அன்பெழில்
அன்பெழில்

@anbezhil12

19 تغريدة 19 قراءة Jul 23, 2023
#புட்லூர்_ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி_அம்மன் கோவில்
சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஒரு முறை சிவனும், பார்வதியும் மேல்மலையனூருக்கு புட்லூர் வனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். நீண்ட தூரம் நடந்து களைப்படைந்ததால் வேப்ப மர
நிழலில் கர்ப்பிணியாக இருந்த பார்வதி அமர்ந்தாள். தாகமாக இருப்பதால் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். உடனே சிவபெருமான் அருகில் இருந்த கூவம் நதியை தாண்டி சென்று புனிதநீர் எடுத்து வந்தார். அந்த சமயத்தில் பலத்த மழை பெய்து கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சிவபெருமான்,
சிவபெருமானால் நதியை கடந்து வர இயலவில்லை. எனவே வெள்ளம் குறையட்டும் என்று சிவன் காத்திருந்தார். இதற்கிடையே பசி தாகத்துடன் இருந்த பார்வதி அப்படியே தரையில் விழுந்து விட்டாள். அவளை சுற்றி மண் குவிந்து புற்றாக வளர்ந்து விட்டது. இந்த நிலையில் அங்கு திரும்பி வந்த சிவபெருமான்,
புற்றுக்குள் பார்வதி அமர்ந்து விட்டதை அறிந்து அங்கேயே நின்று விட்டார். அதை பிரதிபலிக்கும் வகையில் புட்லூர் தலத்தில் தாண்டவராயன் அம்சமாக சற்று கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை பார்க்கலாம். புட்லூர் தலத்தில் பரமேஸ்வரி அமர்ந்த புற்று தற்போதும் வளர்ந்தபடி உள்ளது. இத்தல நாயகி
நவக்கிரக தோஷங்களை நீக்கி, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருகிறாள். தன்னை நம்பி வரும் பக்தர்களின் திருஷ்டியை விலக்கி, அவர்கள் மீது படிந்துள்ள பில்லி, சூனிய தோஷங் களை விரட்டுகிறாள். சிலருக்கு அவள் பாம்பாக காட்சி கொடுக்கிறாள். சிலருக்கு மூதாட்டியாக காட்சி
கொடுக்கிறாள். மேலும் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் மல்லாந்து படுத்திருப்பது போல அம்மனே இத்தலத்தில் இயற்கையாக தோன்றி உள்ளாள். இந்த அதிசய தோற்றத்தை பக்தர்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் பார்த்திருக்க முடியாது.
குழந்தை வரம் வேண்டி விருப்பமுள்ள பெண் பக்தர்கள் 5 எலுமிச்சம்
பழங்களும் வளையல்களும் வாங்கி வர வேண்டும். ஒரு எலுமிச்சம்பழம் கொண்டு கோவிலில் உள்ள வயதான பெண் பக்தர்களின் மூலம் கண்திருஷ்டி கழிக்க வேண்டும். திருஷ்டி எடுத்த பெண் அதை காலின் அடியில் வைத்து நசுக்கி விட வேண்டும். கொடிக் கம்பத்தின் அடியில் ஒரு திரிசூலம் உள்ளது. பக்தர்கள் 3 பழங்களை
அந்த திரிசூலத்தில் குத்தி விட வேண்டும். அங்கு அவர்கள் ஒரு துணியையும் கட்டிவிட வேண்டும். ஐந்தாவது எலுமிச்சை பழத்தைக் கோவில் பூசாரியிடம் கொடுத்துவிட வேண்டும். அவர் அதை குங்குமத்துடன் கலந்து அம்மன் பாதத்தில் வளையல்களுடன் வைப்பார். எலுமிச்சை பழம் உருண்டு விழும் பொழுது அது பிரசாதமாக
தரப்படுகிறது. அதை நாம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். வளையல்கள் அங்குள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பலரும் இங்கு வந்து சீமந்தம் செய்கின்றனர். 
அவர்களுக்குக் குழந்தை பிறந்த பின் பக்தர்கள் புடவை, வளையல், பூஜடை, எலுமிச்சை பழம், பலதரப்பட்ட அரிசி மற்றும் பொங்கலை
படைக்கிறார்கள். புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலில் உள்ளே கர்ப்பகிரகத்துக்கு நேர் எதிரில் மண்புற்றாக மல்லாந்தவாக்கில் பூங்காவனத்தம்மன் எழுந்தருளி இருக்கிறாள். சுயம்பு புற்று முழுக்க முழுக்க
மஞ்சளும், குங்குமம் துலங்க அன்னை அருள்பாலிக்கிறாள். அன்னை ஈசானிய மூலையில் காலை நீட்டி தென்மேற்கில் தலைவைத்து மல்லாந்து இருக்கிறாள். அந்த சன்னதியில் கால் வைத்த மறு வினாடி எல்லா பக்தர்களுக்கும் உடம்பில் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது. மண்புற்று மாதாவுக்கு அப்பால், கருவறையில் சூலம்
தாங்கிய அங்காள பரமேஸ்வரி, எலுமிச்சம்பழ மாலைகளுடன் ஏற்றமான பூ அலங்காரங்களுடன் புன்னகை துலங்க காட்சி அளிக்கிறாள். சந்நதியை விட்டு வெளியே வந்தால், பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் தல விருட்சமாக வேம்பு இருப்பதை பார்க்கலாம். அதன்கீழ் சுயம்புவாக உயர்ந்திருக்கும் இன்னொரு மண்புற்று,
உள்ளது. அதன் உள்ளிருக்கும் அன்னைக்கு அளிப்பதற்காக எடுத்து வரப்படும் பால் இந்த புற்றில் அர்ப்பணம் செய்யப்படுகிறது. இந்தப் புற்றைச் சுற்றி வரும்போதே மகளிர் தங்கள் புடவையின் முந்தானையில் இருந்து ஒரு பகுதியை கிழித்து வேப்ப மரக்கிளையில் கட்டி முடிச்சுப் போடுகிறார்கள். வேண்டுதல்கள்
நிறைவேறுகின்றன. இந்த அம்மனின் சந்நிதியில் ஒருமுறை காலடி எடுத்து வைத்தால் மனக் குறைகள் அகலும், தடைகள் விலகும், பில்லி, ஏவல், சூனியம், பேய், பிசாசுகள் போன்ற எவை இருப்பினும் இருந்த இடம் தெரியாமல் விலகிப் புண்ணியங்கள் சேரும் என்பது இவள் அற்புதம் அறிந்த மக்களின் மனதில் இருக்கும் மாறாத
நம்பிக்கையாகும். இத்தகைய சிறப்புடைய புட்லூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமை கூழ் வார்த்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு அபிஷேகம்
ஆராதனைகள் நடைபெறுகிறது. ஆடி மாதம் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வழிபாடு செய்வார்கள். ஆடி மாதம் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும். மேலும் கர்ப்பம் தரித்த
பெண்கள் ஆடி மாதம் இந்த கோவிலில் வந்து வழிபாடு செய்தால் பிரசவத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ஆடி மாதம் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் நம் வேண்டுதல்கள் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். திருமணம்
மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:30 முதல் இரவு
8 மணி வரை;
மற்ற நாட்களில் காலை 6:30 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஓம் சக்தி!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

جاري تحميل الاقتراحات...