Theni Siraj
Theni Siraj

@thenisiraj

6 تغريدة 4 قراءة Oct 12, 2023
தமிழ் நாட்டில் எப்படியாவது நுழைந்திட துடிக்கும் சங் பரிவார கூட்டம் புதிய செயல் திட்டம்..
ஆர்எஸ்எஸ் (RSS) தமிழ் முகமூடியுடன் தமிழர்களைக் கவர்ந்து இழுத்திடத் திட்டம்.!
ஆர்.எஸ்.எஸ். ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் ஒவ்வொரு வகை சூழ்ச்சியோடு நுழைந்ததை அனைவரும் அறிந்திருப்போம்.
1/n
அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடியப்படியே, ஆர்.எஸ்.எஸ். மராட்டியத்திற்குள் நுழைந்தது..
பஞ்சாபில் ஆர்.எஸ்.எஸ்., இராஷ்ட்ரிய சீக்கிய சங்கம் என்கிற பெயரில் நுழைந்து சீக்கியர்களை ஏமாற்றியது..
ஒவ்வொரு சாதி மக்களையும், பரவலாக இப்படிப் பல வகையில் ஏமாற்றி வந்தவர்கள், இப்போது
2/n
'தமிழ் சேவா சங்கம்' (TSS) என்கிற பெயரில் தமிழர்களை, குறிப்பாகத் தமிழ் ஆர்வலர்களை, இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், பழந்தமிழ்க் குடிகளான பறையர் குடிமக்களின் தலைவர்கள் பலரை ஏமாற்றி, பணத்தை இரைத்துச் செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள் .. பல இயக்கங்கள்
3/n
முட்டிகள் தேய நெடுஞ்சாண் கடையாக வீழ்ந்து கிடக்கின்றன..
தமிழ்த் தேசிய உணர்வுடைய..
சாதி ஒழிப்பு உணர்வுடைய..
பார்ப்பனிய எதிர்ப்பு உணர்வுடைய..
வல்லரசு எதிர்ப்பு உணர்வுடைய..
அனைவரும் எச்சரிக்கையாகவும், எதிர்த்து களம் காணுகிற வலிமையோடும், செயல்பட்டாக வேண்டிய நேரம் இது..
சாதிய
4/n
சனாதன பார்ப்பனிய வல்லாட்சியை வீழ்த்துவதன் வழிதான், தேசிய இன உரிமைகளும், மக்கள் விடுதலையும், கிடைக்கும் எனத் தெளிவோம்..
ஆர்.எஸ்.எஸ், திருக்குறள் முகமூடி போட்டு வந்தாலும் சரி, தமிழ் முகமூடி போட்டு வந்தாலும் சரி, விரட்டி அடிக்க வேண்டியது தமிழ்த் தேசிய இன உரிமைப் போராளிகளின்,
5/n
பெரியாரிய உணர்வாளர்களின், அம்பேத்காரிய உணர்வாளர்களின், மார்க்சிய உணர்வாளர்களின், கடமை என்பதை உணர்வோம்..
கருத்தாக்கம்:
தோழர்_பொழிலன்
இவர்களின் சதித்திட்டத்தை அம்பலபடுத்தி அனைவருக்கும் சென்றடைய செய்யுங்கள்..
#RSS_Mukt_Bharat
@hihareesh @pidisambal @ntypeq @baldeagle_offic

جاري تحميل الاقتراحات...