வேதாளன்💀
வேதாளன்💀

@vedhaalan

19 تغريدة 26 قراءة Jul 02, 2023
மாமன்னன்
ஓர் அலசல்🎥
ஜாதி ஆதிக்கத்தின் குறியீடாக வேட்டை நாயும், ஒடுக்கப்பட்டோரின் குறியீடாக பன்றிக்குட்டியும்.
பல்லாண்டுகளாக தொடரும் இந்த ஜாதி/பேத மோதலால், ரத்தம் தோய்ந்த பூமியில் மண்ணாக இருந்தவன் மாமன்னன் ஆவது தான் கதை.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட...(1/19)
மக்களின் விடுதலை உணர்வாக காட்டப்பட்ட வேட்டை நாய் (சிகப்பி), இங்கே ஆதிக்க ஜாதியின் ஏவல் நாயாக காட்சிப் படுத்தப்படுகிறது.
நாய், பன்றி இரண்டுமே சமூகத்தில் கேவலமாக பார்க்கப்படும் விலங்குகள். ஒரு மனிதனை சிறுமைப்படுத்த அவனை நாய் எனவும், பன்றி எனவும் பெரும்பாலான மக்கள்...(2/19)
திட்டுவதில் இருந்தே இதை அறியலாம்.
இப்படிப்பட்ட இரண்டு விலங்குகளை கதையின் இரண்டு பக்க நாயகர்களும் வளர்க்கின்றனர்.
அந்த பக்கம் எதிர்நாயகன்(வில்லன்) வளர்க்கும் நாய்கள், அவனது வெற்று கவுரத்திற்காகவும், வெற்றி பெருமிதத்திற்காகவும் வளர்க்கப்படுகின்றன. அதை தவிர அந்த நாய்களால்...(3/19)
அவனுக்கு எந்தப் பயனும் இல்லை, அந்த நாய்களுடன் எந்த பந்தமும் இல்லை.
அதனால் தான் அவனது கவுரவத்திற்கும், வெற்றி பெருமிதத்திற்கும் பங்கம் ஏற்பட்டால் அடித்தே கொல்லப்படுகின்றன அந்த நாய்கள்.
இந்தப் பக்கம் நாயகன் பன்றிகளை வளர்க்கிறான். பொதுவாக இறைச்சிக்காகவும், பலிக்காகவும்...(4/19)
மட்டுமே பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கே அவன் இறைச்சிக்காகவோ, பலியிடுவதற்காகவோ பன்றிகளை வளர்ப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் அவன் சிறுவயதில் பலியிடுவதில் இருந்து ஒரு பன்றியை தப்புவிக்கிறான்.
அப்படி அவனால் தப்புவிக்கப்பட்ட பன்றி விடுதலை வானேறுவதாக காட்சிப்படுத்தி...(5/19)
இருக்கிறார்கள். அதாவது தனது ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கு விடுதலை வாங்கித் தருவதே நாயகனின் விருப்பம் என்பதே அந்த காட்சியின் குறியீடு.
இப்படி குறியீட்டுக்காக மட்டுமே பன்றி தொடர்புடைய காட்சிகள் படத்தில் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அந்தக் காட்சிகள் படத்தில் எந்த...(6/19)
தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அந்த காட்சிகளை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.
நாயகனாக உதயநிதி கதைக்கேற்ற அளவு நடித்திருக்கிறார். முதலில் இந்த படத்தில் நடித்ததே பாராட்டுக்குரியது.
திருப்பி அடி என்பது தான் அவரது character sketch. அதை படம் முழுக்க சிறப்பாகவே செய்திருக்கிறார்.(7/19)
அடுத்து வைகைப் புயல் வடிவேலுவின் நடிப்பு.
எது நடந்தாலும் "நான் இருக்கேன், நான் பாத்துக்கறேன்" என்று சொல்லி சொல்லியே அனைத்தையும் மண் (பூமி) போல பொறுமையாக deal செய்யும் character.
அதை நன்றாகவே செய்திருக்கிறார். ஒரு இடத்தில் கூட பழைய காமெடியன் வடிவேலுவோ, தேவர் மகன்...(8/19)
இசக்கியோ நம் கண்ணுக்கு தெரியவில்லை. மாமன்னனாகவே வாழ்ந்து இருக்கிறார்.
அதுவும் அந்த மலை உச்சியில் இயலாமையால் கண் கலங்கி அழும் காட்சியில், நம்மையும் அழ வைத்து விடுகிறார்.
அடுத்து பகத் பாசில்.
கொஞ்சம் பொறுமையாகவே நகரும் திரைக்கதையில் பகத் பாசிலின் நடிப்பும் கேரக்டரும்...(9/19)
மட்டுமே நம்மை தொய்வடையாமல் படத்தை பார்க்க வைக்கிறது.
நாயை அடிக்கற மாதிரி அடிச்சி கொன்னுடுவேன் எனும் கொலை மிரட்டலில் உள்ள வன்மத்துக்கு ஒரு உருவம் கொடுக்க முடியும் என்றால் அதை பகத் பாசிலால் மட்டுமே கொடுக்க முடியும். மனுஷன் calm and cruel villain ஆக நடிப்பில் பின்னி பெடல்...(10/19)
எடுத்து இருக்கிறார்.
படத்துக்கு மிகப்பெரிய பலமே மாரி செல்வராஜின் வசனங்கள். நறுக்குத் தெறித்தாற் போல பல பன்ச் வசனங்கள் படம் முழுதும்.
அயோக்கியத்தனத்துக்கும் கோழைத்தனத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தும் வசனம். முதல் முறையாக உதயும், கீர்த்தியும் பேசிக் கொள்ளும் வசனம்,(11/19)
ஜாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் வசனங்கள் என நிறைய ஆழமான hard hitting வசனங்கள் படம் முழுக்க நிறைய இருக்கு.
ஆனால் அந்த வசனங்கள் வரும் காட்சிகளுக்கு கிடைக்கும் விசில், கைத்தட்டலை விட ஜாதி ஆதிக்கத்தை அடித்து நொறுக்கும் காட்சிகளுக்கு தான் தியேட்டரில் கைத்தட்டல், விசில் பறக்கிறது.(12/19)
படத்தில் சில குறைகளும் இருக்கின்றன. நிறைய கேள்விகளும் எழுகின்றன.
ஜாதிக் கலவரம் நிகழ வாய்ப்புள்ள பதட்டமான தனி தொகுதியில் தேர்தல் நடக்க இருக்கும் போதும், அரசியல் எதிரிகளால் பழிவாங்கப் படும் வாய்ப்பும் இருக்கும் போது அந்த தொகுதியின் ஆளுங்கட்சி MLA வுக்கு ஒரு போலீஸ்...(13/19)
பாதுகாப்பு கூடவா கொடுக்காமல் இருக்கும் ஒரு ஆளும் கட்சி?
எந்த ஜாதி சங்கத்தில் தனது சொந்த ஜாதிக்காரனையே காலில் விழ வைப்பான்? அவனை விட கீழ் ஜாதிக்காரனாக நினைப்பவனை வேண்டுமானால் விழ வைப்பானே தவிர சொந்த ஜாதிக் காரனை அல்ல. அதுவும் அரசியல் செல்வாக்கும், பண பலமும் உள்ளவனை அல்ல.(14/19)
ஒரு ஜாதி சங்கத் தலைவனை அடித்தே கொன்று விட்டு அவனது இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டு கலவரம் செய்கிறான் வில்லன்.
யார் அந்த ஜாதி சங்கத் தலைவனை கொன்றது? அவன் எப்படி இறந்தான் என்ற கேள்வியை கூடவா அந்த தலைவனை சேர்ந்தவர்கள் யாரும் கேட்கவில்லை?
இப்படி நிறைய கேள்விகள் எழுகிறது.(15/19)
மாமன்னனை கொல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், இன்னிக்கு அந்த பக்கம் 4 உசுராவது போகணும் என நாய்களை அவிழ்த்து விட்டு பன்றிகளை கொல்கிறான் ரத்னவேல்.
அதாவது, ஒடுக்கப்பட்ட மாமன்னனின் உயிரை பன்றியின் உயிரை போல துச்சமாக பார்க்கிறான் அவன். அப்படியும் ஒரே ஒரு பன்றிக்குட்டி மட்டும்...(16/19)
வேட்டை நாய்களிடம் இருந்து தப்பி பிழைக்கிறது.
இறுதியில் மாமன்னனிடம் தோற்ற கோபத்தில், தான் வளர்த்த வேட்டை நாய்களை சுட்டுக் கொல்கிறான் அவன். ஆனால் எல்லா நாய்களையும் அவனால் கொல்ல முடிவதில்லை. அவன் வளர்த்த வேட்டை நாய்கள் அவனிடம் தப்பி திசைக்கொன்றாக சிதறி ஓடி மறைந்து விடுகிறது.(17/19)
அதாவது, ஆதிக்க ஜாதி இங்கே தோற்றாலும் அது வளர்த்து விட்ட வேட்டை நாய்கள் சமூகத்தில் கலந்து விட்டன. அது எப்போது வேண்டுமானாலும் கடிக்கும்.
அதே சமயம், ஆதிக்க ஜாதியிடம் இருந்து தப்பி பிழைத்த ஒற்றைப் பன்றிக்குட்டிக்கும் சமூகநீதி எனும் உரிமையின் மூலம் அங்கீகாரம் கிடைக்கும் என...(18/19)
யதார்த்தத்தையும் குறியீடாக காட்சிப்படுத்தி முடிகிறது படம்.
நீயே ஒளி! நீயே வழி! என ஐயா வைகுண்டர் வழியையும், பொட்டி பகடையான் எனும் கிராம தெய்வத்தையும், சமூகநீதியையும் இன்றைய 2k kidsக்கு அறிமுகம் செய்ததில் வெற்றி கண்டிருக்கிறது இந்தப் படம்👍🙏(19/19)

جاري تحميل الاقتراحات...