட்டு வாசல் ல மாட்டி இருக்கீங்க, நீங்க வெளிய சென்ற நேரம் பார்த்து உங்களுக்கு courier அல்லது பார்சல் யாராவுது கொண்டு வராங்க, அல்லது நீங்க இல்லாத நேரம் வீட்டுக்கு சொந்த காரங்க யாராவது வந்து காத்திட்டு இருக்காங்க.. அப்போ மைக் மூலமாக நீங்க பேசினால் அவங்களுக்கு கேட்கும், கூடவே திருப்பி அவங்க பேசினால் அதுவும் உங்களுக்கு கேட்கும் வசதி இருக்கு . ரொம்ப பயன் உள்ளதா இருக்கும் .
· Enhanced Night Vision – Infrared camera works perfect at night times
· AI Motion Detection
· Works perfectly with Alexa and Google Assistant
· Micro USB Port
· Upto 32 GB Memory card support
Drawbacks :
இதுல எனக்கு ரெண்டு drawbacks உங்களுக்கு தெரிய படுத்தனும் னு தோனுச்சு.
1. 7 Day Cloud Storage: இப்படி விளம்பரத்தை பார்த்த உடன் , 7 நாட்கள் முழுவதும் உங்க CCTV கேமரா ல எடுப்பது எல்லாம் பதிவு ஆகும் னு நினைக்க வேண்டாம். Motion Detection நடக்கும் போதும் record ஆகும் videos மட்டும் தான் இந்த cloud ல save ஆகிருக்கும் .
2. Memory card : 32 GB போதுமானது தான். இருந்தாலும் மற்ற brand மாதிரி 128 GB அல்லது 256 GB வரைக்கும் கொடுத்திருக்கலாம் .
Price : Rs.2499 ( இந்த மாடல் ரிலீஸ் ஆனப்ப Rs. 2800 இருந்தது . இப்போ விலை குறைந்து இருக்கு)
Reviews : 4.1 * | 7611 Ratings
Note : இந்த CCTV camera wifi இல்லாமல் கூட work ஆகும் . ஆனா playback பார்க்க வேண்டும் என்றால் card எடுத்து வேற லேப்டாப் ல போட்டு தான் பார்க்க முடியும். அதுவே wifi கூட connect செஞ்சிட்டா நீங்க எங்க இருந்து வேண்டுமானாலும் “MI HOME APP” மூலமாக பார்த்துக்கலாம் .
Link To Buy :
amazon.in
Sample of mi CCTV's PAN 360 DEGREE ROTATION
2.TP-Link Tapo C210 360° 3MP Full HD
நாம் முதலில் பார்த்த mi மாடல் மாதிரி இதுலயும் எல்லா features இருக்கு. ஆனா ஏன் mi விட இந்த மாடல் அதிகமா sale ஆகிருக்கு, கிட்டதட்ட 18000 பேருக்கு மேல review செஞ்சிருக்காங்க . ஏன்னு பார்போம் .
எனக்கு தெரிஞ்சு மூன்று காரணம் தான் இருக்க முடியும் .
1. Expandable up to 250 GB memory card option
2. Either you can select 2mp or 3mp based on your need.
3. Sound and Light Alarm – இதுல கூடுதலா கிடைக்குது .
Price :
3 MP with PAN tilt – Rs.2399
2 MP - Rs.1799
2 MP with PAN Tilt – Rs.2099
Reviews : 4.3 * | 18,818 Ratings
இந்த CCTV ல Privacy mode னு ஒன்னு கொடுத்திருக்காங்க . நீங்க குறிப்பிட்ட நேரத்தை மட்டும் recording செய்ய விரும்பவில்லை என்றால் இந்த Privacy mode on செஞ்சுக்கலாம் .
இதை வாங்க நினைத்தால் pan tilt option இருப்பதை தேர்வு செய்யுங்க.
Link To Buy :
amazon.in
3. CP PLUS 3 MP Full HD Smart Wi-fi CCTV Camera
என்னால இரண்டாயிரம் , மூன்றாயிரம் எல்லாம் செலவு செய்ய முடியாது . ஒரு குறைந்த விலையில் அதற்கேற்ற தரத்தில் ஒரு CCTV இருந்தா போதும் னு விரும்பும் நபர்கள் இந்த மாடல் கண்டிப்பா consider செய்யலாம் .
இதுல இருக்கும் specs என்ன என்ன னு பார்க்கலாம் .
· 1296p full HD
· 3 MP camera
· 360 Degree PAN & 85 Defree TILT
· Motion Alert
· Night Vision
· Material type : Metal ( இந்த Built quality ரொம்ப நல்லா இருக்கும் )
Price: Rs.1499
Reviews: 3.8 * | 3154 Ratings
Link To Buy :
amazon.in
CCTV WITHOUT WIFI :
இப்போ உங்க வீட்ல wifi எல்லாம் இல்லை ஆனா cctv தேவைபடுது என்றால் . இதே CP-PLUS brand ல sim card support மூலமாக இயங்கும் ஒரு cctv மாடல் இருக்கு. இதை நீங்க வாங்கிக்கலாம் .
Price : Rs.2998
Reviews : 3.7 * | 86 Ratings
Link To Buy :
amazon.in
4. Qubo Smart Cam 360 by HERO GROUP 1080p Full HD WiFi CCTV with Intruder Alarm System Security Camera
இந்த CCTV ஒரு இந்திய தயாரிப்பு (Hero Group) . இதுவும் 2000 க்கு கீழ இருக்கும் ஒரு budget CCTV தான் ஆனா features எல்லாமே impressive ஆ இருக்கு.
இதுல இருக்கும் specs என்ன என்ன னு பார்க்கலாம்
· Audio Clarity : Customer reviews ல மற்ற Brand CCTV Camera வில் பதிவாகும் ஆடியோவை விட இது ரொம்ப clear ஆ இருக்கு னு சொல்லி இருக்காங்க .
· Intruder Alarm System : Burglar Alarm ல வருவது போல் sound இருக்காது . ஆனா உங்களுக்கு தெரிய படுத்தும் அளவுக்கு sound இருக்கும் . மிக பயன் உள்ளதாக இருக்கும் .
· Two Way Talk
· Card Support upto - 256 GB Storage | Limited Cloud Storage
· Person Detection with Tracking
· Night Vision
· Alexa and Google Assistant
Price : Rs.1990/-
Reviews : 3.9 * | 707 Ratings
வீட்டில் அல்லது கடையில் wifi இருக்கு . ஒரு இரண்டாயிரம் ரூபாய்க்கு கீழ் ஒரு நல்ல CCTV வாங்க நினைத்தால் இதை தேர்வு செய்யலாம்
. Link To Buy : fktr.in
5. EZVIZ by Hikvision
இந்த CCTV நான் பயன் படுத்திட்டு இருக்கும் மாடல் தான் . ஏற்கனவே வீட்டில் wired CCTV பயன்படுத்திட்டு இருந்தோம் . ஆனால் அதில் ஆடியோ மற்றும் Talk option இல்லை னு இதை மட்டும் தனியா வாங்கி மாட்டினேன் (வாங்கி ஒரு ஆண்டுக்கு மேல ஆச்சு ) . ஆடியோ மற்றும் வீடியோ இரண்டும் நல்லா இருக்கு .
· நான் வைத்திருக்கும் மாடல் ல பேசும் போது Noise ஆ இருக்கும் (Not big complaint) . அதனால தான் இந்த மாடல் ல Anti-Noise Filter option உடன் இருப்பதை உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன் .
· நான் வைத்திருக்கும் மாடல் ல Alexa இல்லை . எனக்கு அங்க அது தேவையும் படல. இந்த மாடல் ல இருக்கு .
· Enhanced Night Vision with Smart IR : நான் வைத்திருக்கும் மாடல் நைட் vision average தான் . அதுல Smart IR இல்லை .
· இந்த கேமரா ல எனக்கு ரொம்ப பிடித்த விசியம்னா அது 360 Degree Rotation தான். coverage ரொம்ப நல்லா இருக்கு .
Drawback :
இதுல நான் face செஞ்ச ஒரு முக்கிய problem : நாம் பேசும் போது மட்டும் ஆடியோ நல்லா கேட்கும் ஆனா கொஞ்சமா lag ஆகும் .
Price : Rs . 2037
Reviews : 3.9 * | 2855 Ratings
இந்த கேமரா indoor க்கு தான் செட் ஆகும் என்பதை கவனத்தில் கொள்ளவும் .
Link To Buy :
amazon.in

جاري تحميل الاقتراحات...