11 تغريدة 5 قراءة Dec 13, 2023
#wife123_vs_wifeinfinity
எம்ஜீஆர், கலைஞர் மூன்று திருமணங்கள் செய்தவர்கள் தான்.
ஆனால், கலைஞரின் திருமணங்கள் மட்டுமே விமர்சிக்கப்படுகின்றன ஏன்?
கலைஞரைப்போல அவருக்கு வாரிசுகள் இல்லை என்பதாலா?
சமூக வலைத்தளங்கள் வளர்ச்சிக்கு முன்பே சிக்கி சின்னா பின்னமாகமல் மறைந்து விட்டதாலா?
இன்றுவரை பெரும்பான்மையான ஊடகம் பார்ப்பன்னர்கள் மற்றும் பார்பண அடிவருடிகளிடம் இருக்கிறது.
கலைஞர் இறந்த பின்னும் அரசியலில் அவரை நிலை நிறுத்த ஸ்டாலின் கனிமொழி மற்றும் அழகிரி இருப்பது போல
ஒருவேளை எம் ஜி ஆருடைய வாரிசு இப்போது இருந்தால் நிலைமை வேறுவிதமாக இருக்கும்.
விஷயம் என்ன என்றால்,
எம் ஜி ஆருக்கு சட்டப்படி மூன்று மனைவிகள் இருந்தனர்.
#முதல்_திருமணம்
எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார்.
பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது.
அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார்.
#இரண்டாவது_திருமணம்
அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தாக கருதப்பட்டார் அல்லது தள்ளி வைக்கப் பட்டார்.
#மூன்றாவது_திருமணம்
1948 மோகினி திரைப்படத்தில் எம்ஜிஆரும் வி. என். ஜானகியும் நடிக்கும் முன்
எம்.ஜி.ஆர் இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர் தயாரித்த ராஜ முக்தி படத்தில் நடித்தார்.
அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார்.
எம்.ஜி.ஆரின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்ததால் ஜானகியின் மீது எம்.ஜி.ஆருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது
அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர்.
1950 ல் மருதநாட்டு இளவரசி படத்தில் எம்.ஜி.ஆரும் ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது.
எம்.ஜி.ஆரால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதல் கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதி பட் கைகளில் கிடைத்தன.
கணபதி பட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது.
ஜானகி நள்ளிரவில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, லாயிட்ஸ் சாலையில் (அவ்வை சண்முகம் சாலை) எம்.ஜி.ஆர் வீட்டுக்கு வந்தார்
எம்.ஜி.ஆர் அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார்.
கேரளாவில் ஒரு கோவிலில் எம்.ஜி.ஆரும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை எம்.ஜி.ஆர் தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.
இத்திருமணத்தை எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்ரபாணியும், குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர்
எம்.ஜி.ஆரின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்ததால் தம் திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளாமலேயே எம்.ஜி.ஆரும் ஜானகியும் உடனுறைந்தனர்
12 ஆண்டுகள் கழித்து 1962ல் சதானந்தவதி மறைந்த பின்னர் சூன் 14ஆம் நாள் எம்.ஜி.ஆரும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர்.
இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து வெளியேறி இராமாவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.
மற்றபடி எம் ஜி ஆருக்கும் நடிகைகளான ஜெயலலிதா, மஞ்சுளா, லதாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை
இது எல்லாம் @magorarasigan ஐடில விட்டது, அந்த ஐடி சஸ்பென்ட் ஆனதால முக்கியமான சில கட்டுரைகள் மட்டும் இருக்கு..
இதையும் RT செய்யுங்க தமாஷா இருக்கும்
@gokula15sai
@sailaks11
@Saran69041939 @kalgikumaru
@Naga4uTN
@Natuviral007
@TimonTheFire @pugazh1997

جاري تحميل الاقتراحات...