16 تغريدة 16 قراءة Oct 12, 2023
உலகெங்கும் இருக்கும் பொது கருத்து என்னவென்றால் Zionist, 19 ஆம் நூற்றாண்டில் அவர்களின் முன்னோர்களின் நாடான இஸ்ரவேலுக்கு திரும்பி வந்தார்கள். பணம் கொடுத்து அங்கிருந்த இஸ்லாமியர்களிடம் இருந்து நிலங்களை வாங்கினாலும் இஸ்லாமியர்கள் யூத வெறுப்பு காரணமாக யூதர்களை எதிர்த்தார்கள். 1/16
யூதர்கள் வேறு வழியின்றி தங்களை காத்து கொள்ள நேரிட்டது.
ஆனால் உண்மை இதுவா? இல்லை.
Zionist movement குறிக்கோள் லட்சியம் ஆரம்பத்திலிருந்தே பாலஸ்தீனத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரையும் அகற்றி முழுமையான யூத நாடான Israel ஐ உருவாக்க வேண்டும் என்பதே. 2/16
Jewish National Fund மூலம் வாங்கப்பட்ட அனைத்து நிலங்களும் யூதர்களின் பெயரில் இருக்கிறது. இந்த நிலங்கள் மீண்டும் எந்த இஸ்லாமியருக்கும் விற்கவோ அல்லது lease கோ விட முடியாது. Palestinian க்கு Zionist களின் எண்ணம் நன்கு தெரியும் என்பதாலேயே அவர்கள் இவர்களை எதிர்க்கிறார்கள். 3/16
யூதர்களின் புனித புத்தகமான Torah இஸ்லாமியர்களுக்கும் புனித புத்தகம் தான்.
3000 க்கும் 1100 B.C க்கும் இடையே இன்றைய Israel, West Bank, Lebanon, Syria, Jordan ஆகிய நாடுகளில் இருந்தவர்கள் Canaanites. 4/16
Romans யூதர்களை Jerusalem லில் இருந்து விரட்டி அடித்த பின் அங்கு எஞ்சி இருந்தவர்கள் pagans, converts to Christianity, Arabs, Persians, Samaritans, Greeks, Canaanite tribes. இவர்கள் எல்லாரும் ஓட்டோமான் வருகைக்கு பின் இஸ்லாமியர்களாக மாறிவிட்டார்கள். 5/16
“But all these [different peoples who had come into Canaan] were additions, sprigs grafted onto the parent tree…And that parent tree was Canaanite… [The Arab invaders of the 7th century A.D.] made Moslem converts of the natives, 6/16
settled down as residents, and intermarried with them, with the result that all are now so completely Arabized that we can’t tell where the Canaanites leave off and the Arabs begin.”
Ilene Beatty, “Arab and Jew in the Land of Canaan.” 7/16
David, Solomon போன்ற யூத அரசர்கள் எல்லாரும் சேர்ந்தே தோராயமாக ஒரு 75 வருடம் தான் அந்த இடத்தை ஆட்சி செய்து இருக்கிறார்கள். யூதர்கள் அங்கிருந்த வரலாறு (வரலாறு என இங்கு சொல்வது புனித புத்தகங்களில் இருக்கும் கதைகளின் அடிப்படையில்) என்று பார்த்தாலும் 500 வருடங்களை தாண்டாது. 8/16
Canaan க்கு David ன் வருகை 1000 B.C.யில் இருந்து Judah 586 B.C. யில் அழிக்கப்பட்டது வரை.
7 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து பாலஸ்தீனம் ஒரு முழுமையான இஸ்லாமிய அரபு தேசமாக இருந்து வருகிறது.
இதில் விவசாய நிலங்களை பண்ணை கூலிகள் போல விவசாயிகள் வேலை செய்து வந்தனர். 9/16
தலைமுறை தலைமுறையாக அந்த நிலம் அந்த விவசாயிடமே இருக்கும். பண்ணையார்கள் அறுவடையில் ஒரு லாபம் பார்ப்பார்கள். ஆனால் நிலத்தில் அவர்கள் தலையீடு இருக்காது. யூதர்கள் நிலங்களை வாங்கும்போது இந்த பண்ணையார்களிடம் இருந்து நிலங்களை வாங்கி இருக்கிறார்கள். 10/16
இதில் பெரும்பாலான பண்ணையார்கள் பட்டா இல்லாத நிலங்களை தங்கள் பெயரில் எழுதி யூதர்களிடம் விற்று இருக்கிறார்கள். இது எதுவும் அந்த நிலத்தில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வாழ்ந்து வந்த விவசாயிக்கு தெரியாது. 11/16
The fellahin [peasants] naturally considered the land to be theirs, and often discovered that they had ceased to be the legal owners only when the land was sold to Jewish settlers by an absentee landlord… Not only was the land being purchased; 12/16
its Arab cultivators were being dispossessed and replaced by foreigners who had overt political objectives in Palestine.”
Rashid Khalidi, “Blaming The Victims,” ed. Said and Hitchens. 13/16
Zionist வருவதற்கு முன்பு வரை Yishuv எனப்படும் சிறிய யூத இனமும் பாலஸ்தீனத்தில் இருந்து இருக்கிறார்கள். அவர்களும் இஸ்லாமியர்களும் இணக்கமாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். Zionist வந்து நிலங்களை பறித்த பின்னரே பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது. 14/16
Middle Ages ல் ஐரோப்பா ரஷ்யா வில் யூத வெறுப்பு அதிகமாக இருந்தபோது, அங்கிருந்து பல யூதர்கள் North Africa விற்கும் Arab Middle East க்கும் குடி பெயர்ந்திருக்கிறார்கள். அங்கிருந்த இஸ்லாமியர்களுடன் அவர்கள் இணக்கமாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். 15/16
Zionists வந்து Palestine எங்களுக்கே என்று இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தும் போதே பிரச்சனைகள் தோன்றி இருக்கின்றன. 16/16

جاري تحميل الاقتراحات...