Knowledge Hub
Knowledge Hub

@KalviSurangam

4 تغريدة 1 قراءة Nov 13, 2023
🧵🧵
ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸை) ஆன்லைனிலேயே புதுப்பிப்பது எப்படி தெரியுமா?
➡️முதலில், parivahan.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
➡️பிறகு, "ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
/1
#Driving #Licence #renew #online
➡️உங்கள் மாநிலம் மற்றும் 'உரிமச் சேவைகள்' (Tamilnadu) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
➡️DL-ன் புதுப்பித்தல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் விவரங்களை பதிவிட்டு "ஆம்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
/2
➡️கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு CAPTCHA- குறியீட்டை சரியாக கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
➡️அடுத்து, உங்கள் விண்ணப்பத்திற்கான ஒப்புகை சீட்டு கொடுக்கப்படும்.. பிறகு, உங்கள் வாகன ஓட்டுநர் உரிமத்தை அப்டேட் செய்வதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, பழைய DL ஐ பதிவேற்ற வேண்டும்.
/3
➡️ பின்பு, கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் செயல்படுத்தப்படும். கட்டணம் செலுத்திய ரசீதை, பத்திரமாக பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
➡️இப்போது, அடுத்த சில நாட்களில், புது Driving Licence, நீங்கள் பதிவிட்ட முகவரியில் தபால் மூலம் கிடைக்கப்பெறுவீர்கள்.
/4

جاري تحميل الاقتراحات...