👁️ 🌹👁️
👁️ 🌹👁️

@malarvili1998

10 تغريدة 5 قراءة Jun 27, 2023
#கட்டிடங்களின்_கதை 20
செங்கோட்டை குயிலான் பாதையில் உள்ள 13 வளைவு பாலம் இது
1900 முன் அமைக்கப்பட்ட மீட்டர் கேஜில் சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பாதை இதுதான்.
திருவிதாங்கூர் மகாராஜா மதுரைக்கும் மேலும் திருச்சிரப்பள்ளிக்கும், மெட்ராஸுக்கும் ரயில் இணைப்பை
ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்: ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தென்னிந்திய இரயில்வேயிடம் அந்தப் பாதை ஒப்படைக்கப்பட்டது!
மதுரையிலிருந்து செங்கோட்டை மற்றும் குயிலான் வழியாக செல்லும் பாதை மேற்கு தொடர்ச்சி மலையை கடக்க வேண்டும்.
ஆரியங்காவு கணவாய் பகுதியில் ரயில் கடக்கும் படம் இது
1873-ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை பணிகள் 27 ஆண்டுகள் நடைபெற்றது. இப்பாதையை அமைத்திட தென்னிந்திய ரயில்வே கம்பெனி ரூபாய் 17 லட்ச ரூபாயும், திருவாங்கூர் நிர்வாகம் ரூபாய் 7 லட்ச ரூபாயும், அப்போதைய திருவாங்கூர் திவான் ராமய்யர் ரூபாய்
6 லட்சம் ஆக ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் தொடங்கப்பட்டு 1901-ம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு 1902 ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது
முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து 1904-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்லம் ரயில் நிலையத்தில் வைத்து 21 குண்டுகள்
முழங்கிட ரயில் நிலைய #மேலாளர்_ராமைய்யா, முதல் பயணிகள் ரயிலை கொல்லத்தில் இருந்து செங்கோட்டைக்கு கொடியசைத்து துவங்கி வைத்தார்
முதல் முதலாக தனியார் - அரசு கூட்மைப்பில் உருவான ரயில் வழித்தடம் இதுதான். பாதை அமைப்பதில் எழுந்த பிரச்சனைகள் பல. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பணிசெய்தவர்கள்
மிருகங்களால் தாக்கபட்டனர். திட்டமிட்டபடி சிறிய மலைகளை குடைந்து குகைகள் அமைப்பது எளிதாக இல்லை. அந்த மலைக்குகைகளின் பக்கவாட்டு சுவர்கள் சரிந்து பாதையை மூடிவிடும் அபாயமிருந்தது. 4 மலைக்குகைகள், 5 பெரிய பாலங்கள், 120 சின்ன சின்னப்பாலங்கள் என்று பயணிக்கும் இந்த ரயில் பாதையின் இரு .
பரவிக்கிடக்கும் பசுமைக்காடு. பகவதிபுரம்- ஆரியங்காவு ஸ்டேஷ்ன்களுக்கிடையே 1 கிமீ நீண்ட குகைப்பாதை என திகிலூட்டும் வழித்தடம்
அந்த ரயிலின் பெயர் #தூமசகடசூரன். சில மாதங்களுக்கு பின் ரயில் தென்மலை- கழுதுருட்டி இடையே குகையில் மண் சரிவு ஏற்பட்டு பயணிகளோடு மண்ணோடு மண்ணாகி புதைந்தது.
அதன்பின் அருகிலேயே 13 கண் கொண்ட பிரமண்டமான பாலத்தை கட்டினர். அப்பாலம் வழியே ரயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இரும்பு கர்டர்களை உபயோகிக்காமல் கட்டபட்ட இந்தப் பாலம் அன்றைய தொழில்நுட்பங்களில் மிகப்பெரிய சவாலாகும்.
இரண்டே ஆண்டுகளில் செங்கோட்டை வரை பாதை அமைக்கும் பணி முடிந்தது.
300 அடி முதல் 500 அடி நீளமுள்ள சிறு மலைக்குகைகளை ரயில் கடக்கும்போது இடப்புறம் திரும்பி பார்த்தால் எவ்விதமான தகவல் தொடர்பும் அற்ற ஆங்கிலேயரின் பிரம்மாண்டமான செயல்திட்டமும், இருமாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பும், தியாகமும் பறை சாட்டுவது தெரியும்.
தென்காசி - கொல்லம் ரயில் பாதை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட பின் வனப்பகுதியை சுத்தம் செய்ய ஆட்கள் இன்றி தவித்த ஆங்கிலேயர்கள் அப்பகுதிகளில் வெள்ளி காசுகளை அள்ளி வீசி தகவலை மக்களிடம் பரப்பியுள்ளனர். தொடர்ந்து மக்கள் காடுகளை சுத்தம் செய்து காசுகளை பொறுக்கினர். பாதை உருவானது

جاري تحميل الاقتراحات...