Muralitharan K
Muralitharan K

@muralijourno

9 تغريدة 5 قراءة Sep 27, 2023
ஊடகங்கள் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும், யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு அடுத்த நாள் சென்று சாதாரண பொதுமக்களிடம், அந்த பட்ஜெட் பற்றிக் கேட்டால் அறியாமையே பதிலாகக் கிடைக்கும். ஆனால், 1991ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வேறு மாதிரி இருந்தது.
(1/9)
இந்தியாவின் நிதியமைச்சராக பதவியேற்றிருந்த Dr. மன்மோகன் சிங் தனது பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்திருந்ததற்கு அடுத்த நாள். மதுரை போன்ற 2ஆம் நிலை நகரங்களில் இருந்த தேநீர் கடைகளில்கூட இந்த பட்ஜெட்டைப் பற்றி, செய்தித் தாள்களில் வந்த தகவல்களை வைத்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
(2/9)
அந்த அளவுக்கு அந்த பட்ஜெட் பெரும் அதிர்ச்சியைத் தந்திருந்தது.
வி.பி. சிங் தலைமையிலான அரசு, சந்திரசேகர் தலைமையிலான அரசு என இரு அரசுகள் அடுத்தடுத்து கவிழ்ந்திருந்தன. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருந்தார். நிதி நிலைமை மிக மோசமாக இருந்தது.
(3/9)
1970களில் 4 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை 1991ல் 8 சதவீதமாக இருந்தது. அரசின் பொதுக் கடன், ஜிடிபியில் 55 சதவீதமாக இருந்தது.
இந்த நிலையில்தான் 1991ஆம் ஆண்டின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் மன்மோகன் சிங். ஜூலை 24ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் அவர் வாசித்த பட்ஜெட்...
(4/9)
உரை மிக அற்புதமாக இருந்தது. அந்த பட்ஜெட்டிலிருந்த வார்த்தைகள், அவரது மனதிலிருந்து வெளிப்பட்டவையாக இருந்தன.
இதைத் தொடர்ந்து இந்தியா டுடே தமிழ் இதழ் இரண்டு கவர் ஸ்டோரிகளை வெளியிட்டது. இப்போது படித்தாலும், அந்தக் கட்டுரைகள் பல புதிய தகவல்களைக் கொண்டிருப்பதாகப்படுகின்றன.
(5/9)
இந்த இதழ் ஒன்றில் சமீபத்தில் மறைந்த கார்ட்டூனிஸ்ட் அஜீத் நைனன் ஒரு அற்புதமான கார்ட்டூன் ஒன்றை வரைந்திருந்தார். மன்மோகன் சிங்கின் அற்புதமான பேட்டியும் வெளியாகியிருந்தது.
இந்தியப் பொருளாதாரம் திறக்கப்பட்டு இப்போது முப்பத்தி இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன.
(6/9)
பொருளாதாரத்தில் இந்தியா பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. இதன் பின்னணியில் இருந்த மனிதர் அமைதியாக இருக்கிறார்.
தனது பட்ஜெட் உரையின் கடைசியில் விக்டர் ஹ்யூகோவின் புகழ்பெற்ற இந்த வார்த்தைகளைச் சொல்லி தனது உரையை நிறைவுசெய்தார் மன்மோகன் சிங்:...
(7/9)
“ஒரு சிந்தனைக்கான காலம் கனிந்துவிட்டால், பூமியில் உள்ள எந்த சக்தியாலும் அதனைத் தடுக்க முடியாது. இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும் என்பது அம்மாதிரியான ஒரு சிந்தனை. மொத்த உலகமும் இதனை சத்தமாகவும் தெளிவாகவும் கேட்கட்டும்...
(8/9)
இந்தியா தற்போது விழித்துக் கொண்டுவிட்டது. நாம் நிற்போம். தடைகளைத் தாண்டிச் செல்வோம்".
டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு இன்று 92வது வயது பிறக்கிறது. அவர் சொன்னது நடந்துவிட்டது.
(9/9)

جاري تحميل الاقتراحات...