4 تغريدة 135 قراءة Jul 18, 2023
யானைகளுக்கான முகாமைத் தொடங்கிவைக்க முதல்வர் வருகிறார்
அப்போது ஒரு யானைக்குட்டியின் அருகில் போய்த் தொட்டுப்பார்க்கிறார்.. அந்தக் குட்டியானை முதல்வரின் அதிகாரத்தை அறியாமல் முட்டித் தள்ளிவிடுகிறது
மறுநாள் அந்த யானைக்குட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தது
இப்படியொரு கதையை அறிவோம்
இதுவும் ஒரு முதல்வரின் கதைதான்..
கேரளத்தை ஆண்ட
ஒரு காங்கிரஸ் முதல்வரின் கதை
கிராமத்துப் பள்ளிக்குழந்தைகளுக்கான
ஒரு விழாவில் முதல்வர் கலந்துகொள்ள வருகிறார்..
மேடையேறும் நேரத்தில்
உம்மன்சாண்டி..என்று அவர் பெயர் சொல்லி அழைக்கும் குரல் கேட்கிறது
முதல்வர் மட்டுமன்றி உடன்வந்த
அமைச்சர்கள் அதிகாரிகளெல்லாம் திரும்பிப் பார்க்கிறார்கள்
அழைத்தது முதலாம் வகுப்பில் படிக்கும் பெண்குழந்தை..
முதல்வரை அந்தக் குழந்தை பெயரிட்டு அழைத்ததில் எல்லோருக்கும் அதிர்ச்சி
முதல்வர் சிரித்தபடி,
"பறயு மோளே.."என்றார்
-என்ட பிரண்டு அப்புக்குட்டனுக்கு வீடில்லா.. அவனுக்கு
வீடு வேணும், நிங்ஙள்தன்னே கட்டித்தரணும்..
தராமல்லோ.. என்றார் சிரிப்பு மாறாமல்..
சொன்னதோடு நிறுத்தாமல்
அந்தச் சிறுவனின் குடும்பத்திற்கு வீடும் கட்டிக் கொடுத்தார்..
#
புற்றுநோய்க்கு இரையாகி
இன்று மறைந்த
அந்த
எளிய முதல்வருக்கு அஞ்சலி
நன்றி :
தோழர் #கவிதா_பாரதி

جاري تحميل الاقتراحات...