வீதி சத்வா
வீதி சத்வா

@jegdhees

14 تغريدة 171 قراءة Jul 21, 2023
மணிப்பூர்ல என்னதான் பிரச்சினை?
குக்கி, மேத்தி னு இரண்டு இனமக்கள். அதுல மேத்தி இனத்தவர்கள் சமவெளியிலயும் குக்கி இனத்தவர்கள் மலைப்பகுகள்லயும் வாழறவங்க. சமவெளில வாழறவங்களுக்கு அடிப்படை தேவைகள்ல இருந்து ஆடம்பர வசதிகள் வரைக்கும் கிடைக்குது. ஆனா மலைவாழ் குக்கி இனத்துக்கு மருத்துவம்
மின்சாரம், கல்வி, உணவு னு அடிப்படை தேவைகளே கிடைக்கிறது இல்லை. இந்த சூழ்நிலைல பாப்பி எனப்படும் போதைச்செடி மேத்தி இனத்தை சேர்ந்த வசதியானவர்களாலும் அரசியல்வாதிகளாலும் நீண்ட காலமாக வளர்க்கப்படுது. ஆனா பாப்பி செடி சமவெளில வளராது. மலைப்பகுதிகள்ல தான் வளரும். குக்கி இனத்துல சிலர
காசுக்காக விலைபேசி அவங்களோட நிலங்கள்லயும் அரசாங்க வனப்பகுதிகள்லயும் வளர்க்கறாங்க மேத்தி இனத்தை சேர்ந்த போதை மாஃபியா. ஆனா இதுல அடிக்கடி பிரச்சினை வந்துட்டே இருக்கு. குக்கி இனத்தவர்கள்ல பாப்பி செடி வளர்க்க கூடாதுனு ஒரு சாராரும் எங்க நிலத்துல வளர்ற செடி எங்களுக்கு தான் சொந்தம்னு
ஒரு சாராரும் பிரச்சினைனு பண்ணிட்டே இருக்காங்க. இப்படி இவனுங்க பிரச்சினை பண்ணிட்டே இருக்கானுங்களே நாமலே நிலத்தை வாங்கி அதுல பாப்பி செடிய வளர்க்கலாம்னா அங்கதான் ஒரு பிரச்சினை வருது. குக்கி இன மக்கள தவிர வேறு யாருக்கும் அங்க நிலம் வாங்க உரிமை இல்லைனு சட்டத்துல இருக்கு. ஆனா அதுல
குக்கினு இல்லாம ST இருக்கு. இப்ப இந்த போதை மாஃபியாவும் அரசியல்வாதிகளும் சேர்ந்து நாமளும் ஒடுக்கப்பட்டவர்கள் தான் நமக்கும் இட ஒதுக்கீடு வேணும். அதுவும் ST பிரிவுக்கு தங்கள மாத்தி தான் வேணும். அப்பதான் மலைப்பகுதி நிலங்களை வாங்க முடியும்னு ப்ளான் பண்றாங்க. அவர்களுக்கு இட ஒதுக்கீடு
தான் வேணும்னா உள் ஒதுக்கீடு கேட்டுருக்கலாம் அவங்களுக்கு தேவை நிலமாச்சே அதனால ST மாத்துங்கன்னு போராட்டம் பண்றாங்க. ST பிரிவுக்கு மாத்தி மலைப்பகுகள் குக்கி இனத்தவர்கக்கு மட்டும் தான் சொந்தம்னு சொல்லிருந்தாலும் இந்த கலவரம் நடந்திருக்கும். ஆனா மாநில பாஜக அரசு முதல்வர், அமைச்சர்கள்
MLA னு பெரும்பான்மையா மேத்தி இனத்தவர்களே இருக்கதால குக்கி இன மக்கள அழிக்க முடிவு பண்றாங்க. மேத்தி இன மாஃபியாக்காளோட பினாமியா பாப்பி செடி வளர்க்குற குக்கி இன மக்கள ஆயிரக்கணக்கில் கைது பண்றாங்க. ஆனா ஒரு மேத்தி இனத்தை சேர்ந்தவர்களை கூட கைது பண்ணல. அதோட பாஜக முதல்வர்&அரசியல்வாதிகள்
குக்கி இன மக்களை அகதிகள்னும், வந்தேறிகள்னும் பிரச்சாரம் பண்றாங்க. குக்கி இன மக்கள் மணிப்பூர் மாநிலத்திலும் மியான்மர் நாட்டிலும் ஒரு கூட்டமா வாழ்ந்தவங்க. நடுவுல இந்தியாவும் மியான்மரும் ஒரு கேட்டை போட்டு இனிமே நீங்க வேற வேறனு சொன்னத ஏத்துக்க முடியல அவங்களால. காஷ்மீர்ல பாதிய
பாகிஸ்தான் ஆக்கிரசதுக்கப்பறம் என்ன நடந்துச்சோ அதுதான் இங்கேயும் நடந்துச்சு. பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிகள திருப்பி பெறாம காஷ்மீர் நடுவுலயே வேலிய போட்டு சொந்தக்காரங்களையே பாக்கவிடாம பண்ணுச்சு இரண்டு நாடுகளும். இப்படி ஒரு சூழல்ல குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் மேத்தி இனத்தை சேர்ந்த
ஒரு பெண்ணை ரேப் பண்ணதா ஒரு ஃபேக் போட்டோவ போட்டோஷாப் பண்ணி பரப்புறாங்க. அத அந்த அரசாங்கம் தடுக்கவே இல்லை. அதோட விளைவா தான் இரண்டு பெண்கள ரேப் பண்ணிருக்காங்க மேத்தி இனத்தவர்கள். மேத்தி இனத்தை சேர்ந்தவர்கள் குக்கி கிராமத்துக்குள்ள கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல நுழைஞ்சு அந்த பெண்கள
இழுத்துட்டு போயிருக்காங்க. அத்தனை பேர் கைகள்லயும் AK47 மெஷின்கள் இருந்திருக்கு. எப்படி அவ்வளவு துப்பாக்கிகள் அவங்க கைக்கு கிடைச்சதுனு கேட்டா அரசு ஆயுத கிடங்குகள்ல இருந்து திருடிட்டு போய்ட்டதா சொல்றாங்க. 4200 துப்பாக்கிகளை திருடியவர்களை கைது செய்யாமல் பாப்பி செடி வளர்த்தாங்கன்னு
2500 க்கு மேல குக்கி இனத்தவர்கள கைது செஞ்சுருக்காங்க. கற்பழிக்கப்பட்ட பெண் போலிஸ் தான் தங்களை மேத்தி இன கலவரக்காரர்களிடம் தங்களை இழுத்து சென்று ஒப்படைத்ததாக பேட்டி குடுத்திருக்கிறாள். அப்படின்னா போலிஸாரும் அவங்களிடம் இருந்த துப்பாக்கிகளை பாத்திருப்பாங்க. ஆனா கைது பண்ணல.
மாநில அரசு தான் மேத்தி இனத்தவர்களிடம் துப்பாக்கிகளையும் துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சிகளையும் குடுத்ததாக ஒரு குற்றச்சாட்டும் வைக்கப்படுது. போதை செடி வளர்க்கறதுக்கு இடைஞ்சலாக இருப்பதற்காக ஒரு இனத்தையே அழிக்க முடிவு செய்திருக்கிறது ஆளும் கட்சி.

جاري تحميل الاقتراحات...