Rajkumar Madhavan
Rajkumar Madhavan

@RajkumarMadhav5

2 تغريدة 3 قراءة Sep 10, 2023
முழுமதி முகத்தை,
புர்கா இட்டு மறைக்கலாமா ?
கூக்குரலிட்டு அழுத கூட்டம்
தன் நகரத்தையே மறைக்குது !
அறுசுவை உணவை,
வெள்ளி தட்டில் உண்போருக்கு,
சேறும் சகதியும்
கசக்கத்தான் செய்யுமோ ?
மாடமாளிகையில் வசிப்போருக்கு,
அதை உருவாக்கியவன்,
வசிக்கும் இருப்பிடம்
சாக்கடையாக தான் தெரியுமோ ?
1/2
வியர்வை துளியிலும்,
சகதி சேற்றிலும்,
உருவான தேசம்,
இது பெருமையே அன்றி,
சிறுமை இல்லை மூடரே !
2/2

جاري تحميل الاقتراحات...