Mathar_மதார்
Mathar_மதார்

@MalarMathar

20 تغريدة 4 قراءة Jan 02, 2024
ஒவ்வொரு முறை ஸ்டாக் மார்க்கெட் வெபினார் பற்றிய போஸ்ட் போடும்போதும் ஆர்வமாக வந்து மேற்படி விவரங்கள் கேட்பாங்க. முன்னர் மெசேஜ் மாதிரி அனுப்பினேன். அதையும் படிக்க மாட்டேங்குறாங்கன்னு 1 பக்க போஸ்டர் அனுப்புறேன். அதில் இருக்கும் தகவல்கள். 1/
தேதி
நேரம்
Fundamental topic
Technical Analysis topic
What you get after class
Payment
இதில் குறிப்பிட்டிருக்கும் விசயங்களையே திரும்ப கேட்பாங்க.ரெக்கார்டிங் தருவீங்களா? சந்தேகம் கேட்டால் சொல்லித் தருவீங்களா?ஷேர் பண்ணிருப்பதை திரும்ப படிக்கச் சொல்லுவேன். 2/
1 பக்கம்,அதை 60% பேர் படிக்க மாட்டாங்க.எனக்கு ஆச்சர்யத்தோடு வருத்தம் அதிகமாக இருக்கும்.
இது தவிர இன்பாக்ஸில் முதலீடுக்கு 4 ஸ்டாக் சொல்லுங்க. Penny stock, Multibagger சொல்லுங்க..... டிப்ஸ் எதிர்பார்த்து நீங்க மார்க்கெட் வர நினைச்சீங்கன்னா சாரி இது உங்களுக்கான இடம் இல்லை. 3/
இதற்கு முன்னரும் பலமுறை நான் பகிர்ந்து கொண்டவைதான். நிறைய புது பாலோயர்ஸ் இருப்பதால் மீண்டும் இங்கே பதிவு பண்ண நினைக்கிறேன். 4/
Tender dept வேலை பார்த்துட்டு இருந்த வரை ஒரு பரபரப்பு இருக்கும். கல்யாணம் ,குழந்தை வேலையை விட்டு முழுநேர குழந்தை வளர்ப்பு அதுவும் கூட்டுக்குடும்பத்தில். எல்லாம் சேர்ந்து முதல் குழந்தை வளர்ப்பு is a stressful one. 5/
ஸ்டாக் மார்க்கெட் வேணா கத்துக்கயேன்னு வீட்டுக்காரர் சொன்னதோடு ஒரு ஸ்டாக் மார்க்கெட் அடிப்படை புத்தகமும் படிக்க குடுத்தார். ஓரளவு சில பண்டமெண்டல் டெர்ம்ஸ் தெரிஞ்சிகிட்டுதான் உள்ளே வந்தேன்.உடனே பணம் சம்பாதிக்க முடிந்ததான்னா இல்லை. 6/
Technical Analysis பற்றி தெரிய வந்து அதுவும் முக்கியம்னு வீட்ல சொல்லவும் ஒரு Foreign author Technical Analysis புத்தகம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் ₹2000 மதிப்பில் வாங்கித்தந்தார். 7/
காலேஜிலேயே local Author கிடைக்காத நேரத்தில்தான் foreign Author பக்கமே போவேன். எனக்கு தலகாணி சைஸ் புத்தகம் குடுத்தப்போ அவர்ட்ட சொன்னது " இந்த மாதிரி காலேஜில் படிச்சிருந்தா கூட கொஞ்சம் மார்க் வாங்கிருப்பேன்" .8/
டெக்னிக்கல் அனாலிசிஸ் நோட்டில் நோட்ஸ் எழுதி படங்கள் வரைந்து கொஞ்ச கொஞ்சமாக படிக்க 6 மாதங்கள் மேல் ஆனது. முதல் பையனையும் வளர்க்கணும்ல. அவன் தூங்கும் நேரம்தான் வீட்டு வேலைகளும் இல்லாத போது படிக்க முடியும். தினம் 1-2 மணி நேரம் படிக்க ஒதுக்கிருவேன் .9/
படிச்சிட்டேன், லாபம் வந்ததா இல்லை.
Education & knowledge both are different. Experience is superior to education. வட இந்தியர்களை பின் தொடர்ந்து அவர்கள் பகிரும் பங்குகளில் இருந்து நிறைய கத்துக்கிட்டேன். ஆயிரக்கணக்கான பங்குகளில் இருந்து சிறந்த பங்குகளை தேர்ந்தெடுப்பது எப்படி? 10/
Technical Bo குடுக்கும் பங்கை முன்னரே எப்படி கண்டு பிடிப்பது ? எங்கே வாங்கணும். வாங்கிய பின்பும் அதன் price action எப்படி போகும்? இதற்கு நிறைய Screener, strategies,backtesting பண்ணினேன். தமிழ் ,இந்தி, Foreign வீடியோக்கள் மணிக்கணக்கில் பார்த்திருக்கிறேன். 11/
3 நோட்டுகள் நான் நோட்ஸ் எடுத்தவை. எந்த மார்க்கெட்டில் எந்த அப்ரோச் வேலை செய்யும் என்பதுவரை தொடர்ச்சியான experiment பண்ணிட்டேதான் இருந்தேன்/இருக்கிறேன். சில நேரம் தூங்கும்போது கனவிலும் சார்ட் தான் வரும். 12/
இந்தளவு மார்க்கெட்டுக்குள் வரும் புதியவர்கள் தேடித்தேடி கற்க முடியுமா? முடியும் 10 வருடங்கள் ஆகலாம். கற்றலின் நேரத்தையும் அவர்களில் பண விரயத்தையும் குறைக்கவே வகுப்பெடுக்கலாம்னு நினைக்க வச்சது. 13/
2020 கோவிட் ,2வது குழந்தை பிறப்பு . என்னை அழுத்தத்துக்குள் கொண்டு போக வாய்ப்பிருந்த ஒவ்வொரு கட்டத்திலும் இன்னும் இன்னும்னு கற்றலுக்குள் ஈடுபடுத்திக்கிட்டேன். 14/
2 வது பையனுக்கு 6 மாதங்கள் ஆன பிறகு க்ளாஸ் எடுக்க PPT தயார் செய்ய ஆரம்பித்தேன்.2 பசங்களும் தூங்கின பிறகு இரவு 12க்கு புத்தகம் ,லேப்டாப், MI power Bank light வைத்துக்கொண்டு டைப் பண்ணுவேன். நடுவில் குழந்தை முழிச்சிப்பான்.தூங்க வைத்து தொடரணும். 15/
நம்ம தலைக்குள் இருக்கும் விசயங்களை எளிமையான ஆங்கிலத்தில் நச்சுன்னு 4 வரியில் ரெடி பண்ணனும். பொருத்தமான படம் இணைக்கணும். புத்தகம்,கூகிள் என்று இரண்டில் இருந்தும் ஒரு டாபிக் Rough copy தயார் செய்ய 3-5 மணி நேரம் எடுக்கும். தினம் இரவு 1-2 மணி நேரம் என்று 6 மாதங்கள் தயார் செய்தேன். 16
இன்றைக்கு இருக்கும் மெட்டீரியல் பலமுறை ரீவொர்க் பண்ணிருக்கேன். இத்தனையும் வீட்டையும் ,குழந்தைகளையும் வைத்துக்கொண்டுதான் செய்தேன். இன்றும் என் இடது கை போனில்தான் 100 % மார்க்கெட் அப்டேட் ,க்ரூப் டிஸ்கசன் எல்லாமே. 17/
ஐந்தே ஐந்து நிமிடங்கள் செலவு செய்து ஒரு பக்கத்தில் இருக்கும் தகவல்கள் படிக்க முடியலைன்னா நான் என்ன சொல்றது? The market is continuous learning , daily market updates . 18/
டிப்ஸ் எதிர்பார்க்கிறவர்களுக்கு
மார்க்கெட் அருமையான இடம். கொஞ்சம் அதைப்பற்றி தெரிந்து கொண்டு முதலீடு செய்தால் short/long term ரிட்டர்ன் எதிர்பாராத அளவில் வரும்.என் 2023 ன் லாபம் முந்தைய வருடங்களை விட அதிகம்.இது compound of knowledge and experience மூலம் மட்டுமே சாத்தியமானது. 19
சின்ன சின்ன அடிகள் எடுத்து வைங்க. சேமிப்பு போக செலவு என்று மாற்றிக்கொள்ளுங்க.
2024 எல்லோருக்கும் சிறந்த ஆண்டாக இருக்க என் வாழ்த்துகள்.

جاري تحميل الاقتراحات...