Muralitharan K
Muralitharan K

@muralijourno

11 تغريدة 14 قراءة Jul 09, 2023
பானகல் அரசர் ராமராய நிங்கர்: சீர்திருத்தவாதியான ஜமீன்தார்
---------------------------
சென்னை மாகாணத்தின் முன்னாள் பிரதமரும் பெரும் சீர்திருத்தவாதியுமான பானகல் அரசர் பி. ராமராய நிங்கரின் பிறந்த நாள் இன்று. பெரும் செல்வந்தர் குடும்பத்தில் 1866ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி... (1/11)
காளகஸ்தியில் பிறந்த ராமராய நிங்கரின் குடும்பத்தினர் காளகஸ்தி அரச குடும்பத்தோடு மண உறவு பூண்டவர்கள்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் மாண்டெகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்த பிறகு, மாகாண சட்டமன்றங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. (2/11)
இந்தத் தேர்தலில் போட்டியிட்ட நீதிக் கட்சி, தனது அறிக்கையிலேயே, எல்லோருக்குமான சம வாய்ப்புகள் குறித்து குறிப்பிட்டது.
இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற நீதிக்கட்சி, 1920 டிசம்பர் 17ஆம் தேதி சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் பதவியேற்றது. (3/11)
அடுத்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சுப்பராயலு ரெட்டியார் உயிரிழந்துவிட்டார். இதற்கடுத்ததாக, பானகல் அரசர் ராமராய நிங்கர் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
அவர் பதவியேற்றவுடன் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான வேலைகள் துவங்கின. (4/11)
அதன் முதல் கட்டமாக Communal GO என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை பனகல் அரசர் தலைமையிலான அரசால் செப்டம்பர் 16, 1921ல் வெளியிடப்பட்டது.
முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை இந்த அரசாணை குறித்துக் குறிப்பிடும்போது,... (5/11)
"தென்னாட்டைப் பொறுத்தவரை கம்யூனல் ஜி.ஓ. திராவிட சமுதாயத்தின், ஏன் - பார்ப்பனர் உள்பட மனித சமுதாயத்தின் சுதந்திர சாசனம் ஆகும். கம்யூனல் ஜி.ஓ. ஒரு மானுட சுதந்திர சாசனம்" என்று குறிப்பிட்டார்.
கல்லூரிகளில் முதல்வர்கள் தங்கள் விருப்பப்படி மாணவர்களை சேர்த்துவந்த நிலையில்... (5/11)
இனிமேல் குழுக்களை அமைத்து, அந்தக் குழுக்கள் மூலமே மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டுமென அரசாணையை (அரசாணை எண் 636/20.05.1922) வெளியிட்டார் பானகல் அரசர்.
உள்ளூராட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகமாக சேர்க்கப்பட வேண்டும் என்றும்.... (6/11)
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் பள்ளியில் படித்தவர்கள் பட்டியலை அனுப்பும்போது பட்டியலின மாணவர்கள் எண்ணிக்கை குறித்த தகவலை அளிக்க வேண்டுமென்றும் கூறும் அரசாணை 1924 பிப்ரவரி 11ல் வெளியிடப்பட்டது.
ஆனால், பானகல் அரசரின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று இந்து சமய அறநிலையத் துறைக்காக... (7/11)
தனிச் சட்டம் கொண்டுவந்ததுதான். Madras Hindu Religious Endowment Act என்ற இந்தச் சட்டம் இவரால் கொண்டுவரப்பட்டு, அடுத்த அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் மிக முக்கியமான முன்னோடிச் சட்டம் இது.
இவரது ஆட்சிக் காலத்தில் வெவ்வேறு துறைகளின் கீழ் பெரும் எண்ணிக்கையில்... (8/11)
பள்ளிகள் துவங்கப்பட்டன. பள்ளி இறுதித் தேர்வுக்கு பட்டியலின மாணவர்கள் பணம் செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அரைச் சம்பளம் கட்டினால் போதுமென உத்தரவிடப்பட்டது. (9/11)
வி.பி. சிங்கைப் போலத்தான் பானகல் அரசரும். ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை தொடர்பாகவே கடைசிவரை சிந்தித்தவர் பானகல் அரசர். (11/11)

جاري تحميل الاقتراحات...