12 تغريدة 3 قراءة Nov 18, 2023
#ஒரு_சகாப்தத்தின்_முடிவு
பிரிட்டிஷ் இந்தியாவின் பொறியியல் சாதனையை பறைசாற்றிய உலகின் டாப் 10 அபாயகரமான ரயில் தடமான மண்டபம் - ராமேஸ்வரம் பாலம் மூடப்படுகிறது.
இந்த பாதையை அமாவாசை தர்ப்பணம் கொடுப்போர் செல்ல பிரிட்டிஷார் அமைக்க வில்லை
அதற்கு பின் அகண்ட பிரிட்டிஷ் கனவு இருந்தது
#போட்_மெயில்
எழும்பூரில் இரவு 7.45 க்குக் கிளம்பி மறுநாள் காலை 8 மணிக்கு ராமேஸ்வரம் அடையும் தொடர் வண்டியின் பூர்வாசிரம பெயர் இது.
பழைய இந்தியாவின் இன்டர்நேஷனல் ட்ரெயின்.
சென்னையில் இருந்து இந்த வண்டியில் பிரிட்டிஷார் தனுஷ்கோடி வரை ரயிலில் சென்று பின்னர் படகில் சிலோன் செல்வர்
#அகண்ட_பிரிட்டிஷ்_அரசு
தென்கிழக்கு ஆசியா முழுவதும் தன் ஆண்ட பிரிட்டிஷ் அரசு, சில காலம் சிலோனை சென்னையில் இருந்த ஆங்கிலேய கவர்னரின் கீழ் வைத்திருந்தது.
1964 இல் புயல் தாக்கும் வரை தனுஷ்கோடி வரை ரயில் செல்லும்.
அங்கிருந்து படகில் கிளம்பி அடுத்த 1 மணி நேரத்தில் தலைமன்னார் அடைவர்
#தலைமன்னார்_Pier_Statiom
1860 ல் பாக் ஜலசந்தியில் முதலில் கால்வாய் அமைக்க திட்டமிட்டது பிரிட்டிஷ் அரசு.
மாதவசெரி - கொழும்பு ரயில் பாதை அமைத்த உடன் 1892 இல் இந்தியாவையும் இலங்கையையும் ரயில் வழியாக இணைக்க திட்டமிட்டது
1912 இல் தலைமன்னார் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது
ஆனால் சிலோன் தனி கவர்னரின் கீழ் வந்த உடன் நிர்வாக ரீதியாக சென்னையை விட்டு விலகியது
சென்னையிலிருந்து ஆங்கிலேய அதிகாரிகள் கொழும்பு பயணம் செய்வது குறைந்தது
டீ எஸ்டேட் தொழிலாளர்கள், வியாபார பொருட்கள் இருபுறமும் பயணப்பட படகு சேவைதான் மலிவானது என ஆங்கிலேயர் தீர்மானித்து இருக்கலாம்
#ஏன்_ரயில்வழி?
பலமாதம் கடல்வழியாக பல்லாயிரம் கி. மீ பயணப்பட்டு பாம்பே வந்த பிரிட்டிஷ் சீமாட்டிகள் கடல் நோயால் அவதிப்பட்டனர்
பாம்பே to சென்னை ரயிலிலும் சென்னை to கொழும்பு கப்பலிலும் சென்றனர்
இது சுற்றாக தோன்றவே, தென் மாவட்டங்களுக்கு இருப்புப் பாதை அமைக்கப் பட்டது
#தூத்துக்குடி_கொழும்பு
1880 ல் போட் மெயில் தூத்துக்குடிக்கு தான் இயக்கப் பட்டது
தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு கப்பல் பயணம்
மீண்டும் Sea Sickness பிரச்சினை கிளம்ப, மாற்று வழியாக திருச்சி to தனுஷ்கோடி பாதையை உருவாக்கினர்
1914 முதல் போட் மெயில் தனுஷ்கோடி வர தொடங்கியது
தனுஷ்கோடி டெர்மினஸ் அந்த காலத்தில் Gateway to Ceylon என்று அழைக்கப்பட்டது.
கண்டியிலிருந்து ஒரே டிக்கெட் எடுத்து காசி, கயா என இந்தியா எங்கும் பிரயாணிக்கலம்
பாதை அமைக்க நிதி உதவி வழங்கிய செட்டியார்களின் ஒரே கோரிக்கை செட்டிநாடு பகுதியில் போட் மெயில் நின்று செல்ல வேண்டும்
#புயலின்_தாண்டவம்
Dec,22 1964 திருச்சியிலிருந்து தனுஷ்கோடி சென்றது பாசஞ்சர் ட்ரெயின்
280கிமீ/மணி வேகத்தில் வீசிய புயலால், 23 அடி உயரத்திற்கு எழுந்த அலைகளால் ரயிலில் பயணம் செய்த 115 பயணிகளில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை
ஒரே இரவில் நகரம் துடைத்தெரியப்பட்டது
#தப்பிய_பாம்பன்
1800 பேர் வரை இறந்த அந்த கொடும் புயலிலும் அமெரிக்க என்ஜினீயர் உதவியுடன் பிரிட்டிஷார் அமைத்த பாம்பன் பாலம் தப்பியது
சேதம் சரி செய்ய பட்டது.
மறுகரையில் #யாழ்தேவி போன்ற ரயில்கள் இயங்க தொடங்கின
ஆனால் தனுஷ்கோடி மீளவில்லை
தற்போது பாதுகாக்கப் பட்ட பிரதேசம் ஆகி விட்டது
@CRammurthi @raj70706337 @durairaj12477 @Srividhya_Hari @Timepassna @thozarhasan @K_T_L @BasVijey @Civilerbala1979 @rajubhai_DMK இவ்வாறு நூற்றாண்டு கடந்த பொறியியல் அதிசயம்,
இனி தேவை இல்லை என புதிதாக அமைக்கப்படும் பாதையை ஆய்வு செய்ய சென்ற அதிகாரி
பாண்டியன் எக்ஸ்பிரசின் 1000 பயணிகளை அலைக்கழித்து உள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சியில் கூட இது மாதிரி நடந்திருக்குமா?
இதுக்கு தான் போராடி விடுதலை வாங்கினோமா?

جاري تحميل الاقتراحات...