குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சின்ன விஷயத்தை சார்ந்து மட்டுமே இல்லை. புத்தி சொன்னா கேக்கல அடிச்சு வளக்கிறேன். இல்ல, அடிச்சு வளக்க கூடாது புத்தி சொன்ன போதும் என்று குழந்தை வளர்ப்பை simplify பண்ண முடியாது. நிறைய factors ஒரு குழந்தையின் நடத்தையை தீர்மானிக்கிறது.
genetics, குடும்ப சூழல், நண்பர்கள், சமூகம், பள்ளி, கல்வி, media, பொருளாதாரம், வளரும் சூழல், பெற்றோர்களின் involvement, சமூகத்தில் இருக்கும் role model இப்படி பல விஷயங்கள் ஒரு குழந்தையின் நடத்தையை பாதிக்கிறது.
குழந்தையின் வளரும் சூழல் மோசமாக இருக்கும்போது, பெற்றோர்கள் மோசமாக இருக்கும்போது இந்த சமூகம் project பண்ணும் role model கள் மோசமாக இருக்கும்போது அவர்கள் அதை தான் பின்பற்றுவார்கள்.
அதை எல்லாம் சரி செய்யாமல், எவ்வளவு அடித்தாலும், அல்லது அன்பொழுக பேசி சீர்திருத்த நினைத்தாலும் அது workout ஆகாது. மேற்சொன்ன காரணிகளை சரிபண்ணும் அதே நேரத்தில் positive reinforcement, guidance தொடர்ச்சியான consistent discipline இவை எல்லாம் தான் அவர்களிடையே மாற்றத்தை உண்டு பண்ணும்.
நாய் பூனையை discipline பண்ண கூட positive reinforcement தான் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள். அப்படி இருக்க குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும் என்பது தவறு.
جاري تحميل الاقتراحات...