பிடிசாம்பல்
பிடிசாம்பல்

@pidisambal

10 تغريدة 5 قراءة Jan 02, 2024
#கலைஞர்100
1973ல் #தந்தை_பெரியார் மறைந்தார். வேலூர் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
அடுத்து திருச்சிக்கு எடுத்துச் செல்வதா, சென்னைக்கு எடுத்துச் செல்வதா என்று #திராவிடர் கழகத்தினர் பேசிக் கொண்டிருந்தனர்.
சிலர், திருச்சிக்கு எடுத்துச் சென்று அவர் வாழ்ந்த இடத்தில் அடக்கம் செய்து, #அண்ணா சமாதி போன்று பெரியளவில் நினைவாலயம் அமைக்க விரும்பினார்கள்.
இன்னொருத் தரப்பினர் #பெரியார் திடலில்தான் அடக்கம் செய்ய வேண்டுமென பெரியாரே விரும்பியதாக சொன்னார்கள்.
வேலூரில் அமைச்சர்கள் ப.உ.ச, மன்னை உள்ளிட்டோர் முகாமிட்டு அய்யாவுக்கான இறுதிவிடை குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது முதல்வர் #கலைஞர் தொலைபேசியில், “அய்யாவுக்கு அரசு மரியாதை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆளுநரிடம் பேசுகிறேன்” என்று சொல்லியிருந்தார்.
மறைந்தபிறகு கலைஞருக்கு மெரீனாவில் இடம் கிடைப்பது எப்படி பிரச்சினை ஆனதோ, அதுபோலவே பெரியாருக்கு அரசு மரியாதை செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது.
விஷயம் கேள்விப்பட்ட ‘சிலர்’ ஆளுநர் மாளிகை மூலமாக அரசுமரியாதை கொடுக்கும் விவகாரத்தில் அரசியல் செய்தார்கள்.
“அதற்கு சட்டத்தில் இடமில்லை. அரசுப் பொறுப்பு வகித்தவருக்கே அரசு மரியாதை செய்ய முடியும்” என்று தலைமைச் செயலர் வாயிலாக ஆளுநர் அலுவலகம் மறுத்தது.
“உத்தமர் காந்திக்கு அரசு மரியாதை செய்திருக்கிறோம். அவர் எந்த அரசுப் பொறுப்பிலும் இருந்ததில்லையே?” என்று கலைஞர் திருப்பிக் கேட்டார்.
“அவர் Father of the nation" என்றார்கள்.
“தந்தை பெரியார், father of tamilnation. இந்த ஆட்சியை கலைத்தாலும் சரி. பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்தே தீருவோம்” என்று கறாராக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் கலைஞர்.
வேலூரில் இருந்தவர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டது.
அதையடுத்து, தந்தை பெரியாரின் பூவுடல் அவர் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்ய பயன்படுத்திய வேனிலேயே சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுமார் 140 கி.மீ. தூரத்துக்கு வரிசையாக பயணித்து உலகின் மிகநீண்ட இறுதிமரியாதையாக அது அமைந்தது.
வழியெங்கும் மக்கள் சாலைகளின் இருபுறமும் நின்று பெரியாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் பெரியார் திடலில் கலைஞரின் விருப்ப்பப்படி அரசு மரியாதையோடே அடக்கம் செய்யப்பட்டார் பெரியார்.
வேலூரில் தொடங்கி சென்னைவரை ஒட்டுமொத்தமாக நாற்பதிலிருந்து ஐம்பது லட்சம் பேர் வரை பெரியாருக்கு பிரியாவிடை கொடுத்தார்கள்.
(கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் 30 லட்சம் பேர் கலந்துக் கொண்டார்கள் என்று புள்ளிவிவரம்).
மத்திய #இந்திரா அரசுக்கும், கலைஞரின் #திமுக அரசுக்கும் ஏற்பட்ட முதல் உரசல் இந்த அரசு மரியாதை தொடர்பானதுதான்.

جاري تحميل الاقتراحات...