33 تغريدة 6 قراءة Jan 03, 2024
December 8 தேவமாதா கருத்தரித்த நாள் என காலண்டர்ல போட்டு இருக்காங்க இல்லையா அது இயேசுவை மாதா கருத்தரித்த நாள் இல்ல. மாறாக மாதாவை அவங்க அம்மா Anne கருத்தரித்த நாள். அதாவது தேவமாதா கருவாக உருவான நாள். 1/21
இயேசு கிறிஸ்து கன்னி மரியாளுக்கு பிறந்தார் என்பது ரொம்பவே முக்கியமான கிறிஸ்தவ கோட்பாடு. அது ஒரு அதிசயம், prophecy என்பதை எல்லாம் தாண்டி ஆதி பாவத்தினால் தீண்டப்படாத ஒரு நபர் இயேசு என்பதை வலியுறுத்துவதற்கு இந்த Virgin Birth மிகவும் அவசியமாக இருக்கிறது. 2/21
sex என்பது பாவமானது அதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பாவத்துடன் பிறக்கிறார்கள். இயேசு sex மூலமாக பிறக்கவில்லை அவர் கன்னி பெண் மரியாளுக்கு பிறந்தார் அதனால் அவரிடம் பாவம் இல்லை. இதை பெரும்பாலான Christian denominations ஒப்புக்கொள்கிறார்கள். 3/21
சில சிறிய sects மரியாள் கன்னி என்பதை நம்புவதில்லை அது முக்கியம் என்று கருதுவதில்லை.
சரி sex மூலமாக கருத்தரித்தல் பாவம். அந்த பாவம் இல்லாதவர் இயேசு. அவர் கடவுளுக்கும் மனிதருக்கும் பிறந்த மகன். ஆனால் அவரை பெற்றெடுத்த தாய் மரியாள் sex மூலமாக தானே பிறந்தார். 4/21
அவர் மேல் பாவம் இருக்கிறதல்லவா? அவருக்கு பிறந்த மகனை முழுமையான கடவுளாக எப்படி ஒப்புக்கொள்வது? இதில் கன்னி மரியாளை வழிபட வேறு செய்கிறார்கள். பாவத்தில் பிறந்தவரை எப்படி வழிபட முடியும்? அதற்காக சொல்லப்பட்ட கதை தான் "Immaculate Conception" 5/21
மதம் வளர வளர பல கேள்விகளும் அதற்கு ஏற்ற கதைகளும் உருவாகின. ஏழாம் நூற்றாண்டில் இத்தைகைய கேள்விகள் எழும்பவும் Roman Catholic Church அதற்கு சொன்ன கதை தான் Immaculate Conception of the Blessed Virgin Mary. 6/21
கன்னி மரியாள் இயற்கையான முறையில் கருத்தரித்திருந்தாலும், அவர் அவரது அம்மாவின் கருப்பையில் கருவான அந்த நொடியே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு அவரது பாவம் நீக்கப்பட்டது. so ஆதி பாவம் இல்லாமலேயே பிறந்தவர் கன்னி மரியாள். 7/21
அது மட்டுமின்றி கருவிலேயே (கரு உருவான அந்த microsecond) ஆசிர்வதிக்கப்பட்டதால் அவர் காலம் முழுவதும் பாவமே இல்லாமல் வாழ்ந்தார்.
இந்த கதை சொன்ன ஆரம்ப காலத்தில் இதற்கென ஒரு நாள் இல்லை. அதாவது December 8 என்று ஒரு குறிப்பிட்ட நாள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 8/21
வெறும் கதை மட்டும் சொல்லப்பட்டது. பின்னர் பலரால் பல தேதிகளில் Feast of the Immaculate Conception கொண்டாடப்பட்டது. 11ஆம் நூற்றாண்டில் தான் December 8 என அறிவிக்கப்பட்டது. September 8 மரியாளின் பிறந்தநாளாக அனுசரிக்கப்படுகிறது (Mary's Nativity). 9/21
அன்றைய கிறிஸ்தவ வருடம் September ல் தொடங்கியது. அதை ஒட்டி September 8 மரியாளின் பிறந்தநாளாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த பிறந்தநாளை கணக்கில் வைத்து அதில் இருந்து 9 மாதம் முன்னே சென்று December 8 கருவான நாள் என அறிவிக்கப்பட்டது. 10/21
கடவுளின் தாய் பாவமே இல்லாதவராக இருக்க வேண்டும் என்கிற obsession ல உருவான கதை தான் இது. அதுவும் கரு உருவான அந்த நொடியில் இருந்து பாவம் இல்லாதவராக இருக்க வேண்டும். அதுவுமில்லாமல், அவர் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டவர் holy vessel என்ற கருத்துகளுக்கெல்லாம் 11/21
இந்த கதை நியாயம் சேர்க்கிறது. Protestant and Eastern Orthodox Christians இந்த கதைகளை நம்புவதில்லை. அவர்களுக்கு மரியாள் இயேசு பிறப்பதற்கான ஒரு கருவி. அவர் மரியாதைக்குரியவர் ஆனால் வழிபட வேண்டியவர் அல்ல. அவர் சாதாரணமாக பிறந்து பாவமற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததாக நம்புகிறார்கள். 12/21
doctrine of Perpetual Virginity என்ற ஒரு கருத்தும் Roman Catholicism ல் இருக்கிறது. மரியாள் இயேசு பிறப்பதற்கு முன்பும் கன்னியாகவே இருந்தார், இயேசு பிறக்கும்போதும் அவரது கன்னித்தன்மை அப்படியே இருந்தது, இயேசு பிறந்த பின்னும் மரியாள் சாகும்வரை கன்னியாகவே இருந்தார் 13/21
"Ever-Virgin" என்பது Perpetual Virginity தத்துவம்.
பைபிளில் இயேசுவுக்கு சகோதர சகோதரிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருப்பதால் அவர் எப்போதும் கன்னியாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று Protestant பிரிவு கருதுகிறது.
14/21
கிறிஸ்தவத்தின் வரலாறு முழுவதும் கன்னி மரியாளின் கன்னித்தன்மை மேல் அதீத obsession இருந்திருக்கிறது. Gospel of James இயேசுவின் பிறப்புக்கு முன் என்ன நடந்தது என்பதை விளக்குகிறது. இதை Protoevangelium அதாவது முதலாவது gospel என்கிறார்கள். 15/21
Gospel of James, பைபிளில் சேர்க்கப்படவில்லை ஆனாலும் அது ஒரு முக்கிய புத்தகமாக கிறிஸ்தவத்தில் இருக்கிறது. இதில் மரியாளுக்கு பிரசவம் பார்த்த Salome என்னும் பெண் அதெப்படி இப்போதும் மரியாள் கன்னித்தன்மையோடு இருக்க முடியும் என்று சந்தேகப்பட்டு சோதித்து பார்க்கிறார். 16/21
விளைவு அவரது கை முழுவதும் எரிந்து கொப்புளங்கள் உண்டானதாம். மரியாளின் கன்னித்தன்மையை சந்தேகப்பட்டால் இதுதான் கதி என அந்த கதை சொல்கிறது.
இந்த அதீத obsession Virgin Mary வழிபாட்டை ஒரு cult ஆகவே மாற்றி இருக்கிறது. 17/21
இயேசுவை காட்டிலும் என்றும் நித்திய கன்னியாக இருக்கும் மரியாளுக்கு மதிப்பு கூடுகிறது. மரியாள் தாயாகவும் இருக்கிறார், மனைவியாகவும் இருக்கிறார், அதே சமயம் கன்னியாகவும் இருக்கிறார். ஆணாதிக்க சமூகத்திற்கு இந்த impossibility மிகவும் பிடித்து இருக்கிறது. 18/21
இந்து புராணங்களில் திரௌபதி 5 ஆண்களை மணந்திருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் அவளது கன்னித்தன்மை மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. இப்படி ஆண்டுதோறும் அவளது கன்னித்தன்மை புதுப்பிக்கப்படுவதால் அவள் நெருப்பை விட தூய்மையானவள் என்று சொல்லப்படுகிறது. 19/21
இப்படி பெண்கள் கன்னியாகவும் இருக்கவேண்டும் அதே சமயம் இல்லற வாழ்விலும் ஈடுபட வேண்டும் என்கிற இத்தகைய patriarchal சமூகத்தின் எதிர்பார்ப்பு பெண்களின் மேல் பெரும் சுமையாக விழுகிறது. இயற்கையில் சாத்தியமே இல்லாத ஒரு எதிர்பார்ப்பால் 20/21
பெண்கள் என்ன செய்தும் புனித தன்மையை அடையவே முடியாது என மட்டம் தட்ட படுகிறார்கள்
2014ல் Pope Francis பெண்களுக்கு ஒரு role model Virgin Mary என்கிறார். Mary வழிபாட்டுக்குரியவர் ஆனால் அவரது நிலையை எந்த பெண்ணாலும் அடைய முடியாதென்பதால் பெண்கள் புனிதமான பதவிகளுக்கு தகுதியானவர்கள் அல்ல
ராஜபுத்திர குடும்பங்களில் இருக்கும் jauhar எனப்படும் வழக்கம் போலவே கிறிஸ்தவத்திலும் உண்டு. கன்னியாஸ்திரீகள் அல்லது கன்னிப்பெண்கள் rape threat ஏற்படும்போது தங்களை தாங்களே சிதைத்து கொள்வதும் அல்லது உயிர் துறப்பது வழக்கத்தில் இருந்திருக்கிறது.
x.com
இப்படி வரலாற்றால் நடந்ததாக சொல்லப்படும் கதைகளை "Virgin Martyr Legends of 'Circumvented Rape'" என்றழைக்கிறார்கள். Saint Agatha அவரது மார்பகத்தை அறுத்து கொண்டார், Saint Pelagia கூரை மேல் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்,
சில சமயம் கன்னிப்பெண்களை பிடித்து torture செய்த போதிலும் ஏதோ ஒரு அற்புதத்தால் அவர்களது உயிர் போகுமே அன்றி அவர்களது கன்னித்தன்மை போகாது. கன்னி சாகலாம் ஆனால் கன்னித்தன்மை என்றும் சாகாது. இத்தகைய கதைகள் மூலமாக அன்று ஒரு பெண் உண்மையில் புனிதராக இருக்கும்பட்சத்தில்
இம்மாதிரியான சூழலில் அவளே அவளது உயிரை எடுத்து கொள்வாள் அவளால் அப்படி உயிர் விட முடியாமல் போனாலும் கடவுள் சில அற்புதங்கள் மூலமாக அவளது உயிரை எடுத்துவிடுவார் என்பதாக சொல்லப்படுகிறது.
Agatha வை தனது ஆசைக்கு இணங்கும்படி சிசிலியின் தூதரக அதிகாரி Quintianus வற்புறுத்துகிறார்.
ஆனால் Agatha சம்மதிக்கவில்லை. எனவே அவரை torture செய்யும்விதமாக அவரை ஜெயிலில் வைத்து மார்பகத்தை அறுத்து எறிகிறான் Quintianus ஆனாலும் Agatha சம்மதிக்கவில்லை. நீ என் வெளிப்புற மார்பகத்தை தொட்டு துண்டித்து இருக்கலாம் ஆனால் என் உள்புற மார்பகம் (?!) இறைவனுக்கு சொந்தமானது
அது இன்னமும் அழகானது என Agatha வசனம் பேசுகிறார். பின்னர் ஜெயிலில் Agatha வுக்கு apostle Peter காட்சியளித்து அவரது மார்பகத்தை பழைய அழகான நிலைக்கு கொண்டு வருகிறார். இதை பார்த்து கடுப்பான Quintianus மறுபடி Agatha வை torture செய்ய பெரிய நிலநடுக்கம் வருகிறது.
ஊர்மக்கள் Quintianus க்கு எதிராக கோஷம் இட, Quintianus Agatha வை நெருக்க Agatha தனது உயிரை துறக்கிறார்.
இப்படி Agnes, Lucy எனப்பல கதைகள் இருக்கின்றன. இந்த கதைகள் எல்லாமே பெண்களின் கற்பு அவர்களது உயிரை விட மேலானது.
அந்த கற்புக்கு சோதனை வரும்போது உயிரை விடுவதே சிறந்தது என்ற பாடாவதி கருத்தை பெண்களிடம் திணிப்பதற்காக உருவானது.
Marcella Althaus-Reid பெண்கள் தங்களது கன்னித்தன்மையை பாதுகாத்து வைப்பது என்பதே ஒரு privilege என்கிறார். எல்லா பெண்களுக்கும் அது வாய்ப்பதில்லை.
பெரும்பாலான பெண்கள் ஏழ்மையான சூழலில் தான் இருக்கிறார்கள். Latin America போன்ற மிக ஏழ்மையான நாடுகளில் வெறும் நாலடி இடத்தில் ஒரு குடும்பம் வசிக்கிறது. அங்கு சிறு பெண்கள் அவர்களது உறவினர்களாலேயே பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்கள்.
பெண் குழந்தைகள் கன்னி தன்மை என்றால் என்ன? பாலியல் வன்புணர்ச்சி என்றால் என்ன? எது புனிதம்? என்றெல்லாம் அறிந்துகொள்ளும் முன்னரே இத்தகைய வன்கொடுமைகளுக்கு ஆளாகி அவர்களது வாழ்வை குற்றஉணர்ச்சியில் கழிக்கிறார்கள். Latin America குடும்பங்கள் தான் Virgin Mary யை அதிகம் வழிபடுகிறார்கள்.
இந்த காரணத்திற்காகவே Mary, Virgin என்ற கருத்து அழிய வேண்டும், "Virgin" Mary என்ற பெயர் வழக்கொழிய வேண்டும் என்கிறார்.

جاري تحميل الاقتراحات...