Vasavi Narayanan (Modi is My Familyman)
Vasavi Narayanan (Modi is My Familyman)

@VasaviNarayanan

16 تغريدة 18 قراءة Jul 11, 2023
🌺1008 வகையான காய்கறிகளுடன் சமைத்த அருந்ததி...🌺
முதலில் அருந்ததி யார் என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்.
🍃வஸிஷ்டரின் மனைவி அருந்ததி தேவி.
🍃கற்பின் சின்னமாய் போற்றப்படுபவர்.
🍃ஒவ்வொரு ஹிந்துவும் திருமணமான முதலிரவில் அருந்ததி நக்ஷத்ரத்தை பார்க்கவேண்டும்.
🍃வஸிஷ்டரும் அருந்ததியும் ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டிருக்கும். அதுபோல நீங்கள் இருவரும் இணைபிரியாமல் வாழுங்கள் என்று புரோகிதர்களும் வாழ்த்துவர்.
🍃ப்ரும்ஹருஷி வஸிஷ்டரின் மனைவி அருந்ததி தேவியின் வம்ஸ்த்தினர்தான் தற்போதைய அருததியினர்.
(திராவிடத்தை நம்பும் மக்கள் கவனிக்க.)
🍃ஹரிஜனம் எனப்படும் சமுதாயப் பெண்ணை... 🍂அவள் கற்பினால் உயர்ந்தவள் என்பதால் ஸநாதனம் கொண்டாடுகிறது. நாங்கள் வணங்கத் தயங்குவதில்லை. அவர்களின் அறிவுத்திறன் கூறும் இந்நிகழ்வின் மூலம் பெண்கள் படிக்கத் தடையில்லை என்பது புரியும் (என நினைக்கிறேன்)🍂
🍆1008 வகையான காய்கறிகளுடன் அன்னமிட்ட அருந்ததி...🍆
🍂அந்த அருந்ததி விஸ்வாமித்ரரிடம் கூறிய அந்த ஸ்லோகம் என்ன?
🍂உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா?
ஸ்ரார்த்த சாப்பாட்டில் முக்கியமா? (பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத்துவையல்!)
ஆதிகாலத்தில் விஸ்வாமித்ரர் புகழ் பெற்ற ராஜரிஷி. அவர் பிறப்பின்படி ராஜ வம்சத்தை சேர்ந்த க்ஷத்ரியர். அவர் காமதேனுவை வஸிஷ்டரிடமிருந்து பறிக்க முயன்று தோற்றார். அப்பசு ஒரு அரசனிடம் இருப்பதை விட ப்ராஹ்மணனிடமே இருத்தல் சிறப்பு என்பதை வஸிஷ்டர் கூற, இதனால் அப்பசுவைப் பெறும் ஒரே நோக்கோடு
தானும் ப்ராஹ்மணனாகி அதனைப் பெறுவேன் எனச் சபதமாட்டு... கடுமையான தபஸ்ஸால் ப்ராஹ்மணனாக மாறி ப்ரும்ஹரிஷியாக உயர்ந்தவர். அதுவும் “வஸிஷ்டர் வாயால் ப்ரும்ஹரிஷி” பட்டம் பெற்றவர்.
ஆனால் இப்படிப் பட்டம் பெறுவதற்கு முன் அவருக்கும் வஸிஷ்டருக்கும் எப்போதும் மோதல்தான்.
அந்த மோதல்களில் கீழ்கண்ட மோதலும் ஒன்று. இது ஒரு சுவையான வரலாறு.
ஒருமுறை தன் முன்னோர் ஸ்ரார்த்தத்துக்குத் தன் குடிலுக்கு உண்ண வருமாறு விஸ்வாமித்ரரை வஸிஷ்டர் அழைத்தார்.
”அதற்கென்ன வந்தால் போச்சு!! ஆனால் 1008 வகை காய்கறி செய்து படைக்க வேண்டும்” என்றார் விஸ்வாமித்ரர்.
உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா?
அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களை சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா?
அப்படியே சமைத்துப்போட்டாலும் அதைச்சாப்பிட யாரால் முடியும்??
விஸ்வாமித்திரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோதான் இப்படிச்செய்கிறார்
என்பது வஸிஷ்டருக்குத் தெரியாதா என்ன ? இருந்தபோதிலும் விட்டுக்கொடுக்காமல்,
“ஆஹா! அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன்” என்றார் வஸிஷ்டர்.
🍂முக்கியக் குறிப்பு - சங்கத்தமிழ் நூல்களில் ஐந்தாறு இடங்களில் அவள் வாழ்த்தப்படுகிறாள். தமிழ்ப்புலவர்கள் ஈராயிரம் ஆண்டுகளாக
அவள் புகழ் பாடுகின்றனர்.
ஸ்ரார்த்த சாப்பாட்டு நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத்துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன. எண்ணிக்கையில் 1008 காய்கறிகள் இல்லை.
விஸ்வாமித்திரர் கோபத்துடன்,
“என்ன இது? 1008 வகை காய்கள் எங்கே?”
என்று வஸிஷ்டரை வினவினார். அவரோ
“நான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே! அவளையே கேட்டுக்கொள்ளுங்கள்” என்றார்.
இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த அருந்ததி, தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தை கூறிவிட்டு,
"இதுதானே ஸ்ரார்த்தகால விதி ?? உங்களுக்கு தெரிந்திருக்குமே!” என்றாள்.
விஸ்வாமித்திரர் வாயடைத்துப்போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுப் போனார். அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம் என்ன?
காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம் |
பனஸம் ஷட் ஸதம்சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே ||
कारवल्लि शतं चैव वज्र वल्लि शतत्रयं |
पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते ||
”ஒரு ஸ்ராத்தத் திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச் சமம், பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச் சமம், பலாப்பழம் 600 காய்களுக்குச் சமம் என்று இப்பாடல் கூறுகிறது.
இனியாவது ஸநாதனத்தையும் முன்னோர் வழியும் வார்த்தையையும் பின்பற்றுவோரை எல்லாம் தெரிந்ததுபோல பேசாமல் இருக்கலாம் அல்லவா??
🍁வாஸவி நாராயணன்🍁

جاري تحميل الاقتراحات...