அன்பெழில்
அன்பெழில்

@anbezhil12

6 تغريدة 7 قراءة Jul 11, 2023
#ஸ்ரீஇராமானுஜர் பிராமணருக்கும் பாகவதருக்கும் உள்ள ஏற்றத்தை பற்றி #முதலியாண்டானிடம் சொன்ன 10 வார்த்தைகள்:
1. நாம் உலகை திருத்த உலகில் உழல வேண்டியுள்ளது. அவர்கள் நாட்டாரோடு இயல்பு ஒழிந்து நாரணனை பற்றலாம்.
2. தெப்பத்தை பிடித்து கொண்டு ஒரு கையில் நீந்துவதை போல் பல திவ்யதேசம்
அலைகிறோம். அவர்கள் ஒரு திவ்ய தேசத்தில் நிலைபெற்று விட்டத்தில் நிற்கின்றனர்.
3. ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வார்க்கும் உள்ள ஏற்றம் போல! கலக்கமும் தேற்றமுமாய் உள்ளோம். அவர்கள் கலக்கமில்லா நற்றவ முனிவர் போல் உள்ளனர்.
4.கடலுக்கும் கரைக்கும் உள்ள ஏற்றம் போல! சம்சார கடலில் சிக்குன்டு
அலைக்கழிந்து துன்பம் அடைகிறேம். அவர்கள் தரையில் இட்ட நங்குரம் பாேல் எம்பெருமானை பற்றி நிலையாயிருப்பர்.
5. மலைக்கும் மடுவுக்கும் உள்ள ஏற்றம் போல! நாம் குடி கோத்ரம் சூத்ரம் ஆயின் திரிகிறோம். அவர்கள் ஜிவாத்மா பரமாத்மா எனமாய் இருப்பர்.
6. கரும்புக்கும் கற்கண்டுக்கும் உள்ள ஏற்றம்
போல! சக்கைக் கடித்து கரும்பை கடித்து பல் முறிவு கொள்வோம். அவர்கள் சகல வேத சாரமாகிய கற்கண்டை சுவைப்பர்.
7. மண்ணுக்கும்விண்ணுக்கும் உள்ள ஏற்றம் போல! இங்கு கிடந்து உழல்கிறேன் என பயப்பட்டு கலங்குவோம். அவர்கள் நம்புவார்கள் பதில் வைகுந்தம் காண்மின் அவன் செய்யன செய்து கொள் என இருப்பர்
8. இரவுக்கும் பகலுக்கும் உள்ள ஏற்றம் போல! வேதத்தின் அந்தகரத்திலே தடுமாறி நிற்ப்போம். அவர்கள் கீதையின் செம்மை பொருளாம் சரம சுலோகத்தில் நிலைபெறுவர்.
9. கல்லுக்கும் இரத்னதிற்கும் உள்ள ஏற்றம் போல! மந்திரத்தை மந்திரதால் மறவாதிரு என காயத்ரி சொல்லி நிற்ப்போம் அவர்கள் மற்றதை விடுத்து
த்வயத்தில் நிலைத்திருப்பர்.
10. பர நாரிக்கும் பதி விரதைக்கும் உள்ள ஏற்றம் போல! நாம் ஆக்நேயாதிகளுக்கு சேஷமாயிப்போம். அவர்கள் அவனை அன்றி எவருக்கும் சேஷனாயிருக்க மாட்டர்.
நாமமே பலம் நாமமே சாதனம்
ராம கிருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

جاري تحميل الاقتراحات...