நெல்லை செல்வின்
நெல்லை செல்வின்

@selvinnellai87

2 تغريدة 4 قراءة Nov 19, 2023
ஒரு பின்னோக்கல்...
1977-ல் எம்ஜிஆர் CM ஆகி சில மாதங்கள் கழித்துஸ.
நடந்த விஷயம் இது.
“பார்த்தாயா உடன் பிறப்பே. நம்மீது ஊழல் குற்றச்சாட்டை
வைத்த நடிகரின் ஆட்சியில்
நாளெல்லாம் ஊழல்,
நாடெல்லாம் ஊழல்” என்று முரசொலியில் தீட்டிவிட்டார்
கலைஞர்....அப்போது திமுகவில் இருந்து அதிமுகவிற்கு தாவி
விட்டிருந்தார் நாஞ்சில் மனோகரன். எம்.ஜி.ஆருக்கு
ஆதரவாக அதற்கு பதில் அளித்த நாஞ்சில் மனோகரன்,
எம்ஜிஆரின் ‘தென்னகம்’ நாளேட்டில், ரத்தத்தின் ரத்தமே,
பார்த்தீர்களா, பொன்மனச் செம்மல் ஆட்சியில் ஊழல்
நடக்கிறதாம் என்று விமர்சித்து,..அரசியல் அசிங்கம் நீ.
தமிழகத்தின் களங்கம் நீ’
-என்று கலைஞரை சாடி முடித்திருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் எழுதிய கலைஞர்,
“உடன் பிறப்பே. நாளேட்டை பார்த்தாயா.
அந்த ‘மந்திரக்கோல்’ (நாஞ்சில் மனோகரன்) என்ன
எழுதியிருக்கிறதென்று! என தொடங்கி, சத்தியவாணி
முத்துவின் வீட்டு தாழ்வாரத்தில்..முடங்கிக்கிடந்து,
அங்கு மிஞ்சியதைத் தின்று வளர்ந்த ’மந்திரக்கோல்
மனோகரனுக்கு’ இன்று அண்ணா நகரில் 10லட்சம்
ரூபாயிலான பங்களாஸஸ கதவும் சன்னலும் சந்தனத்தால்
இழைக்கப்பட்டது. எப்படி வந்தது அந்த வசதி”
என்று இறங்கி அடித்திருந்தார்.
அடுத்த நாள் ‘தென்னகம்’ நாளேடு சூடாகியிருந்தது...கலைஞரை கடுமையாக விமர்சித்திருந்த நாஞ்சில்
மனோகரன்,
௭ “ஏ கருணாநிதியே. நான் குடியிருக்கும் வீடு பத்து
லட்சமா? சவால் விடுகின்றேன். அந்த தொகைக்கே
நான் விற்க தயார். நீ வாங்க தயாரா.” என்று
தாக்கி விடுகிறார்.
மறுநாள், முரசொலி கொதித்தது. ‘பார்த்தாயா உடன்
பிறப்பே....மந்திரக்கோல் சவால் விடுகிறது. அந்த
சவாலை ஏற்போம். ‘அனுப்பு பணத்தை
வாங்குவோம் வீட்டை’ என்று சூடாக சாடி முடிக்கின்றார்
கலைஞர். ( மந்திரக்கோல் சாக்கில் 10 லட்சம் வரும்படிக்கு
ஏற்பாடாகி விட்டது!!! )
அடுத்தடுத்த சில நாட்களில் இருந்து உணர்ச்சி வசப்பட்ட
அப்பாவி திமுக தொண்டர்கள்...பணத்தை அனுப்பத்
தொடங்கினார்கள். யார் யார், என்ன தொகை என்ற
பட்டியல் நாள்தோறும் முரசொலியில் வந்தது.
குறிப்பிட்ட தொகை பத்து லட்சத்தை தாண்டி 13 லட்சம்
வரை சேர்ந்தது. கொஞ்ச காலம் நகர்ந்தது. அதற்குள்
அரசியல் களமும் மாறியது.
கருத்து வேறுபாடு என்று எம்ஜிஆரிடம் இருந்து பிரிந்த
நாஞ்சி...மனோகரனும், வீட்டை வாங்கிவிடுவதாகச் சொல்லி
தொண்டனிடம் நிதி வசூல் செய்த கலைஞரும்
ஒரே மேடையில்.. 🙂 🙂 🙂
வழக்கம் போல் கலைஞர், ‘அருமைச் சகோதரர்,
வித்தகர், அப்படி இப்படி என்று நாஞ்சில் மனோகரனை
உயர்த்திப் பேச,பணத்தை அனுப்பிய அந்த இளிச்சவாய் தொண்டர்கள்
வழக்கம்போல் விசிலடித்து ஆராவராரம்
செய்துகொண்டிருந்தார்கள்.
அந்த பணம் என்ன ஆனது என்று கேட்கிறீர்களா ஸ?
வேறு என்ன ஆகும்?
கலைஞரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது!!!
நாஞ்சில் மனோகரன்
“போன மச்சான் திரும்பி வந்தான்” என்று திரும்ப வந்ததில் கலைஞருக்கு லாபம் 13 லட்சம்ஸ
அரசியல்வாதிகளுக்கு பணம் பண்ண
சொல்லிக்கொடுக்க வேண்டுமா என்ன ?
அதிலும் ஆசான் கலைஞருக்கு ..!!!
( நன்றி : மூலம் ௭ திருச்சி வேலுசாமியின்
‘அரசியல் ஆடுகளம்’ (அனுபவம்) புத்தகம் ..)
~ உமா கான்ஸியஸ்
#திமுகவும்_பிச்சையும்
இணைக்க மறந்துட்டேன்

جاري تحميل الاقتراحات...