Knowledge Hub
Knowledge Hub

@KalviSurangam

4 تغريدة 2 قراءة Oct 30, 2023
🧵🧵
மழையை எவ்வாறு அளக்கிறார்கள்..?
உங்களுக்கு தெரியுமா..?
செய்திகளில் கடந்த 24 மணி நேரத்தில் இங்கு 500 மில்லி மீட்டர் மழை அங்கு 300 மில்லி மீட்டர் மழை என்று கூறி கேட்டு இருப்போம்.
அவை எவ்வாறு அளவிடப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
/1
#Rain #measurement #Rainfall
வானிலை ஆராய்ச்சி மையங்களில் “Rain gauge” என்று கூறப்படும் மழை மானி கருவி இருக்கும். இதைப் பயன்படுத்தித்தான் மழையை அளந்து, 'இத்தனை மி.மீ. மழை பெய்தது' என்று சொல்கிறார்கள்.
ஒரு சதுர மீட்டருக்கு, 24 மணிநேர கால அளவில் எவ்வளவு மழை பொழிந்திருக்கிறது என்பதை அதன் மூலம் அறிவார்கள்.
/2
அதை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்று கணக்கிடுவார்கள்.
ஒரு மில்லி மீட்டர் மழை என்பது, ஒரு சதுர மீட்டருக்கு 1 லிட்டர் என்பதற்குச் சமம். எனவே, 10 மிமீ மழை என்று பதிவானால், அதை 10 லிட்டர் / சதுர மீட்டர் என்று எடுத்துகொள்ள வேண்டும்.
/3
தற்போது பல வகையான தானியங்கி மழை மானிகள் சந்தையில் கிடைக்கின்றன. அது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மழை அளவை குறித்து தகவல் தந்துவிடும்.
/4

جاري تحميل الاقتراحات...