12 تغريدة 5 قراءة Jul 13, 2023
Roman Catholic Church கொண்டு வந்த ஒரு சட்டம் Inquisition. அதாவது, கிறிஸ்தவர்கள் ஆட்சி செய்யும் இடங்களில், பிற மதங்களை பின்பற்றுவதை, பிற மத சடங்குகளை பின்பற்றுவதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட சட்டம் Inquisition.
வேறு மதங்களை பின்பற்றுபவர்கள், கிறிஸ்தவ மதத்தால் தடைசெய்யப்பட்ட காரியங்களை (ஜோதிடம், இயற்கை மருத்துவம், etc.) செய்பவர்களை பிடித்து வந்து சர்ச் விசாரிக்கும். குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கலாம், திரும்ப செய்யாமல் இருக்கலாம்,
அல்லது நிரபராதி என்று நிரூபிக்கலாம். ஆனா, அப்படிதான் செய்வேன் என்ன தப்பு? என்றால் ஊர் மக்கள் முன்னிலையில் உயிரோடு எரிக்கப்படுவார்.
தண்டனைகள், அந்த அந்த ஊரை ஆளும் மன்னர், ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களை பொறுத்து மாறும். இதில் மிக பிரபலமானது Spanish Inquisition (1478–1834).
200 ஆண்டுகளுக்கும் மேலாக Spain நாட்டில் உள்ள யூதர்கள், இஸ்லாமியர்கள் Inquisition என்ற பெயரில் torture செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும் ரகசியமாக அவர்களது தாய் மதங்களை பின்பற்றுவதாக சந்தேகப்பட்டு  torture செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
Inquisition மதத்தை பரப்ப கொண்டு வரப்பட்டாலும், நான் அடிக்கடி சொல்வது போல ஒரே மதம் அதன் மூலம் அரசரின் ஆட்சியை ஸ்தாபிப்பது என்ற அடிப்படையில் கிறிஸ்துவ அரசர்களின் ஆட்சியை நிலைநிறுத்துவது தான் அதை அடிப்படையாக இருந்தது.
Grand inquisitor என்று ஒருவர் சர்ச் மற்றும் அரசரால் நியமிக்கப்படுவார். அவரது வேலை கிறிஸ்துவ அரசர் கைப்பற்றிய நாட்டில் இருக்கும் மக்கள் கிறிஸ்துவ மதங்களை பின்பற்றுகிறார்களா? ரகசியமாக தாய் மத சடங்குகளை பின்பற்றுகிறார்களா? என்றெல்லாம் கண்காணிப்பது. மதம் மாறாதவர்களை,
ரகசியமாக தாய் மதங்களை பின்பற்றுபவர்களை தண்டிப்பது இதெல்லாம் grand inquisitor வேலை.
மற்ற மதங்களை மட்டும் அல்ல, Roman Catholic Church, Protestant களையும் Inquisition (Roman Inquisition) என்ற பெயரில் ஒடுக்கியது.
Roman Catholic Church சொல்லும் சட்ட திட்டங்களை பின்பற்றாத கத்தோலிக்க புனிதர் Ignatius of Loyola என்பவரையும் Inquisition என்ற பெயரில் 2 முறை கைது செய்தது.
Vasco Da Gama இந்தியாவை பற்றி Portuguese களிடம் சொன்னதும், Portuguese படையெடுத்து இந்தியாவின் மேற்கு கடற்கரை, முக்கியமாக
Goa வை கைப்பற்றினார்கள். Goa வில் ஹிந்துக்கள் மட்டுமல்ல யூதர்கள், இஸ்லாமியர்களும் பெருமளவில் இருந்தார்கள்.
நற் செய்தியை பரப்ப வந்த Portuguese மிஷனரி Francis Xavier உள்ளூர் மக்களிடம் மிக அன்பாக பேசி மதம் மாற செய்தார்.
அதுக்கு என்னங்க மாறிட்டா போச்சு என்று Goa மக்கள் மாறினாலும், அவர்களது தாய் மதங்களில் இருக்கும் சடங்குகளை பின்பற்றி வந்தார்கள். இதில் கடுப்பான Francis Xavier, King John III (Portugal) க்கு கடிதம் எழுதி Goa வில் inquisition ஐ அமல்படுத்த சொன்னார்.
இதில் யூதர்களின் பாடுதான் ரொம்ப கொடுமை. அவர்கள் ஏற்கனவே Spanish Inquisition இல் இருந்து தப்பித்து இந்தியாவிற்கு வந்து, இனிமேலாவது நிம்மதியாக இருக்கலாம் என்று பார்த்தால், Spanish Inquisition, Goan Inquisition ஆக பெயர் மாற்றம் அடைந்து பின்னாலயே வந்து புறமுதுகை அடித்தது.
இதில் நாம் கவனிக்க வேண்டியது. எல்லா மிஷனரிகளும் அன்பாக தான் மதத்தை பரப்புவார்கள். Inquisition ஐ செயல்படுத்துவது inquisitor வேலை. Inquisitor கள் கடுமையான சித்திரவதை தண்டனைகளை வழங்கி இருக்கிறார்கள்.

جاري تحميل الاقتراحات...