அன்பெழில்
அன்பெழில்

@anbezhil12

4 تغريدة 9 قراءة Jul 19, 2023
#மகாபெரியவா
சொன்னவர் திருமதி சரஸ்வதி தியாகராஜன்
தி.க.வைச் சேர்ந்த பெரிய பணக்காரர் காஞ்சி மஹாப் பெரியவர் மீது காவிரியில் நீராடும் போது இரண்டு செருப்புக்களை வீசி அவதூறு பேசினார். இருபது வருடங்கள் கழிந்தன. அவரது பெண்ணுக்கு முப்பது வயதாகியும் திருமண மாகவில்லை! காஞ்சிப் பெரியவரிடம்
சென்று கதறி அழுதார். பெரியவர் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து "நீ ஒரு செருப்பு எரிஞ்சதும் எட்டு முழுக்கு போட்டு எம்மேல செருப்பெரிஞ்ச பாவம் உன் எட்டு தலை முறைகள் பாதிக்கக் கூடாதுன்னு காவேரித் தாயை வேண்டின்டேன்! நீ இன்னொரு செருப்பையும் வீசினே. நான் மறுபடி 8 தலைமுறை பாவம் போக எட்டு
முழுக்குப் போட்டேன். உன் தயவால் 19 முறை காவிரி முழுக்கு பாக்யம் எனக்கு. இந்தா உன் மகளுக்கு 90 நாளைக்குள்ள கல்யாணம் ஆயிடும். நீயே வந்து சொல்வ! க்ஷேமமா இரு!" என மட்டைத் தேங்காய் கொடுத்து ஆசீர்வாதம் செய்தார். அப்படியே நடந்தது. இன்று சங்கராச்சாரியாரை அவதூறாக பேசுபவர்களை எண்ணி மிகவும்
வருந்துவேன். என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பாவத்தைக் கட்டிக் கொள்கிறார்களே என்று! ஞானிகள் சாதாரணமாகத் திரிவார்கள். பிடிக்காவிட்டால் ஒதுங்கிவிடுவது நலம். அவதூறாகப் பேசினால் குலமே அழிந்துவிடும்! காப்பாற்ற யாராலும் முடியாது!
மகான்களை இகழாதீர்கள்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

جاري تحميل الاقتراحات...