Sevak Sathya
Sevak Sathya

@Sevakofmata

5 تغريدة 5 قراءة Sep 04, 2023
சகோ, விநாயகர் ஒரு ஆரிய பார்பண திணிப்பு. அவர் தமிழர் கடவுளே இல்லை..
சரிடா, 'விநாயகர் அகவல்' னு ஔவையார் ஏன் நூல் இயற்றினார்.?
அவரும் ஆரிய பார்பண கைக்கூலி சகோ, அவர் தமிழரே இல்லை.
சரிடா,திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் ஏன் முதல் பாடலாக விநாயகர் துதி பாடினார்?
அவரும் ஆரிய பார்பண கைக்கூலி சகோ,
அவர் தமிழரே இல்லை..
சரிடா,திருமுறுகாற்றுப்படை தந்த சங்கத்தமிழ் புலவர்கள்
"முருகனே! செந்தில்முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்"
னு ஏன் பாடினாங்க??
அவர்களும் ஆரிய பார்பண கைக்கூலிகள் சகோ, அவர்கள் தமிழர்களே இல்லை..
சரிடா, பிள்ளையார்பட்டி ல 1600 ஆண்டுகள் முன்னரே பாண்டிய மன்னர் ஏன் கற்பக விநாயகர் கோவில் கட்டினார்?
அவரும் ஆரிய பார்பண கைக்கூலி சகோ,
அவர் தமிழரே இல்லை..
சரிடா, திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலை சோழர்கள் பல்லவர்கள் நாயக்க மன்னர்கள் அனைவரும் சேர்ந்து ஏன் உருவாக்கினாங்க?
அட அவர்களும் ஆரிய பார்பண கைக்கூலிகள் தான் சகோ. அவர்களும் தமிழர்களே இல்லை..
ஆக,
சங்கத்தமிழ் புலவர்களும் தமிழர் இல்ல,
சங்க கால மன்னர்களும் தமிழர் இல்ல,
சங்கத்தமிழ் வரலாற்றுல யாருமே தமிழர்கள் இல்ல.. ஆனா நீ தான் தமிழன்.
ஆமா உன் பெயர் என்ன ராஜா?
நெல்சன் சகோ..
அந்த செருப்ப எடுத்து குடுங்களேன் நெல்சன் அவர்களே.....

جاري تحميل الاقتراحات...