Vasavi Narayanan (Modi is My Familyman)
Vasavi Narayanan (Modi is My Familyman)

@VasaviNarayanan

9 تغريدة 26 قراءة Sep 16, 2023
🌺அறியப்படாத வைத்தியங்கள்...🌺
தா.சி.அழகு கோனார்...♥️
கடுமையான மஞ்சள்காமாலையா அல்லது ஆரம்ப கட்ட மஞ்சள் காமாலையா???
இதை சரி செய்ய புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள கானபேட்டை ஊரில் நாட்டு மருந்து தரப்படுகிறது.
இந்த ஊரை கடுக்காய்பட்டி கடியாப்பட்டி கரியாபட்டி என
பலவிதமாய் சொல்கிறார்கள். இந்த ஊரின் அருகில் உள்ள பெரிய ஊர் கடியாப்பட்டி. நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வானளாவிய அரண்மனை வீடுகள் உள்ள ஊர்.
மஞ்சள்காமாலை நோய் எப்படி முற்றி இருந்தாலும், மிக சிறந்த டாக்டர்களால் கைவிடப்பட்டாலும், இவரை நம்பி போகலாம் நிவர்த்தி கிடைக்கும்.
உங்களுக்கு மஞ்சள்காமாலை எந்த அளவு என்பது வெறும் நாடி பார்த்து சொல்லப்படுகிறது. பரம்பரை வைத்தியம் மூலம் மருந்து தரப்படுகிறது..
காலை 6 மணிமுதல் 10 மணிக்குள் மருந்து தருகிறார்கள். வெயில் வந்த பிறகு மருந்து தருவது நிறுத்தபடுகிறது
ஒரு நபருக்கு ₹801 மட்டும் கட்டணம் பெறப்படுகிறது மருந்து கொடுத்த 1 மணி நேரம் கழித்து அவரது தோட்டத்தில் குளித்தவுடன் அவர்கள் சார்பாக இலவசமாக பச்சரிசி சாதம் தொட்டு கொள்ள வெல்லம் மட்டும் தருவார்கள். குடிக்க 20 ரூபாய்க்கு பசும்பால் தருவர்கள்
புதன் சனிகிழமைகளில் எந்த காரணத்தை கொண்டும் மருந்து தருவதில்லை.
மற்ற பத்தியம் என எதை சாப்பிட ௯டாது எதை சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக நமக்கு சொல்கிறார்கள்.
கிட்ட தட்ட ஒரு தொழிற்சாலை போல நடந்து வருகின்றது. 150 க்கும் மேற்பட்ட மாடுகள், இதை கவனித்து கொள்ள ஆட்கள்,
மருந்து இடிக்க ஆட்கள் என பிரம்மாண்டமாக ஒரு வைத்தியசாலை நடந்து வருகின்றது.
புதன் சனிகிழமைகளில் எந்த காரணத்தை கொண்டும் மருந்து தருவதில்லை...
பல மாவட்டங்களிலிருந்தும் இங்கு வந்து மஞ்சள்காமாலை நோய் தீர வந்து செல்வதுண்டு.
🙏வெற்றி வீரன் யாதவ்
என் சிறு வயதில் நான் மருந்து எடுத்தேன். பெரிய வயல்பரப்பு, மாடுகள் இருந்தன. அப்போது குடும்பத்தாரே எல்லா வேலைகளையும் செய்வர். நல்ல குணம் தெரியும் மருந்தை சாப்பிட்டதும்.
நம்பிச் செல்லலாம். தெரிந்தவர்களுக்கும் தெரிவியுங்கள். யாருக்கேனும் பயன்படும்.
🍁வாஸவி நாராயணன்🍁

جاري تحميل الاقتراحات...