👁️ 🌹👁️
👁️ 🌹👁️

@malarvili1998

5 تغريدة 102 قراءة Jun 17, 2023
#கல்கத்தா__லண்டன்_பேருந்து
படத்தை பார்த்து ஆச்சரியப்பட வேண்டாம்.
ஒரு காலத்தில் இந்த பேருந்து சேவை இருந்தது என்பது உண்மைதான்
அப்போது உலகின் மிக நீளமான சாலை கல்கத்தாவிலிருந்து லண்டன் வரை இருந்தது
எனவே கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு பஸ்ஸில் செல்ல சாத்தியமானது
இந்தியன் அல்லது ஆங்கில கம்பெனி அல்ல, ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த ஆல்பர்ட் டூர் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கிய சேவை.
1950களின் முற்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நீடித்தது, சில காரணங்களால் அதை மூட வேண்டியிருந்தது. பேருந்து கட்டணம் 85 - 145 பவுண்டுகள்
கொல்கத்தாவில் தொடங்கி பனாரஸ், அலகாபாத், ஆக்ரா, டெல்லி, லாகூர், ராவல்பிண்டி, காபுல், கந்தர், தெஹ்ரான், இஸ்தான்புல் முதல் பல்கேரியா, யூகோஸ்லாவியா, வியன்னா மேற்கு ஜெர்மனி, பெல்ஜியம் வழியே, சுமார் 20300 கிமீ ஓடி 11 நாடுகளைக் கடந்தது
இந்த பேருந்து லண்டனை சென்றடையும்.
உலகின் மிக நீளமான இந்த பேருந்து சேவை கல்கத்தா வரும் நாள்களில் பத்திரிகைகளில் செய்தியாகவே வெளியிடப்பட்டன.
இதோ அக்காலத்தில் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகை
அது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது
இவையெல்லாம் வரலாற்றில் இருந்து எப்படி விடுபட்டன?
இது குறித்து ஆல்பர்ட் டூர் கம்பெனி வெளியிட்ட விளம்பரத்தில் தங்குமிடம் உணவு உள்ளிட்ட கட்டணம் 145 பவுண்ட் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்காலத்தில் கப்பல் கட்டணத்தை விட இது சற்று அதிகம் தான்.
இருந்தாலும் 25 ஆண்டுகள் வெற்றிகரமாக இதனை நடத்தி இருக்கிறார்கள்

جاري تحميل الاقتراحات...