ஒரு விஷயத்தை படிக்கும் போது நமது மூளை அதை சத்தமாக மாற்றும். எதையாவது நாம் சிந்திக்கும் போது கூட அது நமது குரலில் நமது மூளைக்குள் கேட்கும். இந்த internal speech, subvocalization என்றழைக்கப்படுகிறது.
படிக்கும் விஷயத்தை எளிதாக கிரகித்து கொள்ள அதை நீண்ட நாள் நினைவில் வைத்துக்கொள்ள மூளை அதை ஒலியாக மாற்றுகிறது. ஒரு கதை படிக்கும்போது ஆணின் வசனத்தை ஆண் குரலிலும் பெண்ணின் வசனத்தை பெண் குரலிலும் நமது மூளை மாற்றி வாசிக்கும்.
சிலருக்கு இந்த subvocalization என்ற internal speech சுத்தமாக இருக்காது. சிலருக்கு எல்லாமே அவர்கள் குரலில் மட்டும் ஒலிக்கும். சிலருக்கு படிக்கும் விஷயதத்திற்கேற்ப பல குரல்கள் கேட்கும்.எல்லாம் அவர்களது மூளையின் திறனை பொறுத்து.
subvocalization அதிகமாக இருக்கும் பட்சத்தில் வேகமாக வாசிக்க முடியாது. மரம் என்று படிக்கும்போது நமது குரலில் அந்த ஒலி, மற்றும் மரம் என்ற ஒரு படமும் நமது மூளையில் generate ஆகிறது இது புரிந்து கொள்ள நினைவில் கொள்ள வசதியாக இருக்கிறது.
இன்னொருவர் எழுதிய கடிதத்தை வாசிக்கும்போது நமது மூளை அவர்கள் குரலில் வாசிக்கிறது.
جاري تحميل الاقتراحات...